புகழ் பெற்ற ரத்னா கபே அரைத்து விட்ட டிபன் சாம்பார் இப்படி தாங்க செய்யனும். இது வரைக்கும் செய்யலைன்னா உடனே செஞ்சு சாப்பிடுங்க. அப்படியே ஓட்டல்ல சாப்பிட மாதிரியே இருக்கும்.

rathna cafe tiffen sambar
- Advertisement -

சாம்பாரை பொறுத்த வரையில் பல வகையில் வைக்கலாம். இதில் டிபனுக்கு ஒரு விதமாகவும், சாப்பாட்டிற்கு ஒரு விதமாகவும் செய்யலாம். இப்பொழுதெல்லாம் பருப்பு இல்லாமல் கூட சாம்பார் வைக்கும் முறைகள் வந்து விட்டது. என்ன இருந்தாலும் ஒரு சில ஹோட்டல்களின் சாம்பார் மிகவும் ஃபேமஸ் அந்த சாம்பார் நம் வீட்டில் செய்யும் சாம்பர்களை போல அல்லாமல் ரொம்பவே வித்தியாசமாக அதே நேரத்தில் சுவையாகவும் இருக்கும். இப்போது அந்த வகையில் ரத்னா கபே ஹோட்டல் ஸ்டைலில் அரைத்து விட்ட டிபன் சாம்பார் எப்படி செய்வது என்று தான் இந்த சமையல் குறிப்பு பதிவில் பார்க்க போகிறோம்.

செய்முறை

இந்த சாம்பார் செய்ய முக்கால் பாசிப்பருப்பு, கால் கப் துவரம் பருப்பு இரண்டையும் எடுத்து குக்கரில் சேர்த்துக் கொள்ளுங்கள். இதை இரண்டு தண்ணீர் ஊற்றி நன்றாக அலசிய பிறகு கால் கப் மஞ்சள் பூசணிக்காய் தோல் விதை எல்லாம் நீக்கி நறுக்கிய பிறகு இந்த பருப்பில் சேர்த்துக் கொள்ளுங்கள். இத்துடன் கால் டீஸ்பூன் பெருங்காயம், கால் டீஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து பருப்பு அதிகம் குழையாமல் மலர்ந்து வரும் வரை விசில் விட்டு அடுப்பை அணைத்து விடுங்கள்.

- Advertisement -

அடுத்து இந்த சாம்பாருக்கு ஒரு மசாலாவை அரைக்க வேண்டும். அதற்கு அடுத்து கடாய் வைத்து சூடானவுடன் ஒரு டீஸ்பூன் கடலைப்பருப்பு, ஒரு டீஸ்பூன் உளுத்தம் பருப்பு, ஒரு டீஸ்பூன் துவரம் பருப்பு சேர்த்து பருப்புகளின் நிறம் பாதி வரை மாறும் வரை வருத்துக் கொள்ளுங்கள். அதன் பிறகு ஒரு டீஸ்பூன் சீரகம், கால் டீஸ்பூன் வெந்தயம், கால் டீஸ்பூன் மிளகு, எட்டு வரமிளகாய், நான்கு ஸ்பூன் தனியா இவை அனைத்தையும் சேர்த்து நல்ல வாசம் வரும் வரை வறுத்துக் கொள்ளுங்கள். கடைசியாக இரண்டு டேபிள் ஸ்பூன் துருவிய தேங்காயை சேர்த்து தேங்காயின் ஈரப்பதம் போகும் வரை வறுத்த பிறகு அடுப்பை அணைத்து விடுங்கள்.

வறுத்த இந்த மசாலாவை தனியாக ஒரு தட்டில் கொட்டி ஆற வைத்து அதன் பிறகு மிக்ஸி ஜாரில் சேர்த்து லேசான கொரகொரப்பு தன்மையுடன் அரைத்துக் கொள்ளுங்கள். இந்த நேரத்திற்குள்ளாக பருப்பு வெந்து விசில் இறங்கி இருக்கும். இப்போது அடுப்பில் இன்னொரு கடாய் வைத்து இரண்டு டேபிள் ஸ்பூன் நெய் ஊற்றிய பிறகு ஒரு ஸ்பூன் கடுகு, அரை ஸ்பூன் சீரகம் சேர்த்து பொரிய விடுங்கள். அதன் பிறகு 20 சின்ன வெங்காயம், ஒரு கொத்து கருவேப்பிலை சேர்த்து வெங்காயம் பாதி அளவுக்கு வதங்கிய பிறகு ரெண்டு மீடியம் சைஸ் தக்காளி பொடியாக நறுக்கி இதில் சேர்த்துக் கொள்ளுங்கள். தக்காளி நன்றாக குழைந்து வதங்க வேண்டும்.

- Advertisement -

இதன் பிறகு நாம் ஏற்கனவே அரைத்து வைத்த மசாலாக்கள் இதில் சேர்த்து ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி கொதிக்க வையுங்கள். இது ஒரு கொதி வருவதற்குள்ளாக ஒரு சிறிய நெல்லிக்காய் அளவு புளியை கரைத்து அந்த தண்ணீரையும் கொதிக்கும் சாம்பாரில் ஊற்றி புளியின் பச்சை வாடை போகும் வரை கொதிக்க விடுங்கள். அதன் பிறகு நாம் வேக வைத்து பருப்பில் உள்ள பூசணிக்காய் கரண்டி வைத்து லேசாக மசித்து விட்டு பருப்பை கொதித்து கொண்டிருக்கும் சாம்பாரில் ஊற்றி அரை ஸ்பூன் உப்பு சேர்த்து நன்றாக கலந்து கொதிக்க விடுங்கள்.

இதையும் படிக்கலாமே: வெறும் அரிசி மாவு இருந்தா போதும் கேரள ஸ்டைலில் சுவையான ரைஸ் பத்திரி செய்து விடலாம். ரொம்பவே டேஸ்ட்டான இந்த ரெசிபியை எப்படி மிஸ் பண்ணுணோம்ன்னு கண்டிப்பா ஃபீல் பண்ணுவீங்க.

பருப்பு சேர்த்த பிறகு சாம்பார் அதிக நேரம் கொதிக்க கூடாது. எனவே ஒரு கொதி வந்தவுடன் கால் டீஸ்பூன் வெல்லம் சேர்த்து ஒரு கைப்பிடி கொத்தமல்லியை பொடியாக நறுக்கி இதில் சேர்த்த பிறகு அடுப்பை அணைத்து விடுங்கள். நல்ல கமகமவென்று வாசத்துடன் ரத்னா கபே ஸ்டைலில் அரைத்து விட்ட டிபன் சாம்பார் தயார். இந்த சாம்பாரை ஒரு முறை நீங்கள் வீட்டில் செஞ்சு பாருங்க எல்லாரும் உங்களை நிச்சயமாக பாராட்டுவாங்க.

- Advertisement -