காய்ந்த பச்சை பட்டாணியை வைத்து ஹோட்டல் ஸ்டைலில் கமகமக்கும் குருமா. சப்பாத்தி, பூரி, ஆப்பம், இடியாப்பம், தோசை, இதற்கெல்லாம் பக்காவான சைட் டிஷ் இது.

kuruma
- Advertisement -

பெரும்பாலும் எல்லா நேரங்களிலும் ஃபிரஷ்ஷாக இருக்கக்கூடிய பட்டாணி நமக்கு கிடைக்காது. அதற்காக சாயம் போட்ட பட்டாணி வாங்கி அடிக்கடி சமைக்கவும் முடியாது. இதற்கு பதிலாக மளிகை கடைகளில் காய்ந்த பச்சை பட்டாணி நமக்கு கிடைக்கும். அதை வாங்கி வந்து சமைத்து சாப்பிட்டாலும் உடம்புக்கு நல்லது தான். காய்ந்த பட்டாணியை வைத்து சூப்பரான ஒரு குருமா சுலபமாக எப்படி வைப்பது என்பதை பற்றிய ரெசிபி இதோ உங்களுக்காக.

செய்முறை

இதற்கு 100 கிராம் அளவு காய்ந்த பச்சை பட்டாணியை எடுத்து ஒரு பாத்திரத்தில் போட்டு அந்த பட்டாணி மூழ்கும் அளவுக்கு தண்ணீரை ஊற்றி ஊற வைத்து விடுங்கள். 8 மணி நேரம் இது அப்படியே ஊறட்டும். ஊறி வந்த பச்சை பட்டாணியை ஒரு முறை நன்றாக கழுவி விட்டு, அந்த பட்டாணியை மட்டும் எடுத்து குக்கரில் போட்டு மீண்டும் இந்த பச்சை பட்டாணி முழுவதும் அளவிற்கு தண்ணீர் ஊற்றி தேவையான அளவு உப்பு போட்டு ஹை ஃபிளேமில் 2 விசில் விட்டு வேகவைத்து எடுத்துக் கொள்ளவும்.

- Advertisement -

பச்சைப்பட்டாணி தோல் உரிந்து கொழ கொழன்னு வேகக் கூடாது. அதே சமயம் வேகாமலும் இருக்கக் கூடாது. பட்டாணி வேக வைக்கக்கூடிய பக்குவம் ரொம்ப ரொம்ப முக்கியம். விசில் வரட்டும் இதற்குள் ஒரு மிக்ஸி ஜாரை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் கிராம்பு 2, சோம்பு 1 ஸ்பூன், கசகசா 1 ஸ்பூன், முந்திரி பருப்பு 5 லிருந்து 6, துருவிய தேங்காய் 1 கப், போட்டு கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி இதை விழுதாக அரைத்து இதையும் தனியாக வைத்துக் கொள்ளுங்கள். இதற்குள் விசில் வந்து வேக வைத்த பச்சை பட்டாணி தயாராக இருக்கும். வேக வைத்த தண்ணீரோடு அது அப்படியே இருக்கட்டும்.

அடுப்பில் ஒரு கடாயை வைத்துக் கொள்ளவும். அதில் 2 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, கிராம்பு, பட்டை, ஏலக்காய், இதை தாளித்துக் கொள்ளவும். பிறகு பொடியாக நறுக்கிய வெங்காயம் 2 கைப்பிடிப்பு, அளவு போட்டு பொன்னிறமாக வதக்குங்கள். அடுத்து இஞ்சி பூண்டு விழுது 1 டேபிள் ஸ்பூன், நறுக்கிய தக்காளி பழம் 2, இந்த மசாலாவுக்கு தேவையான அளவு உப்பு, புதினா இலை 10, போட்டு மீண்டும் எல்லா பொருட்களையும் வதக்கத் தொடங்குங்கள்.

- Advertisement -

தக்காளி குழைய குழைய வதங்கி வந்தவுடன், மிளகாய் தூள் 1 ஸ்பூன், மிளகுத்தூள் 1/4 ஸ்பூன், மஞ்சள் தூள் 2 சிட்டிகை, போட்டு எல்லா பொருட்களையும் நன்றாக கலந்து விட்டு, குக்கரில் வேக வைத்திருக்கும் பச்சை பட்டாணியை தண்ணீரோடு இதில் ஊற்றி ஒரு மூடி போட்டு மூன்று நிமிடம் கொதிக்க விடவும்.

அதன் பிறகு மிக்ஸி ஜாரில் அரைத்து வைத்திருக்கும் தேங்காய் விழுதை இதோடு ஊற்றி எல்லாவற்றையும் நன்றாக கலந்து விட்டு தேவையான அளவு தண்ணீரையும் ஊற்றி கொதிக்க விடுங்கள். உப்பு சரி பார்த்துக் கொள்ளுங்கள். தேவைப்பட்டால் போட்டுக் கொள்ளலாம். தேங்காயில் நாம் சில மசாலா பொருட்களை அப்படியே தான் சேர்த்திருக்கிறோம் அல்லவா. அது எல்லாம் பச்சை வாடை போக பத்து நிமிடம் மிதமான தீயில் கொதிக்கட்டும். ஒரு மூடி போட்டு கொதிக்க வையுங்க. இடையிடையே எடுத்து கலந்து கொடுங்க.

இதையும் படிக்கலாமே: புகழ் பெற்ற ரத்னா கபே அரைத்து விட்ட டிபன் சாம்பார் இப்படி தாங்க செய்யனும். இது வரைக்கும் செய்யலைன்னா உடனே செஞ்சு சாப்பிடுங்க. அப்படியே ஓட்டல்ல சாப்பிட மாதிரியே இருக்கும்.

குருமா நன்றாக கொதித்து திக் ஆகி வந்ததும் இறுதியாக கொத்தமல்லி தலையை தூவி பரிமாறினால் சுட சுட சப்பாத்தி, பூரி, ஆப்பம், இடியாப்பம், இவைகளுக்கு செம சைடிஷ்ங்க. டேஸ்ட் சும்மா செமையா இருக்கும். மிஸ் பண்ணாம ரெசிபி ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -