பாவத்தின் உண்மையான தந்தை யார் ? அற்புதமான விளக்கம்

paavam

அரசன் ஒருவன் நீதி தவறாமல் ஆட்சி செய்து கொண்டு வந்தான். தனக்கு அறிவுரை கூறும் அனைவரும் ஞானத்தில் சிறந்தவர்களாக இருந்தால் தன்னுடைய ஆட்சி சிறப்பாக நடக்கும் என்று அவன் ஆணித்தரமாக நம்பினான். பண்டிதர் ஒருவர் அவனுக்கு உற்ற நண்பனாய் இருந்தார். ஒரு நாள் மன்னனுக்கு ஒரு மிக பெரிய சந்தேகம் ஏற்பட்டது.

king

பண்டிதரை அழைத்து, என் உயிர் நண்பனே நீ ஒரு சிறந்த பண்டிதர் என்பதை நான் நன்கு அறிவேன் ஆகையால் என் சந்தேகத்தை நீர் தான் தீர்த்துவைக்க வேண்டும் என்று கூறி, “பாவத்தின் தந்தை யார் ?” என வினவினான். இதற்கான விடை பண்டிதருக்கு தெரியவில்லை. அவர் திரு திருவென முழிக்க ஆரமித்தார். அவர் விடையை அறியவில்லை என்பதை உணர்ந்த அரசன், இப்போதே விட கூறவேண்டும் என்ற அவசியம் இல்லை. இன்னும் ஒரு வாரம் கால அவகாசம் எடுத்துக்கொள்ளுங்கள். ஆனால் நிச்சயம் இதற்கான விடையை நீங்க கூற வேண்டும். இல்லையேல் அதற்கான தண்டனை உங்களுக்கு நிச்சயம் கிடைக்கும் என்று கூறினான்.

சோகத்தோடு வீடு திரும்பிய பண்டிதர், தன்னிடம் உள்ள அனைத்து புத்தகங்களையும் புரட்டினார். ஆனால் எதிலும் விடை கிடைக்கவில்லை. அவருக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை. தனக்கு தெரிந்த மற்ற பண்டிதர்களிடம் இது குறித்து வினவினார். ஆனால் யாருக்கும் விடைதெரியவில்லை. நாட்கள் கடந்து கொண்டிருந்தது.

munivar

மன்னன் கொடுத்த கால அவகாசம் நாளையோடு முடிகிறது என்ன செய்வதென்றே தெரியவில்லையே என்று புலம்பிய வாறு ஒரு தெருவில் நடந்து சென்றுகொண்டிருந்தார். அப்போது அவர் வருகையை கவனித்த ஒரு வேசி, என்ன பண்டிதரே எப்போது மகிழ்ச்சியாக இருப்பீர்கள் ஆனால் இன்று மிகுந்த சோகத்தோடு இருக்கிறீர்கள் என்று வினவினாள்.

- Advertisement -

தன்னுடைய பரிதாப நிலையை உணர்ந்த வேசியிடம் தனுக்கு ஏற்பட்டுள்ள இன்னல் குறித்து அவர் கூறினார். அட இவளவு தானா, இந்த கேள்விக்கான விடை எனக்கு தெரியுமே என்றால் அவள். பண்டிதருக்கு ஒரே ஆனந்தம். விடை உனக்கு தெரியுமா ? தயவு செய்து கூறு என்றார். சரி நான் விடையை கூறுகிறேன் ஆனால் நீங்கள் என் வீட்டிற்கு இப்போது வர வேண்டும். அதற்காக நான் உங்களுக்கு ஒரு பொற்காசையும் தருகிறேன் என்றாள்.

woman

வேசியின் வீட்டிற்கு எப்படி செல்வது என்று ஒரு நொடி சிந்தித்த பண்டிதர், நமக்கு இப்போது விடை தான் முக்கியம் ஆகையால் அவள் வீட்டிற்கு சென்று வந்த பிறகும் ஏதேனும் பரிகாரம் செய்துகொள்ளலாம் என்று எண்ணினார். பண்டிதர் தாசியோடு சேர்ந்து அவள் வீட்டிற்கு சென்றார். தாசியும் அவரிடம் ஒரு பொற்காசை கொடுத்தாள். விடையை கூறு என்று பண்டிதர் கேட்டார். வாருங்கள் என் படுக்கை அறைக்கு செல்லலாம் அங்கு நான் விடையை கூறுகிறேன். அதோடு உங்களுக்கு 10 பொற்காசுகளையும் தருகிறேன் என்றாள்.

woman

விடையோடு சேர்ந்து 10 பொற்காசுகளா! இது நன்றாக இருக்கிறதே என்று எண்ணி அவளின் படுக்கை அறைக்கு சென்றார். அங்கு அவள் சொன்னபடியே 10 பொற்காசுகளை கொடுத்தாள். பண்டிதர் இப்போது விடையை கேட்டார். தாசியோ, வந்தது வந்தீர்கள் என் மடியில் சற்று நேரம் அமருங்கள் உங்களுக்கு 50 பொற்காசுகளை தருகிறேன் என்றாள்.

ஆகா இது என்ன அற்புதம், பெண்ணின் மடி, 50 பொற்காசுகள் அதோடு விடையும் கிடைக்கிறது. என்ன நடந்தாலும் பரிகாரம் செய்து சரி செய்துகொள்ளலாம் என்று எண்ணி அவள் மடியில் அமர சென்றார் பண்டிதர். உடனே அந்த தாசி, பண்டிதருக்கு பளார் என ஒரு அரை விட்டாள். பண்டிதருக்கு ஒன்று புரியவில்லை. பாவத்தின் தந்தை யார் என்று இப்போது புரிகிறதா ? ஆசை தான் பாவத்தின் தந்தை என்றாள் அந்த தாசி. இதை கேட்டவுடன் பண்டிதர் தான் செய்த தவறை உணர்ந்து, அவளிடம் பெற்ற பொற்காசுகள் அனைத்தையும் அங்கேயே வீசி விட்டு மன்னனை காண விரைந்து சென்றார்.

thuriyothanan

அரண்மனையை அடைந்ததும் மன்னா மன்னா என கூறிக்கொண்டே உள்ளே உழைந்தார். மன்னனை கண்டவுடன், ஆசை தான் பாவத்திற்கான தந்தை மன்னா என்று கூறினார். அதோடு இந்த விடையை யார் அவரிடம் கூறியது என்ற முழு விவரத்தையும் அவர் கூறினார். தன் கேள்விக்கான விடையை அறிந்ததும் மன்னம் மனம் மகிழ்ந்தான். ஆகா எத்தனை அற்புதமான விளக்கம் என்று கூறினான். பண்டிதரோ தான் செய்த தவறுக்கு தண்டனை தரும்படி மன்னனிடம் வேண்டினார். நீங்கள் உங்கள் தவறை எப்போதோ உணர்ந்து விட்டீர்கள் ஆகையால் உங்களுக்கு தண்டனை ஏதும் இல்லை என்று மன்னம் கூறினான்.

இதையும் படிக்கலாமே :
அர்ஜுனன் மட்டும் எப்படி சிறந்த வில்லாளன் ஆனான் – மகா பாரத சம்பவம்

இது போன்ற மேலும் பல தமிழ் கதைகள் மற்றும் ஆன்மிகம் சார்ந்த தகவல்களை உடனுக்குடன் பெற தெய்வீகம் மொபைல் APP-ஐ டௌன்லோட் செய்யுங்கள்.