இந்த 5 விஷயம் தெரிஞ்சா இனி வெங்காய தோலை தூக்கி எரியவே மாட்டீங்க! பத்திரமா ஃப்ரிட்ஜில் ஸ்டோர் பண்ணி வச்சிப்பிங்க!

onion-peel
- Advertisement -

இயற்கையாக கிடைக்கும் எந்த ஒரு பொருளுக்கும் சத்துகளும், சக்திகளும் அதிகம். இயற்கை ஒரு விஷயத்தைப் பாதுகாக்க மேற்புறமாக ஓடு, தோல் போன்ற ஏதாவது ஒரு அமைப்பை கொடுத்திருக்கும். இது தாவரங்களுக்கு மட்டுமல்ல, விலங்குகளுக்கு கூட இத்தனை பாதுகாப்பு அம்சங்கள் உண்டு. நத்தை, ஆமை போன்றவை தன்னை எதிரிகளிடமிருந்து பாதுகாத்துக் கொள்ள மேற்புற ஓட்டுக்குள் ஒளிந்து கொள்ளும். அது போல இயற்கையாக கிடைக்கக் கூடிய காய்கறி பழங்களுக்கு இருக்கும் மேல் புற தோல்களுக்கு அதிக சத்துக்கள் உண்டு. அந்த வகையில் வெங்காயம் தோலை வைத்து என்ன செய்யலாம்? என்பதை இந்த பதிவின் மூலம் சில குறிப்புகளாக காண்போம் வாருங்கள்.

நாம் அனுதினமும் சமைக்கும் சமையலில் முக்கிய பங்கு வகிப்பது வெங்காயம் ஆகும். அதிகமாக பயன்படுத்தும் வெங்காயத்தின் உடைய தோல் பகுதியை பெரும்பாலும் தேவையில்லை என்று தூக்கி எறிந்து விடுகிறோம். ஆனால் அதில் எண்ணற்ற சத்துக்கள் உள்ளன. வெங்காய தோலில் அதிகப்படியான ஆன்டி-ஆக்சிடன்ட்கள் மற்றும் anti-inflammatory காணப்படுகின்றன அதே போல் விட்டமின் A, C, E ஆகியவையும் நிறைந்துள்ளன. எனவே இவற்றிலிருந்து நமக்கு கிடைக்கக்கூடிய வேறு வகை பயன்பாடுகள் தெரிந்தால் கண்டிப்பாக தோலை தூக்கி எறிய மாட்டோம். நீங்கள் தோலுரித்த பின் தனியாக ஒரு பாலித்தீன் பையில் போட்டு பிரிட்ஜில் ஸ்டோர் செய்து வைத்துக் கொள்ளுங்கள். உங்களுக்கு தேவையான பொழுது எடுத்து பயன்படுத்திக் கொள்ளலாம்.

- Advertisement -

Tip 1:
உங்களுடைய செடி, மர வகைகள் எதுவாக இருந்தாலும் எளிதில் மக்க கூடிய இந்த வெங்காய தோலை சுற்றிலும் போட்டு விடுங்கள். விரைவாக மக்கும் தன்மையுள்ள வெங்காயத் தோல் செடிகளுக்கு நல்ல ஊட்டச் சத்தாக இருக்கும். காய்கறி செடிகளுக்கு இது போல் போட்டு வந்தால் நிறைய காய்கறிகள் கொத்துக் கொத்தாக காய்க்கும்.

onion-peel1

Tip 2:
சிறிதளவு தண்ணீரை நன்கு கொதிக்க வையுங்கள். அதில் இந்த வெங்காய தோல்களை ஒரு கைப்பிடி அளவுக்கு சேர்த்து நிறம் மாறும் வரை நன்கு கொதிக்க விடுங்கள். வெங்காய தோலில் இருக்கும் சாறு நீரில் இறங்கி நீரின் நிறம் சிவப்பாக மாறும். அந்த நேரத்தில் அடுப்பை அணைத்து வடிகட்டிக் கொள்ளுங்கள். இந்த தண்ணீர் தலைமுடிக்கு நல்ல ஆரோக்கியத்தை கொடுக்கும். வேர்க்கால்களில் படும்படியாக தலை முழுவதும் தடவி வைத்திருந்து முப்பது நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் அலசினால் தலைமுடி உதிரும் பிரச்சனை விரைவாக தீரும்.

- Advertisement -

Tip 3:
நீங்கள் க்ரீன் டீ அல்லது டீ பேக்ஸ் பயன்படுத்துபவர்களாக இருந்தால் சிறிதளவு வெங்காய தோல்களை ஒரு பௌலில் போட்டுக் கொள்ளுங்கள். அதில் கொதிக்கும் தண்ணீரை ஊற்றி 15 நிமிடம் ஊற வைத்து பின்னர் வடிகட்டி அதனுடன் டீ பேக் போட்டு குடித்தால் பிரமாதமான தூக்கம் வருமாம். அதிலிருக்கும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் மூளையை தளர்வு செய்து தூக்கத்தை வரவழைக்கும். சாதாரண டீயும் செய்து குடிக்கலாம்.

onion-peel-tea

Tip 4:
நீங்கள் ஹேர் டை பயன்படுத்துபவராக இருந்தால் இதனை முயற்சி செய்து பார்க்கலாம். இயற்கையாகக் கிடைக்கக் கூடிய இந்த வெங்காயத் தோல்களை சிறிதளவு எடுத்து சுடு தண்ணீரில் ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். அதன்பின் இரவு முழுவதும் அப்படியே குளிர விட்டு பின்னர் மறுநாள் காலையில் அதை வடிகட்டி தலை முழுவதும் தடவி 30 நிமிடங்களுக்கு ஊற வைக்கவும். பின்னர் கூந்தலை அலசினால் தங்க பழுப்பு(golden brown ) நிறமாக மாறி கூந்தலை பட்டுப் போல ஜொலிக்க வைக்கும்.

onion-peel2

Tip 5:
உடம்பில் நமைச்சல் அரிப்பு போன்ற தொந்தரவுகள் இருக்கும் பொழுது வெங்காய தோலை தண்ணீரில் ஊற வைத்து அந்த தண்ணீரை தடவி வந்தால் நல்ல நிவாரணம் கிடைக்கும். வெங்காய தோலில் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் நிறைந்துள்ளன. எனவே நம் புண்கள் மீது anti-fungal ஆக செயல்படும்.

- Advertisement -