- Advertisement -
Homeசமையல் குறிப்புகள்அட கத்திரிக்காயை வைத்து இப்படி கூட வறுவல் செய்யலாமா? பெங்காலி ஸ்டைலில் மசாலா தடவிய கத்தரிக்காய்...

அட கத்திரிக்காயை வைத்து இப்படி கூட வறுவல் செய்யலாமா? பெங்காலி ஸ்டைலில் மசாலா தடவிய கத்தரிக்காய் வறுவல் ரெசிபி.

- Advertisement -

பெரும்பாலும் கத்திரிக்காயை எப்படி சமைத்துக் கொடுத்தாலும் வீட்டில் இருப்பவர்கள் சாப்பிட மாட்டார்கள். ஆனால் இது உடம்புக்கு கொஞ்சம் ஆரோக்கியம் தரக்கூடிய காய் தானே. ஒதுக்கி வைக்க வேண்டாம். வெரைட்டி ரைஸுக்கு சைடிஷ் ஆக, கத்திரிக்காய்களை இப்படி வறுத்துக் கொடுத்து பாருங்கள். மொறுமொறுன்னு இருக்கும். கத்திரிக்காயை பிடிக்காது என்று சொல்லுபவர்கள் கூட, இதை விரும்பி விரும்பி சாப்பிட்டு விடுவார்கள். ரொம்ப ரொம்ப ஈஸியா பெங்காலி ஸ்டைல் கத்தரிக்காய் வறுவல் எப்படி செய்வது. பதிவை தொடர்ந்து படியுங்கள்.

செய்முறை

இதற்கு முதலில் கொஞ்சம் பெரிய சைஸ் கத்திரிக்காயாயாக பார்த்து வாங்கிக் கொள்ளுங்கள். அந்த கத்திரிக்காயை வட்ட வடிவில் வெட்டிக் கொள்ளுங்கள். ஓரளவுக்கு அரை இன்ச் தடிமனாக, கத்திரிக்காயை வெட்டிக் கொள்ளவும். கத்திரிக்காய்களுக்கு உள்ளே மசாலா இறங்க வேண்டும் அல்லவா. அதனால் அதன் நடுவே சின்ன சின்ன கோடு போட்டுக்கோங்க. மீன் வருவதற்குள் மசாலா இறங்க வேண்டும் என்றால் என்ன செய்வோம். அதேபோலத்தான்.

- Advertisement -

அடுத்து இப்போது ஒரு மசாலா கலவை தயார் செய்ய வேண்டும். ஒரு சிறிய பௌலில் மிளகாய் தூள் 1 ஸ்பூன், தனியா தூள் 1 ஸ்பூன், சீரகப்பொடி 1/2 ஸ்பூன், கரம் மசாலா 1/2 ஸ்பூன், மஞ்சள் தூள் 2 சிட்டிகை, உப்பு தேவையான அளவு, கடலை மாவு 1 டேபிள் ஸ்பூன், போட்டு இதில் கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி பேஸ்ட் போல தயார் செய்து கொள்ளவும். (இதில் வாசத்திற்கு தேவை என்றால் கரம் மசாலா, கஸ்தூரி மேத்தி சேர்க்கலாம். கூடவே புளிப்பு சுவைக்கு கொஞ்சமாக எலுமிச்சை பழச்சாறும் சேர்த்துக் கொள்ளலாம்).

இந்த பேஸ்டை வெட்டி வைத்திருக்கும் கத்திரிக்காய்க்கு மேல் தடவி, 1/2 மணி நேரம் அப்படியே ஊற வைத்து விடுங்கள். கடாயில் 2 லிருந்து 3 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றிக் கொள்ளவும். ஒரு அகலமான தட்டில் கொஞ்சம் ரவை கொட்டிக்கோங்க. மசாலாவில் ஊறிய இந்த கத்திரிக்காய்களை அந்த ரவையில், டிப் செய்து கடாயில் சூடாகிக் கொண்டிருக்கும் எண்ணெயில் போட்டு கத்தரிக்காயை மிதமான தீயில் இரண்டு பக்கமும் பொன்னிறம் வரும் வரை சிவக்க விட்டு எடுக்க வேண்டும்.

- Advertisement -

கத்தரிக்காய் மேல் பகுதி முழுவதிலும், அந்த ரவை ஒட்டும் படி கத்திரிக்காயை, ரவையில் போட்டு பிரட்டி எடுத்துக்கோங்க. கருணைக்கிழங்கு எண்ணெய் பத்தை போடுவோம் அல்லவா. அதேபோல தோசை கல்லில் இந்த கத்திரிக்காய் போட்டு பொன்முறுவலாக வறுத்து எடுத்து ருசித்து பாருங்கள். உங்களுக்குள் இந்த டேஸ்ட் ரொம்ப ரொம்ப பிடிக்கும். பருப்பு சாதம், தயிர் சாதம், வெரைட்டி ரைஸுக்கெல்லாம் செம சைடிஷ் இது. லஞ்ச் பாக்ஸ்க்கும் கொடுத்து விடலாம்.

இதையும் படிக்கலாமே: இந்த ஒரு மலரை வைத்து மகாலட்சுமி பூஜை செய்தால், தீர்க்க முடியாத கடனும் தீர்ந்துவிடும். வரவேண்டிய தொகையும் விரைவில் வந்துவிடும்.

மிதமான தீயில் தான் கத்திரிக்காயை வேக வைக்க வேண்டும். அப்போதுதான் கத்திரிக்காய் உள்பக்கம் வரை வேகும். இல்லை என்றால் மேலே தீய்ந்துவிடும். உள்ளே வேகாமல் இருக்கும். அதை மட்டும் கொஞ்சம் பாத்துக்கோங்க. ரெசிபி பிடிச்சவங்க மிஸ் பண்ணாம ட்ரை பண்ணுங்க.

சற்று முன்