தலைக்கு குளிக்கும் போது இனி ஒரு முடி கூட உங்கள் தலையிலிருந்து உதிராது. பசை போட்டு உங்கள் முடியை, தலையோடு ஒட்டி வைக்கும் பச்சைப்பயிறு ஹேர் பேக் ட்ரை பண்ணி பாருங்க.

hair3
- Advertisement -

சில பேருக்கு தலைக்கு குளிக்கும் போது அப்படியே தலை முடி உதிர்ந்து போவதை பார்க்க முடியும். சிலபேருக்கு தலையில் சீப்பை வைத்து வாரினால் முடி உதிர்வு அதிகமாக இருக்கும். இதற்கு என்ன செய்யலாம். ரொம்ப ரொம்ப சுலபமான ஒரு வழி உள்ளது. அரிசியை முதல் முறை கழுவி, அந்த தண்ணீரை கீழே ஊற்றி விட விடவேண்டும். அதன் பின்பு நல்ல தண்ணீரை ஊற்றி அரிசியை ஊற வைத்துவிட வேண்டும். ஊறவைத்த தண்ணீரை, அதாவது அரிசி களைந்த தண்ணீரை சேகரித்து வைத்துக் கொள்ளுங்கள். தலைக்கு ஷாம்பு போட்டு நன்றாக அழுக்கு போக்கி விடுங்கள். அடுத்து நல்ல தண்ணீரை ஊற்றி உங்கள் தலையை அலசி விடுங்கள். அதன் பின்பு இறுதியாக இந்த அரிசி களைந்த தண்ணீரை தலையில் ஊற்றி தலையை அலசி விட வேண்டும். இப்படி செய்தால் உடனடியாக ஒரு சில நாட்களிலேயே உங்களுக்கு முடி உதிர்வு குறையும். இரண்டு மடங்கு வேகமாக முடி வளரத் தொடங்கும். இதுமுதல் டிப்ஸ்.

இது அல்லாமல் இன்னொரு ஹேர் பேக் உள்ளது. இந்த ஹேர் பேக்கை போட்டால் நிரந்தரமாக முடி உதிர்வு குறைந்து, உங்களுடைய முடி, திக்காக, அடர்த்தியாக வளரத் தொடங்கும். திக்காக, அடர்த்தியாக இரண்டிற்கும் ஒரேஅர்த்தம் தானே என்று நினைக்க வேண்டாம். ஒவ்வொரு முடியும் சில பேருக்கு பலவீனமாக இருக்கும். ஒரு முடியை கையில் எடுத்து இரண்டாக இழுந்தால் உடனடியாக அருந்து விடும். அப்படி முடி அருபடகூடாது. ஒவ்வொரு முடியும் திக்காக இருக்க வேண்டும். அடர்த்தியாக மண்டைப் பகுதியில் முடி இருக்க நெருக்கமாக வளர வேண்டும். சரி அந்த ஸ்பெஷல் ஹேர் பேக்கை பார்க்கலாம் வாங்க.

- Advertisement -

முந்தைய நாள் இரவே ஒரு சிறிய கிண்ணத்தில் 2 ஸ்பூன் பச்சை பயறு, 2 ஸ்பூன் வெந்தயம் போட்டு தண்ணீர் ஊற்றி ஊற வைத்துவிடுங்கள். இன்னொரு கிண்ணத்தில் 2 டேபிள்ஸ்பூன் அரிசி போட்டு தண்ணீர் ஊற்றி ஊற வைத்து விட வேண்டும். இந்த மூன்று பொருட்களும் தண்ணீரில் 8 மணிநேரம் ஊற வேண்டும். அப்போதுதான் அது நன்றாக புளித்து இருக்கும்.

முந்தைய நாள் இரவு ஊற வைத்த அரிசியை ஒரு குக்கரில் போட்டு, கொஞ்சம் நிறைய தண்ணீர் ஊற்றி குழைய குழைய வேகவைத்து எடுத்துக்கொள்ளுங்கள். பாத்திரத்தில் வேகவைத்து எடுத்துக் கொண்டாலும் அது உங்களுடைய சவுரியம். வேக வைத்த சாதத்தை லேசான கஞ்சியோடு அப்படியே மிக்சி ஜாரில் போட்டு விடுங்கள். அடுத்தபடியாக, முன்னைய நாள் ஊற வைத்த வெந்தயத்தையும், பச்சை பயிரையும் இந்த சாதத்தோடு போட்டு, வெந்தயம் பச்சை பயிறு ஊறிய தண்ணீரை ஊற்றி மொழுமொழுவென இந்த பேக்கை அரைத்துக் கொள்ள வேண்டும். (மிக்ஸி ஜாரில் வேக வைத்த சாதம், ஊறிய பச்சை பயிறு, வெந்தயம் 3 பொருட்களையும் போட்டு அரைக்கவேண்டும். அவ்வளவு தான்.)

- Advertisement -

அரைத்த இந்த விழுதை ஒரு சிறிய கிண்ணத்தில் மாற்றிக் கொள்ளுங்கள். இந்த விழுதுடன் 2 அல்லது 3 ஸ்பூன் விளக்கெண்ணெய் சேர்த்து கலந்து இந்த பேக்கை அப்படியே உங்களுடைய மயிர் கால்களில் இருந்து முடியின் நுனி பகுதி வரை மொத்தமாக அப்ளை செய்து 1 மணி நேரம் ஊற வைத்துவிட்டு, அதன் பின்பு தலைக்கு குளித்துப் பாருங்கள். ஒரு முடிகூட உங்களுக்கு கொட்டுவதற்கு வாய்ப்பு குறைவு.

உங்களுக்கு விளக்கெண்ணை ஒத்துவராது சளி பிடிக்கும் காய்ச்சல் வரும் என்றால் தேங்காய் எண்ணெய், பாதாம் எண்ணெய், ஆலிவ் ஆயில் போன்ற எண்ணெய்களை பயன்படுத்தி கொள்ளலாம். அரிசி வெந்தயம் பச்சை பயிறு ஊற வைத்த தண்ணீரை கீழே கொட்டி விடாமல், மீதமிருந்தால் அதை தலையை அலசிக் கொள்ள பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

இந்தப் பேக்கை முதல் முறை போட்டு உடனே உங்களுடைய முடியில் வித்தியாசத்தை பார்க்கலாம். வாரத்தில் ஒரு நாள் தொடர்ந்து இந்த பேக்கை ட்ரை பண்ணி பாருங்க. மூன்று மாதத்தில் உங்களுடைய முடியில் உங்களுக்கே வித்தியாசம் தெரியும்.

- Advertisement -