முகத்தில் இருக்கும் குழிகளை உடனடியாக மறைக்க இதை விட சுலபமான வழி வேறு எதுவும் இல்லை! மிஸ் பண்ணாம இதை மட்டும் ட்ரை பண்ணி பாருங்க. செம்ம ரிசல்ட் கிடைக்கும்.

open-porse

நிறைய பேருக்கு முகத்தில் ஆங்காங்கே குழி குழியாக இருக்கும ஆங்கிலத்தில் இதை open pores என்று சொல்லுவார்கள். இதை சரி செய்வதற்கு என்ன தான் முயற்சி எடுத்தாலும், அந்த குழியை சரி செய்யவே முடியாது. முகத்தின் அழகை அந்த அளவிற்கு கெடுக்கும் குழிகளை இயற்கையான முறையில், மிக மிக சுலபமாக எப்படி மறையச் செய்யலாம் என்பதை பற்றிதான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். இந்த டிப்ஸ் ட்ரை பண்ணி பாருங்க. ட்ரை பண்ணாம இதனால சரியாகுமா? என்று நினைத்து விட்டு விடாதீர்கள். முகத்தில் இருக்கும் அந்த சிறிய ஓட்டை மெதுமெதுவாக சுருங்குவதை நீங்களே பார்க்க முடியும். சரி நேரடியாக குறிப்புக்கு செல்வோம்.

முகத்தில் உள்ள குழிகளை சரி செய்ய நம் பயன்படுத்தப் போகும் பொருள் இரண்டு. ஒன்று கடுக்காய், இரண்டாவது பொருள் முல்தானிமெட்டி பொடி. முதலில் 1 கடுக்காயை மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ளலாம். அப்படி இல்லை என்றால் ஒரு சிறிய உரலில் வைத்து நன்றாக நசுக்கியும் கொள்ளலாம். அடுப்பில் 1/2 கப் அளவு தண்ணீரை ஊற்றி, இந்த கடுக்காய் பொடியை போட்டு நன்றாக கொதிக்கவிடுங்கள்.

1/2 கப் தண்ணீர், 1/4 கப் ஆகும் வரை கொதிக்க வேண்டும். அதன் பின்பு இதில் இருக்கும் கடுக்காய்களை வடிகட்டி தண்ணீரை மட்டும் எடுத்துக் கொள்ளுங்கள். அந்த தண்ணீர் நன்றாக ஆற வேண்டும். ஒரு சிறிய கிண்ணத்தில் 2 ஸ்பூன் முல்தானி மெட்டி பொடியை போட்டு, இந்த கடுக்காய் தண்ணீரை ஊற்றி பேஸ்ட் போல் கலந்து கொள்ள வேண்டும்.

multhani-mitti

இப்போது நமக்குத் தேவையான பேக் ரெடி ஆகிவிட்டது. இதை உங்களுடைய முகம் முழுவதும் பேக் போல போட்டுக் கொள்ள வேண்டும். 20 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த தண்ணீரில் கழுவி விடுங்கள். வாரத்தில் 3 நாட்கள் ஒரு நாள் விட்டு ஒரு நாள் இந்த பேக்கை கட்டாயம் பயன்படுத்த வேண்டும்.

மொத்தமாக 30 நாட்களில் உங்களுடைய முகத்தில் இருக்கும் குழிகள் பாதி அளவு மூடுவதை உங்களால் நிச்சயம் உணர முடியும். இது ஒரு சேலஞ்ச் என்றே சொல்லலாம். தொடர்ந்து மூன்று மாதங்கள் பயன்படுத்தினால் முகத்தில் இருக்கும் குழி காணாமல் போவது என்பது ஒரு துளி அளவும் சந்தேகமே கிடையாது.

open-porse2

பொதுவாகவே ஆயில் ஸ்கின் உள்ளவர்களுக்கு தான் இந்த முக குழிகள் ஏற்படும். சில பேருக்கு முகப்பரு வந்த இடங்கள் குழிகளாக மாறி விடும். இந்த பேக்கை பயன்படுத்தி வருவதன் மூலம் எண்ணெய் வடிவது குறைக்கப்படும். அதேசமயம் முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள் பிக்மென்ட்டேசன் போன்ற பல பிரச்சனைகளில் இருந்து நல்ல தீர்வு கிடைக்கும். உங்க open pores காணாமல் போக 100% கேரண்டீ. நல்ல ரெமிட்டிங்க இது. ட்ரை பண்ணி பாருங்க.