வெறும் மூன்று பொருள் இருந்தால் போதும். வீட்டிலேயே இந்த சீம்பால் கடம்பு செய்து விடலாம். அசல் சீம்பால் போலவே இதோட சுவை, சும்மா நச்சுன்னு இருக்கும்.

seem-paal
- Advertisement -

கிராமப்புறங்களில் மாடு, கண்ணு போட்ட பிறகு சீம்பால் கிடைக்கும். அதை வாங்கி சர்க்கரை ஏலக்காய் போட்டு கடும் பால் செய்து ருசியாக சாப்பிடுவார்கள். பெரும்பாலும் இன்று நகர்ப்புறங்களில் இந்த கடும் பால் கிடைக்கவில்லை. ஆனால் ரோட்டோர கடைகளில் நிறைய இதுபோல கடம்பு பால் விற்கும். அதை எப்படி செய்கிறார்கள். உங்களுக்கு தெரியுமா.

ரோட்டோர கடைகளில் விற்கும் கடந்து பால் சுவையில், நம்முடைய வீட்டில், பாக்கெட் பாலில் இந்த கடம்பு பாலை தயார் செய்து சாப்பிடலாம். அதுவும் மிக மிக எளிமையான முறையில், குறைந்த பொருட்களை வைத்து செய்துவிடலாம். உங்களுக்கு இந்த கடம்பு பால் ரொம்பவும் பிடிக்குமா. இந்த ரெசிபியை மிஸ் பண்ணாம படிச்சு ரெசிபியை தெரிஞ்சுக்கோங்க. நாளைக்கு உங்க வீட்ல ட்ரை பண்ணி பாருங்க. சூப்பரான மில்க் ஸ்வீட் ரெசிபி இது உங்களுக்காக.

- Advertisement -

செய்முறை

முதலில் இதற்கு தேவையான பொருட்களை பார்த்து விடுவோம். பால் – 1/2 லிட்டர், அகர்அகர் பாசி – 5 கிராம், பால் பவுடர் – 100 கிராம், சர்க்கரை – 100 கிராம்.

அடுப்பில் பாத்திரத்தை வைத்து முதலில் பாலை அதில் ஊற்றி விடுங்கள். பாலில் ஒரு சொட்டு தண்ணீர் கூட ஊற்றக்கூடாது. பால் பொங்கி வரும் போது அடுப்பை சிம்மில் வைத்து விட்டு, ஒரு கரண்டியை வைத்து கலந்து கொண்டே இருங்கள். பால் ஐந்து நிமிடம் நன்றாக கொதிக்கட்டும்.

- Advertisement -

பால் இரண்டில் இருந்து மூன்று நிமிடங்கள் நன்றாக கொதித்து லேசாக திக்கானதும் அகர்அகர் பாசியை சின்ன சின்ன துண்டுகளாக வெட்டி போட்டு, பால் பவுடரையும் போட்டு, மீண்டும் கரண்டியை கொண்டு பாலை கைவிடாமல் கலந்து கொண்டே இருக்க வேண்டும். அகர்அகர் பாசி நன்றாக கரைந்து பாலோடு சேர்ந்து திக்காக சீம் பால் மாதிரி நமக்கு கிடைத்திருக்கும்.

இதை கொஞ்சம் நன்றாக ஆற வைத்துக் கொள்ளவும். ஒரு கிண்ணத்திலோ அல்லது டம்ளரிலோ நெய் தடவி காய்ச்சி வைத்திருக்கும் திக்கான பாலை அதில் ஊற்றி ஃப்ரீசரில் வைத்து விடுங்கள். 2 லிருந்து 3 மணி நேரம் கழித்து எடுத்துப் பார்த்தால் சூப்பராக செட்டாகி நமக்கு கிடைத்திருக்கும். பாத்திரத்தின் ஓரத்தில் லேசாக கத்தியை வைத்து கீறிவிட்டு, பாத்திரத்தை கவிர்ழ்தால் சூப்பரான சீம்பால் கிடைத்திருக்கும்.

- Advertisement -

அப்படியே ஸ்பூனால் குத்தி எடுத்து சுவைத்து பாருங்கள். சீம்பால் சாப்பிட்ட சுவையும், திருப்தியும் உங்களுக்கு கிடைக்கும். சில பேர் இதில் ஏலக்காய் தூள் சேர்ப்பார்கள். உங்களுக்கு ஏலக்காய் வாசம் பிடித்திருந்தால் ஏலக்காய் தூள் சேர்த்தும் இந்த சீம்பாலை செய்யலாம்.

இதையும் படிக்கலாமே: ஒரு கப் இட்லி மாவு இருந்தா அஞ்சே நிமிஷத்துல ரொம்பவே சூப்பரான, கிரிஸ்பியான இந்த குணுக்கு ரெசிபியை செய்து கொடுங்க. இவ்வளவு ஈஸியான ஈவினிங் ஸ்நாக்ஸ் இருக்கிறது இதுவரைக்கும் தெரியாம போச்சே.

அகர்அகர் பாசி என்பது எல்லா சூப்பர் மார்க்கெட்டிலும் இப்போது சுலபமாக கிடைக்கிறது. அது சைவ பொருள்தான். அதை சாப்பிடுவதன் மூலம் பிரச்சனைகள் எதுவும் வராது. அதை வாங்கி தாராளமாக இந்த ஸ்வீட் செய்ய நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடிய பொருள்தான் அகர்அகர். பார்ப்பதற்கு சேமியா போல நீள நீளமாக வெள்ளை நிறத்தில் இருக்கும். ஃபுல் க்ரீம் மில்க்காக கிடைத்தால், அதை வாங்கி இந்த ஸ்வீட் செய்ய பயன்படுத்துங்கள். ருசி கூடுதலாக கிடைக்கும்.

- Advertisement -