தினமும் வீட்டில் பால் காய்ச்சும் போது பெண்கள் இதை மட்டும் செய்து பாருங்களேன். உங்களுடைய வீட்டில் சந்தோஷம் தினம்தினம் பால் போல பொங்கி வழியும்.

milk
- Advertisement -

பால் காய்ச்சும் போது மட்டும் இல்லைங்க. பெண்கள் எப்போதுமே தங்களுடைய குடும்பம் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று தான் அனுதினமும் நினைத்துக் கொண்டே இருக்கவேண்டும். எந்த வீட்டில் பெண்கள் இந்த நினைப்போடு இருக்கிறார்களோ, அந்த வீடு பால் பொங்கி வழிவது போல எப்போதுமே சந்தோஷமாகத்தான் இருக்கும். இது முதல் விஷயம். அடுத்தபடியாக பரிகாரங்கள் என்று பார்த்தால், பால் காய்ச்சிய பின்பு பெண்கள் இந்த விஷயங்களை செய்யும்போது வீட்டில் சந்தோஷம் பலமடங்காக உயரும் என்றும் சொல்லப்பட்டுள்ளது. சுலபமான அந்த பரிகாரங்கள் என்ன என்பதை தெரிந்து கொள்வோமா.

milk

காலையில் எழுந்து அடுப்பைப் பற்றவைத்து பால் காய்ச்சும் போதே அந்த பாலை போல உங்களுடைய மனம் சுத்தமாக இருக்க வேண்டும். பெண்களுடைய மனது பொறாமை குணம் இல்லாமல் சுயநலம் இல்லாமல் எந்த ஒரு வன்மமும் இல்லாமல் இருக்க வேண்டும். இப்படி தூய்மையான மனதோடு தினமும் வீட்டில் பாலைக் காய்ச்ச அடுப்பை பற்ற வைக்க வேண்டும்.

- Advertisement -

அடுத்தபடியாக காய்ச்சிய பாலை முதலில் ஒரு சிறிய டம்ளரில் ஒரு இரண்டு ஸ்பூன் அளவு எடுத்துக்கொள்ள வேண்டும். அந்த பாலை கொண்டு போய் நிலை வாசப்படியில் இரண்டு பக்கமும் இரண்டு சொட்டுகளை ஊற்றி விட்டு வர வேண்டும். இதற்கு என்ன அர்த்தம். நிலை வாசப்படியில் இருக்கக்கூடிய கிரக தேவதைகளுக்கும் குலதெய்வத்திற்க்கும் நீங்கள் பாலபிஷேகம் செய்து அவர்களுடைய மனதை குளிர வைப்பதாக அர்த்தம். தினம் தோறும் இதை செய்து வந்தால் நல்ல தேவதைகளின் ஆசீர்வாதத்தை நம்மால் பெற முடியும். அந்த ஆசிர்வாதம் நம் குடும்பத்திற்கும் கிடைக்கும்.

donkey milk

அடுத்தபடியாக நிறைய பேர் வீடுகளில் கண் திருஷ்டி காரணமாக சமையலறையில் பிரச்சனைகள் ஏற்படும். எடுத்துக்காட்டிற்கு நீங்கள் சமைத்த உணவை வீட்டில் இருப்பவர்கள் சாப்பிட முடியாமல் கஷ்டப்படுவார்கள். சமைத்த உணவு அப்படியே மிஞ்சிப் போய் குப்பையில் கொட்ட வேண்டிய சூழ்நிலை ஏற்படும். சமைத்த உணவில் ருசி இருக்காது. இப்படிப்பட்ட பிரச்சினைகளில் இருந்து விடுபட பாலை வைத்து ஒரு பரிகாரம் சொல்லப்பட்டுள்ளது.

- Advertisement -

தோசைக்கல்லை அடுப்பில் வைத்து நன்றாக சூடு செய்து கொள்ளுங்கள். அந்த சூடான தோசைக்கல்லில் கொஞ்சமாகப் பாலை எடுத்து தெளித்து விடுங்கள். அந்த பால் தோசை கல்லில் பட்டு காணாமல் போகும். இப்படி செய்தால் சமையலறையை பிடித்த கண்திருஷ்டி விலகும் என்று சொல்லப்பட்டுள்ளது. முயற்சி செய்து தான் பாருங்களேன்.

cooking'

பாலின் மூலம் பால் போன்ற வெள்ளையான சந்தோஷம் நம் வீட்டிற்கு கிடைத்தால் நல்லது தானே. இந்த பரிகாரத்தை செய்வதன் மூலம் யாருக்கும் எந்த கஷ்டமும் வரப்போவது இல்லை. நல்லதை நினைத்து நல்லதை நினைப்பவர்களுக்கு நல்லது மட்டுமே நடக்கும் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -