நீங்களே நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு பத்துமடங்கு உங்களுடைய முடி வளர்ச்சியை அதி வேகமாக வளரச் செய்ய ஒரு சூப்பரான சீரம் எப்படி தயார் செய்வது என்பதை பற்றி தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். குப்பையில் தூக்கி போடும் ஆரஞ்சு பழத்தோல் தான் இந்த ஹேர் பேக்கின் ஹீரோ. ஆரஞ்சு பழத்தை சாப்பிட்டுவிட்டு தோலை தூக்கி குப்பையில் போட வேண்டாம். பத்திரப்படுத்தி வையுங்கள். இந்த சீரமை எப்படி தயாரிப்பது என்று பார்க்கலாம்.
முதலில் ஒரு ஆரஞ்சு பழ தோல் எடுத்து ஒரு தட்டில் போட்டு வெயிலில் நன்றாக காய வைத்துக்கொள்ளுங்கள். ஒரு நாள் முழுவதும் நல்ல வெயிலில் காய்ந்தால் போதும். ஒரு பெரிய பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளுங்கள். அதில் காயவைத்த ஆரஞ்சு பழத்தோல், காய்ந்த ரோஜா இதழ்கள், இந்த இரண்டு பொருட்களையும் போட்டு இரண்டு பொருட்களும் மூழ்கும் அளவிற்கு சுத்தமான நல்ல தண்ணீரை இந்த ஊற்றிவிட வேண்டும். மீடியம் சைசில் இருக்கும் 1 டம்பளர் தண்ணீர் சரியாக இருக்கும். (ஒரு கைப்பிடி அளவு காய்ந்த ரோஜா இதழ்களை எடுத்துக் கொள்ளுங்கள். இது நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். உங்களுக்கு சுத்தமான பன்னீர் ரோஜா கிடைத்தால் அதை கூட காய வைத்துவிட்டு பயன்படுத்திக் கொள்ளலாம்.)
இந்த இரண்டு பொருட்களும் தண்ணீரில் 7 லிருந்து 8 மணி நேரம் அப்படியே ஊறட்டும். அதன் பின்பு இந்த பொருட்களை ஊறவைத்த தண்ணீருடன் மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்றாக அரைக்க வேண்டும். இது நைஸாக விழுதுபோல் அரைபட்டு வராது. ஒன்றும் இரண்டுமாக தான் அரைபட்டு வரும். பரவாயில்லை. இதிலிருந்து வடிகட்டி தண்ணீரை மட்டும் தனியாக எடுத்துக் கொள்ளுங்கள். ஊறவைத்த தண்ணீரை மட்டும் தான் ஊற்றி அரைக்க வேண்டும். புதியதாக மிக்ஸி ஜாரில் தண்ணீர் ஊற்றி அரைக்கக் கூடாது என்பதும் குறிப்பிடத்தக்க ஒரு விஷயம்.
இப்போது நமக்கு ஆரஞ்சு பழத்தோல் ரோஜா இதழ்களை அரைத்து வடிகட்டி எடுத்தத சாறு கிடைத்திருக்கும் அல்லவா. அந்த சாறுடன் விட்டமின் E கேப்ஸ்யூல் – 2 (உள்ளே இருக்கும் ஜெல்லை மட்டும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.) அதன் பின்பு இதோடு அலோ வேரா ஜெல் – 2 டேபிள் ஸ்பூன் சேர்த்து நன்றாக ஒரு கரண்டியை வைத்து அடித்து கலக்கி விட்டால், ஜெல் போல ஒரு சீரம் நமக்குக் கிடைத்திருக்கும். இதை கண்ணாடி பாட்டிலில் ஸ்டோர் செய்து வைத்துக் கொள்ளுங்கள்.
இந்த சீரமை எப்போது வேண்டுமென்றாலும் நீங்கள் தலையில் அப்ளை செய்து கொள்ளலாம். குறிப்பாக தலைக்கு குளித்து முடித்துவிட்டு இந்த சீரமை அப்படியே உங்களுடைய மண்டை ஓட்டில் படும்படி மசாஜ் செய்து கொள்ளலாம். அதன்மேல் பின்பு முடியின் அடிபாகம் வரை இந்த சீரத்தை அப்ளை செய்யலாம். உங்களுடைய முடி வாசமாக பார்ப்பதற்கு பளபளப்பாக கண்டிஷனர் போட்டது போல மாறிவிடும். இந்த சீரமை தலையில் போட்டுவிட்டு தலைக்கு குளிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. அப்படியே தலை சீவி பின்னிக் கொண்டால் அழகாகத்தான் இருக்கும். வாசமாக இருக்கும்.
ஒரு நாள் விட்டு ஒரு நாள் கூட இதை அப்ளை செய்து கொள்ளலாம். ஒரு மாதம் வரை இந்த சீரம் வெளியில் வைத்தாலே கெட்டுப் போகாது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் இதில் தண்ணீர் படாமல் பார்த்துக் கொள்ளுங்கள். 1 ஸ்பூனை போட்டு எடுத்துப் பயன்படுத்துங்கள். நிச்சயமாக இந்த சீரம் முப்பதே நாட்களில் உங்களுடைய முடி வளர்ச்சியில் நல்ல வித்தியாசத்தை காட்டும். ட்ரை பண்ணி பாருங்க.