முகத்தில் வசீகரம் பெறுக உதவும் சாய் பாபா மந்திரம்

Sai-baba-1-1

எண் சாண் உடம்பிற்கு சிரசே பிரதானம்” என்பது நம் தமிழ் ஆன்மிகப் பெரியோர்களின் வாக்காகும். ஒரு மனிதனின் உடம்பில் தலை தான் ஒரு முக்கியமான பகுதி. அதுவும் நம் தலையில் இருக்கும் முகம் தான் எல்லோரும் முதலில் பார்க்கும் பகுதியாகும். மனிதர்களின் முகங்கள் ஒவ்வொன்றும் ஒரு விதத்தில் அழகானது என்றாலும் எல்லோருக்குமே பிறர் பார்க்கும் போது அவர்களை வசீகரிக்கக்கூடிய தன்மை அவர்கள் முகத்தில் இருப்பதில்லை. அப்படியான மனிதர்கள் ஸ்ரீ ஷிரிடி சாய் பாபாவை வழிபட்டு நிவாரணம் பெறுவதற்கான சாய் பாபா மந்திரம் தான் இது.

மந்திரம்:
“ஓம் தீர்த்தாய நமஹ”

இம்மந்திரத்தை ஒவ்வொரு வியாழன் அன்றும் “ஸ்ரீ ஷிரிடி சாய் பாபா” கோவில் அருகில் இருந்தால், அங்கு சென்று சாய் பாபாவிற்கு ரோஜா பூ மாலை சாற்றி, இம்மந்திரத்தை 108 முறை கூறி வழிபடவேண்டும். பின்பு பாபாவிற்கு சாற்றப்பட்ட மாலையை கேட்டு வாங்கி வந்து, அதிலுள்ள ரோஜாப்பூக்களை அரைத்து முகத்திற்கு பூசிக்கொண்டு பின்பு சிறிது நேரம் கழித்து முகம் அலம்பிக்கொள்ள வேண்டும்.

இப்படிச் செய்வதால் நம் முகத்தில் சாய்பாபாவின் அருளால் பிறரைக் கவரக் கூடிய முக வசீகரம் ஏற்பட்டு, அதனால் உங்களுக்கு பல நன்மைகள் ஏற்படும். முகத்தில் உள்ள வயதான தோற்றம் மறைந்து என்றும் இளமை நீடிக்கும்.

இதையும் படிக்கலாமே:
சாய் பாபாவின் அருளை பெற உதவும் சாயிபாபா தியான ஸ்லோகம்

English overview:
Here we have Sai baba mantra in Tamil. If one chant this mantra on daily basis then his internal and external beautify will get increased by the grace of Sai baba.