வெள்ளிக்கிழமை பச்சை கற்பூர பரிகாரம்

mahalashmi8
- Advertisement -

பெரும்பாலானவர்களுடைய வீட்டில் இன்று தலைவிரித்து ஆட கூடிய பிரச்சனை இந்த பண பிரச்சனை. செலவுக்கு போதுமான வருமானம் இல்லை. வீட்டில் கடன் சுமை, கண் திருஷ்டியால் பிரச்சனை, வந்த வருமானம் எல்லாம் வீண் செலவு ஆகிறது. வீட்டில் நிம்மதி இல்லை, சண்டை சச்சரவு ஒரு பக்கம், இப்படி ஒருசேர எல்லா பிரச்சனைகளுக்கும் ஒட்டுமொத்த தீர்வை காணும்படியான எளிமையான ஒரு பரிகாரத்தை தான் இன்று நாம் பார்க்கப் போகின்றோம்.

இந்த பரிகாரம் ஒரு யாகம் வளர்த்திய பலனை உங்களுக்கு கொடுக்கும் என்றால் அது மிகையாகாது. வீட்டிலேயே குறைந்த செலவில் யாகம் வளத்திய பலனை பெற்றுத்தரும் அந்த பரிகாரத்தை எப்படி செய்வது ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோமா.

- Advertisement -

பச்சைக் கற்பூரம் யாகம்

இந்த பரிகாரத்திற்கு நமக்கு தேவை பச்சை கற்பூரமும், 1 ஸ்பூன் நெய்யும் இருந்தால் போதும். ஒரு பித்தளை தாம்பூல தட்டை உங்களுடைய வரவேற்பு அறைக்கு நடுப்பகுதியில் வைத்து விடுங்கள். முதலில் குலதெய்வத்தை நினைத்து ஒரு சின்ன பச்சை கற்பூர துண்டை அந்தத் தட்டில் வைத்து, அதன் மேலே நெய்யை ஊற்றவும்.

அந்த பச்சை கற்பூரத்தை திருப்பி வைத்து இன்னொரு பக்கத்திலும் நெய் ஊற்றி விடுங்கள். நெய்யில் இந்த பச்சை கற்பூரம் முழுவதுமாக நனைந்திருக்க வேண்டும். பிறகு ஒரு தீப்பெட்டியின் மூலம் இதற்கு நெருப்பு மூட்டவும். பச்சைக் கற்பூரம் நெய்யோடு சேர்த்து தானாக எரியட்டும். இந்த பச்சை கற்பூர யாகத்தை சுற்றி வீட்டில் இருக்கும் உறுப்பினர்கள் அனைவரும் அமர்ந்து கொள்ளலாம். தவறு கிடையாது. மகாலட்சுமியை மனதார பிரார்த்தனை செய்யுங்கள்.

- Advertisement -

உங்கள் குடும்ப கஷ்டம் தீர வேண்டும் என்று வேண்டிக் கொண்டால் வருமான தடை விலகும். வீட்டில் இருக்கும் கண் திருஷ்டி விளகும். பொன் பொருள் சேர்க்கை இருக்கும். செல்வ வளம் அதிகரிக்கும். வீட்டில் சண்டை சச்சரவுகள் குறையும் என்பது நம்பிக்கை. அந்த கற்பூரம் தானாக எரிந்து அணையட்டும் நீங்களே குளிர வைக்காதீங்க. வெள்ளிக்கிழமை காலை 6-7 மணிக்கு இந்த பரிகாரத்தை செய்யலாம்.

இதையும் படிக்கலாமே: தேய்பிறை சஷ்டியில் சொல்ல வேண்டிய மந்திரம்

முடியாதவர்கள் மாலை 6 மணிக்கு மேல் வெள்ளிக்கிழமை பூஜையை வீட்டில் செய்து முடித்துவிட்டு, இந்த பரிகாரத்தை செய்யுங்கள். நிச்சயம் நல்ல ஒரு பாசிட்டிவ் எனர்ஜி உங்கள் வீட்டிற்கு கிடைக்கும். ஆயிர கணக்கில் செலவு செய்து யாகம் வளத்திய பலனை ஒரு துண்டு பச்சை கற்பூரம், 1 ஸ்பூன் நெய்யின் மூலம் பெற முடியும் என்பதை உங்களால் நிச்சயம் உணர முடியும். தொடர்ந்து ஒரு ஐந்து வெள்ளிக்கிழமைகள் இதை செய்து வாருங்கள். நல்லதே நடக்கும் என்ற தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -