கடையில் வாங்கும் மருந்து தெளிக்கப்பட்ட கீரையை விட 10 பைசா செலவில்லாமல் நம் வீட்டு சிறிய தொட்டியிலேயே ‘ஆர்கானிக் கீரையை’ எளிதாக வளர்ப்பது எப்படி?

keerai-valarpu
- Advertisement -

நாம் கடைகளில் கீரையை காசு கொடுத்து வாங்குகிறோம். வாங்கி வந்து வீட்டில் வைத்து பார்த்தால் அது பிரஷ்ஷாக அப்படியே தான் இருக்கும். ஃப்ரிட்ஜில் வைத்தாலும் மறுநாள் வரை அப்படியே பிரஷ்ஷாக இருக்கும். ஆனால் உண்மையில் மருந்து தெளிக்கப்படாத ஆர்கானிக் கீரை அறுவடை செய்த பின்பு சிறிது நேரத்திலேயே சோர்ந்து போய்விடும். அப்படி இருந்தால் தான் அது தரமான கீரையாக இருக்க முடியும். கீரை வளர்ப்பது ஒன்றும் பெரிய கஷ்டமான வேலை இல்லை. எந்த விதமான பூச்சிக்கொல்லி மருந்துகளும் தெளிக்கப்படாமல், ஒரு இலை கூட பூச்சி அரிப்பு இல்லாமல் மிக எளிமையான முறையில் நம் வீட்டிலேயே கீரையை வளர்ப்பது எப்படி? அதைத்தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள இருக்கிறோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

keerai-plant2

கீரை வளர்ப்பதற்கு அதிக இடம் கூட தேவையில்லை. நம்மிடம் இருக்கும் சாதாரணமான வகை மண் தொட்டிகளில் ஒருமுறை கீரை விதைகளை வாங்கி பார்த்தி கட்டி விதைக்க வேண்டும். ஒரு மீடியம் சைஸ் மண் தொட்டியில் மண்ணை தளர்வாக கொட்டி வைத்துக் கொள்ள வேண்டும். அதில் தோட்டத்திற்கு பாத்தி கட்டுவது போல இடை இடையே கையை வைத்து கோடு மாதிரி போட்டுக் கொள்ள வேண்டும். அவற்றில் விதைகளை தூவிக் கொண்டே வர வேண்டும்.

- Advertisement -

அவ்வளவுதான் அதற்கு மேலே சிறிதளவு ஈரப்பதம் இருக்குமாறு தண்ணீரை தெளித்துக் கொள்ள வேண்டும். 10 நாட்களில் கீரை தளிர்விட்டு முளைக்க ஆரம்பிக்கும். இதற்கு வீட்டிலேயே இயற்கையாக தயாரிக்கப்படும் ஊட்டசத்து டானிக் தெளித்து வளர்த்தால் போதுமானது. வேறு எந்த வகையான பராமரிப்பும் இதற்கு தேவைப்படுவது இல்லை. மடமடவென கீரை பசுமையாக வளர ஆரம்பிக்கும்.

keerai-plant1

நீங்கள் அறுவடை செய்ய தேவையான அளவிற்கு கீரை வளர்ந்த பிறகு அதனை இரண்டு இன்ச் அளவிற்கு கீழே விட்டுவிட்டு மேல்பகுதியை மட்டும் அறுவடை செய்ய வேண்டும். நீங்கள் அறுவடை செய்யும் பொழுது முற்றிய மிகப் பெரிய இலைகளை கொண்ட தழைகளை விட்டுவிட்டு அறுவடை செய்ய வேண்டும். முற்றிய இலைகள் பூக்கள் பூக்க ஆரம்பித்து அதில் இருந்து நமக்கு புதிய விதைகள் கிடைக்க செய்யும்.

- Advertisement -

ஒருமுறை விதைகள் போட்டு இரண்டிலிருந்து மூன்று தடவை அறுவடை செய்த பின் அதனை வேரோடு எடுத்து விட வேண்டும். மீண்டும் மீண்டும் அதே விதைகளை வைத்து வளர்க்க முடியாது. உங்களுக்கு புதிதாக கிடைத்த விதைகளை மீண்டும் இதே போல் பாத்தி கட்டி விட்டு திரும்பவும் புதிதாக முளைக்க விடலாம். நாம் வீட்டில் வளர்க்கும் கீரை வகைகளுக்கு சத்துக்கள் அதிகம் உண்டு. எந்த விதமான ரசாயன பூச்சிக் கொல்லிகள் தெளிக்க படாமல் இருப்பதால் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.

keerai

கடைகளில் விற்கப்படும் கீரை பொது மக்களை சென்றடையும் வரை பசுமையாக இருக்க பல்வேறு பூச்சிக்கொல்லி மருந்துகள், ரசாயன கலவைகளும் தெளிக்கப்பட்டு இருக்கும். அதனால் தான் அதை நாம் ஃப்ரிட்ஜில் வைத்து இருந்தாலும் அப்படியே பசுமையாக இருக்கிறது. இதையே நாம் வீட்டில் வளர்க்கும் கீரையை அறுவடை செய்யும் பொழுது நீங்கள் அறுவடை செய்த ஒரு மணி நேரத்திலேயே கீரை சோர்ந்து போக ஆரம்பித்து விடும்.

- Advertisement -

keerai-plant

அறுவடை செய்த உடனேயே அதனை கழுவி சுத்தம் செய்து சமைத்து சாப்பிட்டால் அதன் ருசியே நமக்கு ஆரோக்கியத்தை அள்ளித் தரும். இயற்கை கொடுத்த கொடையை முழுதாக அனுபவிக்க நம் வீட்டின் சின்ன பகுதியை அர்ப்பணித்தால் கூட ஆரோக்கியம் நம் கையிலேயே இருக்கும் என்பதை மறந்து விடாதீர்கள்.

இதையும் படிக்கலாமே
தோசைக்கல்லின் ஓரங்களில் இருக்கும் விடாப்பிடியான எண்ணெய் பிசுக்கை எளிய முறையில் நீக்கி ஒட்டாமல் பெரிய தோசை வருவதற்கு என்ன செய்யலாம்?

இது போன்று மேலும் தேவையான தகவல்கள் பலவற்றை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

- Advertisement -