இந்த விஷயம் மட்டும் உங்களுக்கு தெரிஞ்சா ‘ரவா உப்புமா’ இனி உதிரி உதிரியாக நீங்களும் சமைத்து அசத்தலாம்.

rava-upma3

இன்றைய தலைமுறையினர் ரவா உப்புமா என்பது தமிழ் நாட்டில் தடை செய்ய வேண்டிய ஒரு உணவுப் பொருளாகவே பெரும்பாலும் பார்த்து வருகின்றனர். சுலபமாக இருக்கிறது என்று அடிக்கடி அதை சமைத்து, மற்றவர்களின் அதிருப்தியை பெற்றவர்களா நீங்கள்? அப்படின்னா இந்த பதிவு உங்களுக்குத் தான் கரெக்ட்டா இருக்கும். ரவா உப்புமா ஈஸி தான் என்றாலும் அதை சரியாக செய்யவில்லை என்றால் உதிரி உதிரியாக இல்லாமல் சாப்பிடுவதற்கு அவ்வளவு நன்றாக இருக்காது. ரவா உப்புமா உதிரி உதிரியாக எப்படி நாமும் சமைக்கலாம் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

ravai

முதலில் ரவையை வெறும் கடாயில் போட்டு வறுத்து எடுக்க வேண்டும். ரவை வறுத்த ரவையாக இருந்தாலும் சமைக்கும் பொழுது ஒரு முறை வறுத்தால் தான் சுவை நன்றாக இருக்கும். அப்படியே செய்தால் சரியாக வராது. ரவா உப்புமா செய்வதற்கு மிகவும் முக்கியமாக அதில் சேர்க்கப்படும் தண்ணீரின் அளவு இருக்கிறது. தண்ணீரின் அளவு சரியாக சேர்க்கும் பொழுது தான் உப்புமா உதிரி உதிரியான பதத்திற்கு வரும். அது போல உப்புமா மிகவும் சுவையாக இருப்பதற்கு இந்த பொருட்களை எல்லாம் சேர்க்க வேண்டும். அதற்காக தேவையானவற்றை முன்னரே வெட்டி வைத்துக் கொள்ளுங்கள்.

ரவா உப்புமா செய்ய தேவையான பொருட்கள்:
ரவை – 2 கப், பச்சை மிளகாய் – 2 இஞ்சி – ஒரு துண்டு, வெங்காயம் – ஒன்று, கறிவேப்பிலை, உப்பு, எண்ணெய் – தேவையான அளவிற்கு, தண்ணீர் – 3 கப்.

onion-cutting

ரவா உப்புமா செய்முறை விளக்கம்:
முதலில் அடுப்பை பற்ற வைத்து ஒரு வாணலியை எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். அதில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி, கடுகு உளுத்தம் பருப்பு, நறுக்கிய பச்சை மிளகாய், நறுக்கிய இஞ்சி துண்டுகள், கறிவேப்பிலை ஆகியவற்றை தாளித்தம் செய்ய வேண்டும். அதன் பின் நறுக்கி வைத்த வெங்காயத்தை போட்டு பொன்னிறமாக வதக்கவும்.

- Advertisement -

வெங்காயம் வதக்கியதும் ரவைக்கு தேவையான அளவிற்கு தண்ணீர் ஊற்றிக் கொள்ளுங்கள். ஒரு கப் ரவைக்கு ஒன்றரை கப் தண்ணீர் என்பது தான் சரியான விகிதம். இதை நீங்கள் கவனிக்கத் தவறினால் ரவா உப்புமா நன்றாக வராது. தண்ணீர் கொதித்ததும் தேவையான அளவிற்கு உப்பு சேர்த்துக் கொள்ளுங்கள். இப்பொழுது அடுப்பை குறைத்து கொண்டு வறுத்த ரவையை சிறிது சிறிதாக அதில் சேர்த்து வர வேண்டும்.

rava-upma

நீங்கள் போட்டு முடிக்கும் பொழுதே ரவை முழு தண்ணீரையும் உறிஞ்சிக் கொள்ளும். அதனால் தான் அடுப்பை குறைவாக வைத்துக் கொண்டு ரவையை போட வேண்டும். கட்டி தட்டாமல் ரவையை கிண்டிக் கொண்டே இருங்கள். அதன் பின் அடுப்பை குறைவாக வைத்த படியே வாணலியை மூடி வைக்கவும்.

rava-upma1

இரண்டு நிமிட இடைவெளியில் அவ்வபோது கிண்டிக் கொண்டே இருக்க வேண்டும். இது போல் ரவை உதிரி உதிரியாக வரும் வரை செய்யுங்கள். இப்பொழுது அடுப்பை அணைத்து விட்டு அப்படியே மூடி வைத்து விடுங்கள். சிறிது நேரம் கழித்து ஒரு முறை கிண்டினால் போதும். ரவை உதிரி உதிரியாக சூப்பராக வெந்து வந்திருக்கும்.

rava-upma2

இதில் காய்கறி சேர்க்க நினைப்பவர்கள் வெங்காயத்தை வதக்கிய பின் உங்களுக்கு விருப்பமான காய்கறிகளை பொடிப் பொடியாக நறுக்கிக் கொண்டு சேர்த்து வதக்க வேண்டும். இப்படி ரவா உப்புமா செய்து கொடுத்தால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை யாருமே வேண்டாம் என்று சொல்ல மாட்டார்கள். குழந்தைகளுக்கு நாட்டு சர்க்கரை வைத்து ரவா உப்புமா பரிமாறலாம். வெள்ளை சர்க்கரையைத் தவிர்ப்பது மிகவும் நல்லது. அதற்கு பதிலாக நாட்டுசர்க்கரை பயன்படுத்தலாம். சட்னி கேட்பவர்களுக்கு தேங்காய் சட்னி கெட்டியாக அரைத்துக் கொடுத்தால் அட்டகாசமாக இருக்கும்.

இதையும் படிக்கலாமே
நூக்கல் பொரியலை 5 நிமிஷத்துல இப்படி செஞ்சி பாருங்க! இதை அடிக்கடி சாப்பிட்டால் உடலில் சர்க்கரை அளவு கட்டுப்படுமாம்.

இது போன்ற மேலும் பல சமையல் சார்ந்த குறிப்புகளை அறிந்து கொள்ள எங்களோடு இணைந்திருங்கள்.