புளி சாதம் செய்யப் போறீங்களா? ஒருமுறை பச்சைக் புளியை உபயோகப்படுத்தி சாதம் செஞ்சு பாருங்க. செஞ்சுகிட்டு இருக்கும்போதே நாக்குல எச்சில் ஊறும்….

pulisadam pacha puli
- Advertisement -

ஊருக்கு செல்லும் பொழுது நம்முடைய முன்னோர்கள் கட்டி சோறு கட்டிக்கொண்டு சென்றனர். அந்த கட்டி சோறு என்பதுதான் புளிசாதம். அது ஒரு வாரம் வரை கெட்டுப் போகாமல் நன்றாக இருக்கும். இன்றளவும் சிலரது இல்லங்களில் வெளியூருக்கு செல்ல வேண்டும் என்றால் புளி சாதத்தை கட்டிக்கொண்டு செல்வார்கள். அப்படி நாம் செய்யக்கூடிய புளி சாதத்தை பச்சைப்புளியை உபயோகப்படுத்தி எப்படி செய்வது என்று தான் இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் நாம் பார்க்க போகிறோம்.

புளி சாதத்தை நாம் முறையாக செய்தோம் என்றால் அது ஒரு வாரம் வரை கெட்டுப் போகாமல் அப்படியே இருக்கும். பிரிட்ஜ் தேவைப்படாது. சுவையும் நன்றாக இருக்கும். இன்றைய காலகட்டத்தில் கடைகளில் விற்கக்கூடிய புளியோதரை பொடியை பயன்படுத்தி சாதம் செய்கிறார்கள். அதைவிட நாமே மசாலா அரைத்து செய்தோம் என்றால் அதன் சுவையே மிகவும் அருமையாக இருக்கும்.

- Advertisement -

முதலில் ஒரு கிலோ அரிசியை சாதமாக வடித்து ஆற வைத்துக் கொள்ள வேண்டும். இப்பொழுது கால் கிலோ பச்சை புளியை சுத்தம் செய்து நன்றாக கழுவி ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி வேக வைக்க வேண்டும். வெந்த பிறகு அந்த பச்சை புளியை நன்றாக கரைத்து அதில் இருக்கக்கூடிய தோல் மற்றும் கொட்டைகளை நீக்கும் வண்ணம் வடிகட்டி தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

புளி சாதத்திற்கு தேவையான பொடியை தயார் செய்து கொள்ள வேண்டும். அதற்கு ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் வெந்தயம் 1 ஸ்பூன், சீரகம் 1 ஸ்பூன், பெருங்காயம் சிறிது சேர்த்து நன்றாக வறுத்து, ஒரு தட்டில் கொட்டி ஆற வைக்க வேண்டும். பிறகு அதே கடாயில் 1 ஸ்பூன் மல்லியை வறுத்து அதையும் தனியாக ஆற வைக்க வேண்டும். இவை ஆறிய பிறகு அவற்றை தனித்தனியாக பொடியாக அரித்துக்கொள்ள வேண்டும்.

- Advertisement -

இப்பொழுது ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து நாம் வடிகட்டி வைத்திருக்கும் பச்சை புளி கரைசலை அதில் ஊற்ற வேண்டும். பிறகு அதில் 1 ஸ்பூன் மஞ்சள் தூள், தேவையான அளவு கல் உப்பு போட்டு நன்றாக சுண்ட காய்ச்ச வேண்டும். அதாவது தண்ணீர் பதம் இல்லாமல் கெட்டியாக இருக்கும் அளவிற்கு அதை வற்ற விட வேண்டும்.

பிறகு ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் 2 ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்ற வேண்டும். எண்ணெய் காய்ந்ததும் அதில் 1 ஸ்பூன் சீரகம், 2 உரித்த பூண்டு, கடலைப்பருப்பு 2 ஸ்பூன், வர மிளகாய் 20, ஒரு கைப்பிடி அளவு கருவேப்பிலை மற்றும் சுத்தம் செய்யப்பட்ட வேர்கடலை 250 கிராம் போட்டு நன்றாக வறுக்க வேண்டும். இவை அனைத்தும் நன்றாக சிவந்த பிறகு நாம் அரைத்து வைத்திருந்த 2 பொடிகளையும் அதில் போட வேண்டும். போட்டு ஒரு கிண்டு கிண்டி விட்டு அடுப்பை அணைத்து விட வேண்டும்.

- Advertisement -

இப்பொழுது ஆற வைத்திருக்கும் சாப்பாட்டில் நாம் தாளித்து வைத்திருக்கும் அந்த பொருட்கள் அனைத்தையும் கொட்டி நல்லெண்ணெய் ஊற்றி நன்றாக கிளற வேண்டும். பிறகு நாம் சுண்ட காய்ச்சி வைத்திருக்கும் பச்சை புளி கரைசலையும் அதில் சிறிது சிறிதாக சேர்த்து வெள்ளை சாதம் எங்கும் இல்லாத அளவுக்கு நன்றாக கிளற வேண்டும்.

இதையும் படிக்கலாமே: அட கத்திரிக்காயை வைத்து இப்படி கூட வறுவல் செய்யலாமா? பெங்காலி ஸ்டைலில் மசாலா தடவிய கத்தரிக்காய் வறுவல் ரெசிபி.

சாதாரண புளி சாதத்தை விட அற்புதமான ருசியை கொண்டிருக்கும் இந்த பச்சை புளி சாதத்தை ஒரு முறை உங்கள் வீட்டிலும் செய்து பார்த்து அனைவரின் பாராட்டையும் பெறுங்கள்.

- Advertisement -