வெங்காயத்தைப் பொடியாக நறுக்க இப்படி ஒரு ஐடியா உள்ளதா? இத்தனை நாட்களாக இது தெரியாமல் நேரத்தை வீணடித்து விட்டோமே!

onion

பெண்களுக்கு சமையல் அறையில் இருக்கக் கூடிய சிக்கலான வேளைகளில் இந்த வெங்காயம் நறுக்குவதும் ஒன்று. வெங்காயத்தை நறுக்கும் போது, கண்களில் தண்ணீர் வரும். இது ஒரு பக்கம் இருக்க, சிலருக்கு என்னதான் முயற்சி செய்தாலும் வெங்காயத்தை நீளவாக்கில் பொடியாக வெட்ட முடியாது. அதே சமயம் மிகவும் பொடியாகவும் துண்டு துண்டாக வெட்டுவதற்கும் சிரமப்படுவார்கள். வெங்காயத்தைப் பொடியாக நறுக்க உங்களுக்காக ஒரு சில சின்னச் சின்னப் டிப்ஸை தான், இந்த பதிவின் மூலம் நாம் பகிர்ந்து கொள்ளப் போகின்றோம். வெங்காயத்தை இனி கஷ்டப்படாமல் நறுக்க என்ன வழி, தெரிஞ்சுக்கலாம் வாங்க.

onion1

முதலில் வெங்காயத்தை வெட்டுவதற்கு முன்பாக தண்ணீரில் போட்டு, நன்றாக அலசி, தோலை உரித்து விட வேண்டும். அதன் பின்பு தண்ணீரில் போட்டுவிட்டு, மீண்டும் எடுத்து வெட்டும் பட்சத்தில் கண்களில் இருந்து வழியும் தண்ணீரின் அளவு குறையும். கண் எரிச்சல் குறையும்.

முதலில் நீளவாக்கில் எப்படி நைஸாக கட் பண்ணுவது என்பதை தெரிந்து கொள்வோம். முதலில் வெங்காயத்தின் தோலை உரித்து விட்டு, தண்ணீரில் நன்றாக கழுவி விட்டு, வெங்காயத்தை இரண்டு துண்டுகளாக வெட்டிக் கொள்ளுங்கள். இப்போது வெங்காயத்தின் மேல் பக்கத்தில் காம்பு இருக்கும். அதையும் நீக்கி விட வேண்டும். அந்த காம்பு இருந்தால் வெங்காயம் லேயர் லேயராக தனித்தனியாக வராது. காம்பில் மொத்தமாக ஒட்டியிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

onion2

பெரும்பாலும் எல்லோருடைய வீடுகளிலும் சிப்ஸ் கட்டை என்று சொல்லப்படும், துருவல் கட்டை கட்டாயம் இருக்கும். இதில் உருளைக்கிழங்கு சிப்ஸை போட பயன்படுத்தும் இடத்தில், வெங்காயத்தை லேசாக துருவினால் போதும். வெங்காயம் நீளவாக்கில் நைஸாக நமக்கு கிடைத்துவிடும்.

- Advertisement -

குறிப்பாக பிரியாணிக்கு, தயிர் பச்சடி போடுவதற்கு இப்படி பலவகையான சமையலுக்கு வெங்காயத்தை நீளவாக்கில் தான் நாம் வெட்டுவோம் அல்லவா? இப்படி துருவி கொள்ளும் பட்சத்தில், வெங்காயம் சீக்கிரமாகவே நீளவாக்கில் பொடியாக கட்டாகிவிடும். ட்ரை பண்ணி பாருங்க.

onion3

சரி, சில குழம்பு வகைகள் வைப்பதற்கு வெங்காயத்தை மிகவும் பொடியாக வெட்ட வேண்டியதாக வேண்டும். குறிப்பாக தொக்கு செய்ய வேண்டும் என்றாலும், அசைவம் சாப்பிடுபவர்களாக இருந்தால், கறி குழம்பு வைக்க, கிரேவி வைக்க வேண்டும் என்றாலும், வெங்காயம் பொடியாக நறுக்கினால் தான் நன்றாக இருக்கும். இதற்கு முதலில் வெங்காயத்தின் தோலை உரித்து கொள்ள போகிறீர்கள். அதன் பின்பு தண்ணீரில் போட்டு வெங்காயத்தை நான்கைந்து பெரிய பெரிய துண்டுகளாக வெட்டி வைத்துக் கொள்ளுங்கள்.

coconut

அதன்பின்பு மிக்ஸி ஜாரில் போட்டு மிக்ஸியில் பல்ஸ் பட்டன் அல்லது ரிவர்ஸ் பட்டன் இருக்கும் இதை விட்டுவிட்டு இரண்டு மூன்று முறை ஓட விட்டாலே போதும். வெங்காயம் பொடிப் பொடியாக நறுக்கி நமக்கு கிடைத்துவிடும். மிக்ஸியை ஓட விட்டுவிடாதீர்கள். வெங்காயம் அரைந்துவிட்டால் தண்ணீர்விட்டு வீணாகிவிடும்.

coconut1

இதேபோல் தான், தேங்காயை சில பேருக்கு துருவ வேண்டும் என்றாலே ரொம்பவும் கஷ்டமாக இருக்கும். தேங்காய் மூடியில் இருந்து தேங்காய் பத்தையை, நீள்வாக்கில் போட்டுக் கொள்ள வேண்டும். நீளம் நீளமாக உள்ள தேங்காய் துண்டுகளை, தேவைப்பட்டால் மேலே இருக்கும் கறுப்பு தோலை நீக்கி விட்டு, அதன் பின்பு மிக்ஸி ஜாரில் போட்டு இரண்டு அல்லது மூன்று முறை விட்டு விட்டு ரிவர்ஸ் பட்டனில் ஓட விட்டு எடுத்தால், சூப்பரான தேங்காய் துருவல் கிடைத்துவிடும். இதை காற்று புகாத டப்பாவில் போட்டு, ஃப்ரீசரில் வைத்து விட்டால் 10 நாட்கள் வரைகூட சமையலுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம். கெட்டுப்போகாது. உங்களுக்கு இந்த ஈஸி டிப்ஸ் பிடித்திருந்தால் உங்க வீட்லயும் ட்ரை பண்ணி பாருங்க.

இதையும் படிக்கலாமே
தொடர்ந்து 48 வாரங்கள் இந்த தீபத்தை ஏற்றினால் போதும். கடன் என்ற வார்த்தைக்கே உங்கள் வாழ்க்கையில் இடம் இல்லை. எவ்வளவு பெரிய கடனையும் சீக்கிரம் அடைச்சிடுவீங்க!

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.