இவர்களுக்கு மட்டும் தானம் செய்து விடாதீர்கள் நிச்சயம் பாவம் வந்து சேரும்! இது கூட தெரிஞ்சிக்காம இருக்கிறோமோ! ஏன் அவர்களுக்கு தானம் செய்யக்கூடாது?

thanam1

தானம் என்பது புண்ணியத்தை சேர்ப்பது தான். நாம் நமக்காக செய்வதை விட மற்றவர்களுக்காக செய்யும் ஒரு விஷயம் நம்மை மேலும் மேலும் உயர்த்துவதாக சாத்திரங்கள் கூறுகிறது. மானிடப் பிறப்பின் முக்கிய நோக்கமே உண்மையான அன்பு செழுத்துவது தான். அந்த உண்மையான அன்பு இருந்தால் தான் நம்மால் பிறருக்கு உதவி செய்ய முடியும். உங்களில் எத்தனை பேர் மனதார ஒருவருக்கு உதவி செய்து இருப்பீர்கள்? யாராவது ஒருவர் உங்கள் வீட்டில் கதவைத் தட்டி தானம் கேட்க வந்தால் உங்களின் மனநிலை என்ன? புண்ணியத்தை சேர்க்கும் தானம்! எப்படி பாவத்தை சேர்க்கும்? இதற்கான விடைகளைத் தெரிந்து கொள்ள இந்த பதிவை படியுங்கள்.

annathanam

தானத்தில் சிறந்தது எது? என்று கேட்டால், ஒவ்வொருவரும் ஒவ்வொரு பதிலை கொடுப்பார்கள். ஒருவர் ரத்ததானம் என்றும், ஒருவர் அன்னதானம் என்றும் வரிசையாக கூறுவார்கள். அதற்கு இது தான் சரியான பதில் என்று ஒன்றுமே கிடையாது. ஏனென்றால் தானம் என்கிறதே சிறந்தது தான். இதில் மாற்றுக் கருத்து ஒன்றுமில்லை. ‘காலத்தினால் செய்த உதவி சிறிதெனினும் ஞாலத்தின் மாணப் பெரிது’, என்று கூறிய திருவள்ளுவர் கூற்று இங்கு உதவிக்கு மட்டுமல்ல தானத்திற்கும் பொருந்தும்.

‘பாத்திரம் அறிந்து பிச்சை போடு’ என்பது தானத்திற்கு சொல்லப்பட்டுள்ள பழமொழி ஆகும். பாத்திரம் அறிந்து என்பது பிச்சை கேட்பவரின் தகுதி அறிந்து பிச்சை போடு என்பது பொருளாகும். பாத்திரம் பளபளப்பாக இருந்து நீங்கள் பிச்சை போடுவதில் எந்த ஒரு பிரயோஜனமும் இல்லை. உண்மையிலேயே உடைந்து, உருக்குலைந்த பாத்திரத்திற்கு பிச்சை போடும் பொழுது தான் அதன் பலனும் நமக்கு முழுமையாக வந்து சேர்கிறது.

pichai-thanam

நீங்கள் பல தருணங்களில் வீடுகளில் சிறார்கள் உண்டியல் ஏந்தி வந்து கோவிலுக்கு வசூல் செய்கிறோம் என்று கூறக் கேட்டிருப்பீர்கள். அவர்கள் உண்மையிலேயே கோவிலுக்கு தான் வசூல் செய்கிறார்களா? என்று தெரிந்து கொள்ளாமல் கோவிலுக்கு தானே என்று பணம் கொடுத்து அனுப்பி விடுவீர்கள். அதன் பிறகு அவர்கள் அந்த பணத்தை வைத்து செய்யும் காரியங்கள் நமக்கும் பாவத்தை கொண்டு வந்து சேர்க்கும். மது பழக்கத்திற்கு, புகைப் பழக்கத்திற்கு அடிமையாகி போன சிலர் கோவில் வசூல் என்கிற பெயரில் தானத்தைப் பெற்றுக் கொண்டு சீரழிந்து போகிறார்கள். இதனை ஊக்குவித்த உங்களுக்கும் அந்தப் பாவத்தில் பங்கு வந்து சேரும்.

- Advertisement -

இது ஒரு உதாரணம் தான். இது போன்ற பல தருணங்கள் நம்முடைய வாழ்க்கையில் பல்வேறு இடங்களில் நம்மை அறியாமல் நடந்து கொண்டிருக்கும். இதனை கவனிக்க தவறி, கேட்டவுடன் பணத்தை கொடுத்து விட்டால் நீங்கள் செய்த தானத்திற்கு பலனும் இல்லை. பாவமும் உடன் வந்து சேரும். பல குடிமகன்கள் நாட்டில் பிச்சைக்கார வேடம் போட்டு காசு கேட்பதை உன்னித்து கவனித்துப் பாருங்கள். பிச்சை கேட்டு வருபவர்களுக்கு உணவு பொட்டலத்தை வாங்கி கொடுங்கள். காசு கொடுத்து பாவத்தைச் சேர்த்துக் கொள்ளாதீர்கள்.

thanam

உண்மையிலேயே உடல் அளவில் பாதிக்கப்பட்டு அல்லது மன அளவில் பாதிக்கப்பட்டு உழைப்பைக் கொடுத்து வாழ முடியாத நபர்களுக்கு அல்லது போதிய வசதி இல்லாத ஏழை, எளியவர்களுக்கு நீங்கள் செய்யும் சிறு தானம் கூட, பெரும் புண்ணியத்தை சேர்க்கும். தானத்தில் சிறந்த தானம் ஏழையின் சிரிப்பில் உங்கள் மனதில் உதிக்கும் உன்னதமான ‘மகிழ்ச்சி’ என்பதைக்கூறி இப்பதிவை முடித்துக் கொள்வோம்.

இதையும் படிக்கலாமே
வீட்டில் கெட்ட அதிர்வுகள் நீங்க சாம்பிராணி தூபம் போட முடியாதவர்கள் வெள்ளிக்கிழமையில் இதுபோல் செய்து வைத்தால் அதற்கு இணையான பலனை கொடுக்குமே!

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.