அட! பால் கொழுக்கட்டை செய்வது இவ்வளவு ஈசியா? இத்தனை நாளா இது தெரியாம போச்சே! பிள்ளையாருக்கு பால் கொழுக்கட்டையும் ரொம்ப பிடிக்கும்.

pall-kozhukattai

வரப்போகின்ற விநாயகர் சதுர்த்தி அன்று பிள்ளையாருக்கு பால் கொழுக்கட்டை கூட நைவேத்தியமாக படைக்கலாம். பிள்ளையாருக்கு பிடித்தமான பொருட்களின் வரிசையில் இதுவும் ஒன்று. சுவையான பால் கொழுக்கட்டையை, சுலபமாக நம் வீட்டிலேயே எப்படி செய்வது என்பதை பற்றிதான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். நிறைய பேர் வீடுகளில் இந்த கொழுக்கட்டையை கடையிலிருந்து வாங்கி, விநாயகருக்கு படைப்பார்கள். இந்த வருடம் நம் கையாலேயே சுவையான பால் கொழுக்கட்டை செய்து விநாயகருக்கு படைக்கலாமா?

pall-kozhukattai1

பால் கொழுக்கட்டை செய்முறை:
Step 1:
1 கப் அளவு கடையில் விற்கும் கொழுக்கட்டை மாவை எடுத்துக் கொள்ள வேண்டும். இடியாப்ப மாவிலும் இந்த பால் கொழுக்கட்டை செய்யலாம் என்பது குறிப்பிடத்தக்கது. உங்களுடைய வீட்டில் பச்சரிசி மாவு இருந்தாலும் அதை லேசாக வறுத்து விட்டு, அந்த மாவை கொழுக்கட்டை செய்ய பயன்படுத்திக் கொள்ளலாம்.

ஒரு அகலமான பாத்திரத்தில் 1 கப் அளவு பச்சரிசி மாவு போடவேண்டும்.  அடுத்ததாக, 1/4 கப் துருவிய தேங்காய், 2 ஸ்பூன் சர்க்கரை, ஒரு சிட்டிகை உப்பு, சேர்த்து முதலில் நன்றாக கைகளால் தண்ணீர் ஊற்றாமல், அந்த மாவை பிசைந்துவிட வேண்டும். (இந்த மாவை ஒரு ஸ்பூன் அளவு எடுத்து தனியாக, ஒரு கிண்ணத்தில் வைத்துக் கொள்ளுங்கள்.)

pall-kozhukattai2

அடுத்ததாக, தண்ணீரை நன்றாக சூடுபடுத்த வேண்டும். கொதிக்கின்ற தண்ணீரை கரண்டியால் எடுத்து, மாவில் கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி, ஒரு ஸ்பூனால் கிளறி விட வேண்டும். மாவு கொஞ்சம் ஆரிய பதத்திற்கு வந்தவுடன், சூடு கை பொறுக்கும் பதத்தில் இருக்கும் போது, உங்களது கையால் மெதுவாக மாவை பிசைந்து கொடுத்து, சிறு சிறு உருண்டைகளாக உருட்டி தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். இந்த உருண்டைகள் வறண்டு போகக் கூடாது. ஒரு ஈரத் துணியை அதன் மேல் போட்டு மூடி வைத்துவிடுங்கள்.

- Advertisement -

Step 2:
ஒரு தேங்காயை உடைத்து, 2 மூடி தேங்காயை துருவி, அந்த தேங்காய் துருவலில் இருந்து தேங்காய்ப்பால் எடுக்க வேண்டும். முதல் முறை எடுக்கப்பட்ட திக்கான தேங்காய்ப் பாலை 1 கப் அளவு தனியாக வைத்து விடுங்கள். இரண்டாவது முறை மூன்றாவது முறை எடுக்கும் தேங்காய் பாலை ஒன்றாக எடுத்து, தனியாகவைத்துக் கொள்ளுங்கள். (ஆக மொத்தத்தில் 1 கப் – திக்கான தேங்காய்ப்பால், 2 – கப் கொஞ்சம் தண்ணியாக இருக்கின்ற தேங்காய்ப்பால்.) 1/2 – கப் அளவு காய்ச்சிய, நாம் குடிக்கும் சாதாரண மாட்டு பால் அல்லது பாக்கெட் பால்.

pall-kozhukattai3

Step 3:
இப்போது ஒரு அகலமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து இரண்டாவது மூன்றாவது முறை எடுத்த 2 கப் அளவு தேங்காய் பாலை முதலில் சேர்க்க வேண்டும். அடுத்தபடியாக காய்ச்சிய பாலையும் சேர்க்க வேண்டும். அடுத்ததாக அரிசி மாவில் இருந்து ஒரு ஸ்பூன் எடுத்து வைத்தோம் அல்லவா, அந்த மாவையும் இதில் சேர்த்து கட்டியாகாமல் கலக்கி விட்டு விட வேண்டும். ஒரு நிமிடம் இந்தக் கலவை நன்றாக கொதித்து வர வேண்டும்.

thengai-pall

Step 4:
தேங்காய்ப் பால் நன்றாகக் கொதித்ததும், அடுப்பை மிதமான தீயில் வைத்து வைத்து, தயார் செய்து வைத்திருக்கும் அரிசி மாவு உருண்டைகளை மெதுவாக கொதிக்கின்ற பாலில் சேர்க்க வேண்டும். இந்தக் கொழுக்கட்டை உருண்டைகள் மிதமான தீயிலேயே 15 லிருந்து 20 நிமிடங்கள் வரை வெந்தால் போதும்.

pall-kozhukattai4

உருண்டைகள் நன்றாக வெந்ததும் இறக்குவதற்கு 5 நிமிடங்களுக்கு முன்பாக, 1/2 கப் அளவு சர்க்கரை சேர்த்து, சர்க்கரை கரையும் அளவிற்கு மெதுவாக கிளறி விட வேண்டும். இறுதியாக திக்காக இருக்கும் தேங்காய்ப் பாலையும் சேர்த்து, ஏலக்காய் பொடி தூவி, இரண்டு நிமிடங்கள் கொதித்த பின்பு, பத்து நிமிடங்கள் ஆறிய பின்பு, சுடசுட சூப்பரான இனிப்பான பால் கொழுக்கட்டை தயார்.

pall-kozhukattai5

சர்க்கரை சேர்த்து, பாலை வெகு நேரம் கொதிக்க விடக்கூடாது பால் கொழுகட்டையில் இருக்கும், பால் நீர்த்து போவதற்கு வாய்ப்பு உள்ளது. இந்த குறிப்பு உங்களுக்கு பிடித்திருந்தால் இந்த விநாயகர் சதுர்த்திக்கு இந்த முறைப்படி செய்து, விநாயகருக்கு நைவேத்யம் செய்து விநாயகரின் ஆசீர்வாதத்தை பெற்றுக் கொள்ளுங்கள்.

இதையும் படிக்கலாமே
இந்த விஷயம் மட்டும் உங்களுக்கு தெரிஞ்சா ‘ரவா உப்புமா’ இனி உதிரி உதிரியாக நீங்களும் சமைத்து அசத்தலாம்.

இது போன்ற மேலும் பல சமையல் சார்ந்த குறிப்புகளை அறிந்து கொள்ள எங்களோடு இணைந்திருங்கள்.