வெங்காய புதினா சட்னி செஞ்சு இருக்கீங்களா? செம டேஸ்டியான இந்த சட்னியை இதே மாதிரி நீங்களும் செஞ்சு பாருங்க 10 இட்லி கூட பத்தாது!

onion-mint-chutney
- Advertisement -

வெங்காய சட்னி, புதினா சட்னி என்று தனித் தனியாக செய்து பார்த்திருப்போம் ஆனால் இரண்டையும் ஒன்றாக சேர்த்து ஒரு முறை வெங்காயம புதினா சட்னி இதே மாதிரி நீங்களும் செஞ்சு பாருங்க, ரொம்பவே ருசியாக இருக்க கூடிய இந்த சட்னிக்கு தக்காளி எதுவும் சேர்க்க வேண்டியது இல்லை. வித்தியாசமான சட்னி வகைகளில் அதிக சுவை கொடுக்கக் கூடிய இந்த வெங்காயம் புதினா சட்னி ரொம்ப எளிதாக எப்படி செய்வது? என்பதை தான் இந்த பதிவின் மூலம் நாம் அறிந்து கொள்ள இருக்கிறோம்.

வெங்காய புதினா சட்னி செய்ய தேவையான பொருட்கள்:
சின்ன வெங்காயம் – 15, புதினா – ஒரு கைப்பிடி, மல்லித்தழை – ஒரு கைப்பிடி, பூண்டு பற்கள் – 4, இஞ்சி – ஒரு துண்டு, வர மிளகாய் – 5, புளி – சிறிதளவு, உளுத்தம் பருப்பு – ஒரு டேபிள்ஸ்பூன், கடலை பருப்பு – 1 டீஸ்பூன், சமையல் எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன், தாளிக்க: கடுகு – அரை டீஸ்பூன், உளுந்து – அரை டீஸ்பூன், கறிவேப்பிலை – ஒரு கொத்து, வர மிளகாய் – ஒன்று.

- Advertisement -

வெங்காயம் புதினா சட்னி செய்முறை விளக்கம்:
முதலில் சின்ன வெங்காயத்தை எடுத்து தோலுரித்து முழுதாக அப்படியே வைத்துக் கொள்ளுங்கள். சின்ன வெங்காயம் இல்லை என்றால் பெரிய வெங்காயம் 2 எடுத்து தோலுரித்து நான்கைந்தாக வெட்டி வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் தேவையான எல்லாப் பொருட்களையும் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். புதினா இலைகளை சுத்தம் செய்து வைத்துக் கொள்ளுங்கள், மல்லி இலைகளையும் சுத்தம் செய்து அலசி உலர வைத்துக் கொள்ளுங்கள்.

பின்னர் அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு வாணலியை வையுங்கள். அதில் ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெய் விட்டு நன்கு காய விடுங்கள். பின்னர் உளுத்தம் பருப்பு மற்றும் கடலைப் பருப்பு சேர்த்து லேசாக வறுத்துக் கொள்ளுங்கள். பருப்பு வகைகள் பொன்னிறமாக வறுபட்டதும் இஞ்சித் துண்டை தோல் நீக்கி சுத்தம் செய்து சேர்த்துக் கொள்ளுங்கள். பூண்டு எந்த அளவுக்கு இருக்கிறதோ, அந்த அளவிற்கு இஞ்சித் துண்டுகள் சேர்த்தால் போதும்.

- Advertisement -

பின்னர் பூண்டு பற்களை தோலுரித்து சேர்த்துக் கொள்ளுங்கள். இவற்றை லேசாக வதக்கிய பின்பு காய்ந்த மிளகாய் காம்பு நீக்கி சேர்த்து வதக்கிக் கொள்ளுங்கள். வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்கி விட வேண்டும். வெங்காயம் முக்கால் பதம் வதங்கியதும் சுத்தம் செய்து எடுத்து வைத்துள்ள புதினா இலைகள் மற்றும் மல்லித் தழைகளைச் சேர்த்து வதக்க வேண்டும். புதினா இலைகள் நன்கு சுருள வதங்கியதும், புளிப்பு சுவைக்கு சிறு நெல்லிக்காய் அளவு புளியை உருட்டி சேர்த்துக் கொள்ளுங்கள்.

பின்னர் தேவையான அளவிற்கு உப்பு சேர்த்து நன்கு வதக்கி விட்டு அடுப்பை அணைத்து ஆற விட்டு விடுங்கள். நன்கு ஆறிய பின்பு ஒரு மிக்ஸி ஜாரை கழுவி எடுத்துக் கொள்ளுங்கள். அதில் இவற்றை சேர்த்து நைசாக இல்லாமல் கொரகொரவென்று அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். பின்பு இதற்கு ஒரு சிறு தாளிப்பு கொடுக்க வேண்டியது தான்! தாளிப்பு கரண்டியில் ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெய் விட்டு நன்கு காய விடுங்கள். கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, வர மிளகாய் ஒன்றைக் கிள்ளி சேர்த்து தாளித்து சட்னியுடன் கொட்டி இறக்கினால், சுவையான வெங்காய புதினா சட்னி ரொம்பவும் சுலபமாக தயார்! இதே மாதிரி நீங்களும் செய்து பார்த்து அசத்துங்கள்.

- Advertisement -