கரடு முரடாக இருக்கும் உங்கள் கண்ணத்தை பட்டுப் போல தொட்டாலே வழுக்கிக் கொண்டு போகும் அளவிற்கு மாற்ற வீட்டில் இருக்கும் இந்த 3 பொருட்களை இப்படி செய்யுங்கள்!

open-pores
- Advertisement -

சிலருக்கு முகம் முழுவதும் நன்றாக இருந்தாலும் இரு புறங்களில் இருக்கும் கண்ணங்களில் முத்து முத்தாக முகப்பருக்களும் அல்லது கரும்புள்ளிகளும் பாடாய் படுத்தி எடுக்கும். அதனுடைய வடு காலப்போக்கில் குழிகளாக மாறி குழி குழியாக தோற்றமளிக்கும். இந்தக் முகக் குழிகளை நீங்கள் மறைய செய்ய என்ன பயன்படுத்தினாலும் அந்த அளவிற்கு பலனளிக்காமல் போய் இருக்கலாம்! அத்தகையவர்கள் உங்களுடைய கரடுமுரடான கண்ணத்தை பட்டு போல தொட்டாலே வழுக்கிக் கொண்டு போகும் அளவிற்கு மாற்றுவதற்கு என்ன செய்ய வேண்டும்? என்பதைத் தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளவிருக்கிறோம்.

தொட்டாலே வழுக்கி கொண்டு போகும் கண்ணம் பெற முதலில் பயத்தம் பருப்பு மாவு தேவை. பயத்தம் பருப்பை வெயிலில் உலர்த்தி மிஷினில் கொடுத்து அரைத்து வைத்துக் கொண்டால் இதை எப்பொழுதும் முகத்திற்கு மட்டும் சோப்புக்கு பதிலாக பயன்படுத்திக் கொள்ள உதவும். சோப்பு பயன்படுத்துவதை காட்டிலும் முகத்திற்கு பயத்தமாவு மட்டும் பூசிக் கொண்டு வந்தால் முகத்தில் எந்த விதமான மாசுகளும் இன்றி சரும நோய்கள் அண்டாமல் ரொம்பவே பாதுகாப்பாக பட்டு போல ஜொலிக்கும்.

- Advertisement -

இப்படி குழி குழியாக இருக்கும் கண்ணம் உடையவர்களை பார்த்தாலே சிலருக்கு ஒரு விதமான அருவருப்பான உணர்வு ஏற்படுவது உண்டு. அதை வெளியில் காட்டிக் கொள்ளாவிட்டாலும் அவர்களுக்கு சங்கடமாகவே இருக்கும். முகம் முழுவதும் இப்படி பள்ளமும் மேடுமாக கரடுமுரடாக இருந்தால், தன்னிடம் இருக்கின்ற தன்னம்பிக்கையும் கொஞ்சம் கொஞ்சமாக இழக்க நேரிடும்.

எனவே இத்தகையவர்கள் 2 ஸ்பூன் பாசிப்பயறு மாவுடன், அரை மூடி எலுமிச்சைப் பழத்தைக் கலந்து கொள்ளுங்கள். இதனுடன் 2 ஸ்பூன் அளவிற்கு சுத்தமான கற்றாழை ஜெல்லை சேர்த்துக் கொள்ளுங்கள். கற்றாழை ஜெல் செயற்கையாக நீங்கள் கடையில் காசு கொடுத்து வாங்குவதை விட, உங்கள் வீட்டில் அந்த செடி இருந்தால் அதனை வெட்டி உள்ளிருக்கும் ஜெல்லி மட்டும் தனியாக எடுத்து நன்கு 10 முறை அலசி சுத்தம் செய்து பின்னர் மிக்ஸியில் போட்டு அரைத்து பயன்படுத்துங்கள்.

- Advertisement -

இந்த மூன்று பொருட்களையும் ஒன்றாக கலந்து நன்கு பேஸ்ட் போல செய்து கொள்ளுங்கள். இந்த பேஸ்ட்டை உங்கள் கண்ணம், நெற்றி, மூக்கு, தாடை போன்ற பகுதிகளில் மட்டும் தடவிக் கொள்ளுங்கள். பின்னர் அப்படியே அரை மணி நேரம் உலர விட்டு விடுங்கள். நன்கு உலர்ந்த பின்பு குளிர்ந்த நீரினால் முகத்தை மெதுவாக துடைக்க வேண்டும், போட்டு அழுத்தம் கொடுக்கக்கூடாது. முகத்தை துடைக்கும் பொழுது தண்ணீரை தொட்டு மசாஜ் செய்வது போல செய்து துடையுங்கள். பின்னர் ஐஸ் கட்டிகள் இருந்தால், அதை எடுத்து ஒரு காட்டன் துணியில் சுற்றி மெதுவாக ஒற்றி ஒற்றி எடுங்கள்.

இப்படி ஐஸ் கட்டி ஒத்தடம் கொடுத்தால் முகத்தில் இருக்கும் துவாரங்களில் இறுக்கம் கிடைக்கும். முகத்துவாரங்கள் பெரிதாவதால் உண்டாகக் கூடிய இந்த கரடுமுரடான கண்ணத்தை மேற்கூறிய பொருட்களை பயன்படுத்தி 2 மாதத்தில் விரட்டி அடித்துவிடலாம். வாரத்தில் 2 லிருந்து 3 நாட்கள் தடவி வர இரண்டு மாதங்களில் நல்ல ஒரு மாற்றம் தெரிய ஆரம்பிக்கும், ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -