கடைகளில் விற்கும் மசால்வடையை மிஞ்சும் சுவையில் சூப்பரான பச்சை பட்டாணி பருப்பு வடை.  இப்படி வடை சுட்டா, இதன் வாசத்துக்கு பக்கத்து வீட்டில் இருப்பவர்கள் கூட 2 வடை கொடுங்கன்னு கேட்பாங்க.

vadai1
- Advertisement -

இன்று பச்சை பட்டாணி பருப்பு சேர்த்த மசால் வடை மொறுமொறுப்பாக எப்படி சுடுவது என்ற ரெசிபி தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள போகின்றோம். இதை ஆமை வடை, பருப்பு வடை எப்படி வேண்டும் என்றாலும் சொல்லலாம். இதன் ருசி அட்டகாசமாக இருக்கும். அப்படியே சுட்டு எடுக்கும் போதே வீட்டில் இருப்பவர்கள் இதை சுட சுட சாப்பிட்டு காலி செய்து விடுவார்கள். ஈவினிங் சுட சுட டீ குடிக்கும் போது, கொஞ்சம் மழை நேரத்தில் இந்த ஈவினிங் ஸ்நாக்ஸ் டாப்பு டக்கரா இருக்கும். வாங்க நேரத்தை கடத்தாமல் ரெசிபியை பார்த்து விடுவோம்.

செய்முறை 

இதற்கு நமக்கு காய்ந்த பச்சை பட்டாணி 3/4 கப், கடலைப்பருப்பு 1/4 கப், தேவைப்படும். கடலைப்பருப்பு சேர்க்காமலும் இந்த பருப்பு வடை செய்யலாம். இருந்தாலும் தேவைப்படுபவர்கள் கொஞ்சம் கடலைப்பருப்பையும் சேர்த்து இந்த வடையை சுட்டுப் பாருங்க. ஆங்காங்கே கடி படும் போது கூடுதல் ருசி கிடைக்கும். இன்று பச்சை பட்டாணியுடன், கடலைப்பருப்பு சேர்த்த மொறுமொறு பருப்பு வடையை தான் பார்க்கப் போகின்றோம்.

- Advertisement -

பச்சை பட்டாணி 3/4 கப் ஒரு பாத்திரத்தில் போட்டு 4 மணி நேரம் ஊற வைக்கவும். கடலைப்பருப்பு 1/4 கப் ஒரு பாத்திரத்தில் போட்டு இரண்டு மணி நேரம் ஊற வைத்தால் கூட போதும். இது இரண்டும் அப்படியே ஊறட்டும். அடுத்து ஒரு மிக்ஸி ஜாரை எடுத்து பூண்டு பல் 15, வரமிளகாய் 3, தோல் சீவியை இஞ்சி 1 இன்ச், சோம்பு 1 ஸ்பூன், சீரகம் 1/4 ஸ்பூன், கருவேப்பிலை 1 கொத்து, இந்த பொருட்களை எல்லாம் போட்டு கொரகொரப்பாக ஒரு ஓட்டு மட்டும் ஒட்டிக்கோங்க.

அடுத்தபடியாக ஊறிக் கொண்டிருக்கும் பச்சைப்பட்டாணி, ஊறிக் கொண்டிருக்கும் கடலை பருப்பு இந்த 2 பொருட்களையும் போட்டு தேவையான அளவு உப்பு போட்டு, கொரகொரப்பாக இந்த இரண்டு பொருட்களையும் அரைத்துக் கொள்ள வேண்டும். உங்கள் மிக்ஸி ஜாரில் இடம் பத்தாது என்றால் பச்சை பட்டாணியை முதலில் போட்டு அரைத்து எடுத்து விட்டு, பிறகு கடலை பருப்பை போட்டு அரைத்து எடுத்துக் கொள்ளலாம்.

- Advertisement -

இப்போது எல்லா மாவையும் ஒன்றாக ஒரு அகலமான பாத்திரத்தில் போட்டு, பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் ஒன்று போட்டு, பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தழை, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் 1 போட்டு, உங்கள் கையை கொண்டு நன்றாக பிசைந்தால் சூப்பரான மாவு தயார்.

இந்த மாவை தண்ணீர் ஊற்றாமல் கொரகொரப்பாக அரைத்து எடுக்க வேண்டும். மாவு அரைக்கக் கூடிய பக்குவம் ரொம்ப ரொம்ப முக்கியம். இப்போது அடுப்பில் கடாயை வைத்து வடை சுட்டு எடுப்பதற்கு தேவையான எண்ணெயை ஊற்றி சூடு செய்யுங்கள்.

இதையும் படிக்கலாமே: வயிற்றில் இருக்கும் எப்பேர்ப்பட்ட புண்ணாக இருந்தாலும் அதை ஆற்றும் வல்லமை படைத்த மனத்தக்காளி கீரையை வைத்து இப்படி ஒரு முறை சட்னி செய்து பாருங்கள். கீரை சாப்பிட பிடிக்காதவர்கள் கூட இந்த சட்னியை விரும்பி சாப்பிடுவார்கள்.

இதற்குள் இந்த பருப்பு வடையை தேவையான சைஸில் அழுத்தம் கொடுத்து உருண்டைகளாக பிடித்துக் கொள்ளுங்கள். எண்ணெய் காய்ந்ததும் உருட்டிய வடை மாவை உள்ளங்கைகளில் வைத்து வடையை தட்டி தட்டி எண்ணெயில் விட்டு சுட்டு எடுக்க வேண்டும். எண்ணெய் காயாமல் வடையை எண்ணெயில் விட்டால் எண்ணெய் குடிக்கும். ஆகவே நல்லா சூடான எண்ணெயில் இந்த வடையை போட்டு பொன்னிறமாக சிவக்க விட்டு எடுக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. அதற்காக வடையை உள்ளே வேகாமல், மேலே கருக விட்டு எடுக்காதீங்க. பார்த்து பக்குவமா வடையை சுட்டு ருசித்து பாருங்கள். இதனுடைய வாசம் அப்பப்பா பக்கத்து வீட்டு வரைக்கும் வீசும்.

- Advertisement -