வெயில் காலத்தில் கூட இனி உங்க வீட்டில பால் கெட்டுப் போகாது. இந்த டிப்ஸ் தெரிஞ்சு வெச்சுகிட்டா!

milk

இன்னும் சில நாட்களில் வெயில் காலம் வரப்போகின்றது. நம்முடைய வீட்டில் இனி வாங்கி வைத்த பால் அடிக்கடி கெட்டுப் போகும்‌. அதாவது, தினமும் காலை ஒரு முறை காய்ச்சினால், குளிர்காலத்தில் மாலைவரை அந்த பால் கெட்டு போவதற்கு வாய்ப்பு இல்லை. வெயில் காலங்களில் அப்படி கிடையாது. காலையில் காய்ச்சிய பாலை மதியத்திற்கு முன்பு ஒருமுறை காய்ச்ச வேண்டும். மீண்டும் மீண்டும் காய்ச்சி வைத்துக் கொண்டே இருக்க வேண்டும். அப்போது தான் கெட்டுப்போகாது. அப்படி இல்லை என்றால் காய்ச்சிய பாலாக இருந்தாலும் அதை எடுத்து ஃப்ரிட்ஜில் வைக்க வேண்டும்.

milk1

வெயில் காலங்களில் பால் கெட்டுப் போகாமல் இருக்க என்ன செய்யலாம் என்பதை பற்றிய ஒரு சின்ன டிப்ஸ் தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். முதலில் நீங்கள் பாலை பாத்திரத்தில் ஊற்றும்போது எப்போதுமே, தண்ணீரை ஊற்றி விட்டு, அதன் பின்புதான் பாலை ஊற்ற வேண்டும். அதாவது பால் காய்ச்சும் குண்டானில் முதலில் பாலுக்கு தேவையான தண்ணீரை ஊற்றி விடுங்கள். அதன் பின்பு பாலை ஊற்றிக் காய்ச்சினால் பால் அடி பிடிக்காது.

இதேபோல் ஃப்ரிட்ஜில் வைத்த பாலை ஜில்லென்று காய்ச்சுவதும் தவறு. ஃப்ரிட்ஜில் வைத்த பாலை சிறிது நேரம் வெறும் தண்ணீரில் வைத்து, அந்த குளிர்ச்சி தன்மை முழுமையாக குறைந்த பின்பு தான் பாலை காய்ச்ச வேண்டும். சரி இப்போது பாலில் போட வேண்டிய அந்த ஒரு பொருள் என்ன என்பதை தெரிந்து கொள்வோமா?

நாம் எல்லோரும் அறிந்த பொருள் தான் அது, நெல். இந்த நெல்மணி கடைகளில் விற்கும். 50 கிராம் அல்லது 100 கிராம் அளவு வாங்கி உங்களுடைய வீட்டில் வைத்துக்கொள்ளுங்கள். தினமும் காலையில் பாலை காய்ச்சி முடித்ததும் ஒரு நெல் மணியை எடுத்து அந்தப் பாலில் போட்டு வைத்து விட வேண்டும்.

- Advertisement -

இப்படி போட்டு வைத்து விட்டால், அந்தப் பாலை நீங்கள் காய்ச்ச மறந்தாலும் சரி, ஃப்ரிட்ஜில் எடுத்து வைக்க மறந்தாலும் சரி, வெயில் காலத்திலும் கூட அந்த பால் கெட்டுப்போவதற்கு அதிக வாய்ப்பு கிடையாது. ஆனால், மீண்டும் அந்த பாலை காய்ச்சி பயன்படுத்தும் போது நெல் மணியை வடிகட்டி ஞாபகமாக வெளியே எடுத்துவிட வேண்டும். காரணம் தொண்டையில் போய் சிக்கிக் கொள்ள வாய்ப்பு உள்ளது.

nel

நிறைய பேருக்கு சந்தேகம் இருக்கும். வெறும் ஒரு நெல்லை போடுவதால் பால் கெட்டுப் போகாமல் இருக்குமா என்று! மேலே சொன்ன குறிப்புகளை பின்பற்றி, அதோடு சேர்த்து இந்த நெலையும் உங்களுடைய பாலோடு சேர்த்து வையுங்கள். பால் திரிந்து போகாமல் இருக்கும்.

milk2

பாலை அடிக்கடி அடுப்பில் வைத்து பொங்க விடும் பழக்கம் உங்களுக்கு இருந்தால், மேலே கொடுக்கப்பட்டுள்ள படம் போல, பால் பாத்திரத்தின் மேலே, ஒரு கரண்டியை வைத்து விடுங்கள். அந்த கரண்டியின் மீது பட்டதும், பால் மீண்டும் உள்ளே சென்று விடும். நிறைய பொங்கி வழிய வாய்ப்பு இல்லை. டைப் பண்ணி பாருங்க! ஒருமுறை சோதித்து பாருங்கள். உங்களுக்கு இந்த குறிப்பு பலன் அளித்தால், உங்களுக்கு தெரிந்தவர்களுக்கும் சொல்லி பயனடையலாம் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

இதையும் படிக்கலாமே
சப்பாத்தியும், பூரி மாதிரி உப்பி வர, இந்த டிப்ஸ் ஃபாலோ பண்ணினாலே போதும். எந்த மாவில் சப்பாத்தி பிசைந்தாலும் இப்படி பிசைய கத்துக்கோங்க.

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.