பாவங்கள் அனைத்தையும் போக்கும் சாய் பாபா மந்திரம்

Sai-baba-1-1

இன்றைய நவ நாகரீக உலகம் எல்லாவற்றிலும் அதி வேகமாக முன்னேறிவருகிறது. நாமும் அதனுடன் முன்னேற வேகமாக செயலாற்ற வேண்டி உள்ளது. இதனால் நாம் ஒவ்வொருவரும் நமது சக மனிதர்களுடன் எல்லாவற்றிலும் போட்டியிடுகிறோம். அப்படியான சமயங்களில் நாம் அவர்களுக்கு எந்த ஒரு தீமையும் மனதளவில் நினைக்கவில்லை என்றாலும் கூட நமது சில செயல்களால் அவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டு, அதன் காரணமாக அவர்களின் மன வருத்தத்திற்கு நாம் ஆளாகிறோம். இப்படி நாம் அறியாமல் செய்த பாவங்கள் அனைத்தையும் நீக்க உதவும் சாய் பாபா மந்திரம் தான் இது.

Sai baba

சாய் பாபா மந்திரம்

ஓம் சாய் ஸர்வ சாக்ஷியாய் நமஹ

இம்மந்திரத்தை தினமும் காலை வேளைகளில் உங்களால் முடிந்த 108 அல்லது 1008 எண்ணிக்கையில் கூறிவருவது நல்லது. அல்லது மாலை வேளையில் 6 மணிக்குள்ளாக “ஸ்ரீ பாபாவை” மனதில் வேண்டிக்கொண்டு இம்மந்திர ஜெபம் செய்யலாம். மேலும் வியாழக்கிழமை அன்று வீட்டில் சாய் பாபாவின் படத்திற்கு வாழை பழம் அல்லது கற்கண்டு இவற்றில் ஏதேனும் ஒன்றையோ அல்லது இரண்டையுமே நிவேதித்து, மஞ்சள் நிற பூவை சமர்ப்பித்து இம்மந்திரத்தை 108 எண்ணிக்கையில் ஜெபம் செய்ய, நீங்கள் அறியாமல் செய்த பாவங்கள் அனைத்தையும் மன்னித்து அவற்றை நீக்குவார் ஸ்ரீ சாய் பாபா.

இதையும் படிக்கலாமே:
முகத்தில் வசீகரம் பெறுக உதவும் சாய் பாபா மந்திரம்

குழந்தைகள் தவறு செய்தால் அவர்களை சரியான வழியில் வழிநடத்துவதற்கு பெற்றோர்கள் இருக்கின்றனர். மாணவர்கள் தவறு செய்தால் அவர்களை சரியாக வழிநடத்துவதற்கு ஆசிரியர்கள் இருக்கின்றனர். ஆனால் மனிதன் தவறு புரியும் போது அவனை மீண்டும் சரியான பாதையில் வழிநடத்துவதற்கு தங்களின் தவத்தால் ஞானநிலை உணரப்பெற்ற ஞானகுரு மட்டுமே இருக்கிறார். இப்படி மக்களுக்கு நல்வழி காட்ட எவ்வளவோ ஞானிகள் பிறந்திருக்கிறார்கள் அப்படிப்பட்டவர்களில் ஒருவர் தான் ஷீர்டி சாய் பாபா.

Sai baba with tiger

19 ஆம் நூற்றாண்டில் மகாராஷ்டிராவில் ஷீர்டி என்கிற ஊரில் வாழ்ந்தவர் தான் ஸ்ரீ சாய் பாபா. பெரும்பாலான ஞானிகளின் தோற்றம் பற்றிய விடயங்கள் அவ்வளவாக மக்களால் அறிந்து கொள்ள முடியாது. அது போல் தான் சாய் பாபாவின் பிறப்பின் ரகசியத்தையும் யாரும் அறிந்ததில்லை. தான் வாழும் காலத்திலும் சரி, தான் இந்த மனித வாழ்க்கையை நீக்கிய பின்பும் சரி தன்னை உண்மையான அன்புடன் வழிபட்டவர்களின் அனைத்து குறைகளையும் தீர்த்தவர் ஸ்ரீ சாய் பாபா.