மனக்குழப்பம் நீங்கி, எப்போதும் தெளிவான முடிவுகளை எடுக்க திங்கட்கிழமை அன்று இந்த 2 தீபங்கள் ஏற்றினால் போதும்.

vilakku-pray
- Advertisement -

மனோகாரகன் சந்திரபகவான் என்பது நாம் எல்லோரும் அறிந்த ஒரு விஷயம் தான். மனது சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு தரக்கூடிய கிரகம் இந்த சந்திரன். ஜாதக கட்டத்தில் சந்திர பகவான் நமக்கு சாதகமாக அமையவில்லை என்றால் நம்முடைய வாழ்க்கையில் நிறைய பிரச்சனைகள் ஏற்படும். நிறைய சமயங்களில் தடுமாற்றத்தோடு தவறான முடிவுகளை எடுத்து பெரிய பெரிய பிரச்சினைகளில் சிக்கிக் கொள்வோம். இது ஒருவகை பிரச்சனை. இரண்டாவதாக பார்ப்பதற்கு சிலர் அவ்வளவு அழகாக இருப்பார்கள். ஆனால் முகத்தில் கலை என்பதே இருக்காது. கலை இழந்து, முகம் எத்தனை அழகாக இருந்து என்ன பயன். கருப்பாக இருப்பினும் கலையாக இருப்பதுதானே அம்சம்.

இதற்கு காரணமும் சந்திர பகவான், ஜாதகத்தில் வலுவாக இல்லை என்பதுதான். சரி இப்படி சந்திர பகவான் வலுவாக இல்லாத சமயத்தில் ஆன்மீக ரீதியாக என்ன செய்தால் சந்திர பகவானின் அனுக்கிரகத்தை நாம் பெறலாம் என்று தெரிந்துகொள்வோம் வாருங்கள்.

- Advertisement -

திங்கட்கிழமை காலை எழுந்து சுத்தமாக குளித்துவிட வேண்டும். முடிந்தவரை திங்கட்கிழமை 6 மணியிலிருந்து 7 மணிக்குள் இந்த தீபத்தை ஏற்றலாம். முடியவில்லை என்றால் காலை 9.00 மணிக்கு முன்பு இந்த தீபத்தை ஏற்றி விடுங்கள். காலை தீபம் ஏற்றவே முடியாது என்ற சூழ்நிலை இருப்பவர்கள், மாலை 6 மணியிலிருந்து 8 மணிக்குள் இந்த தீபத்தை ஏற்றி சந்திர பகவானை வழிபாடு செய்யலாம்.

mavu

சுத்தமான பச்சரிசி மாவு, ஒரு வாழை இலை, கொஞ்சம் மஞ்சள் பொடி, இரண்டு மண் அகல் விளக்குகள், நெய் அல்லது நல்லெண்ணை விளக்கேற்ற இந்த பொருட்கள் தேவை. வாழை இலையை பூஜை அறையில் வைத்து அதன் மேலே பச்சரிசி மாவைத் தூவி, பச்சரிசி மாவில் இரண்டு மஞ்சள் பொட்டு வைத்து, அதன் மேலே மண் அகல் தீபங்களை வைத்து, நல்லெண்ணெய் ஊற்றி திரி போட்டு தீபம் ஏற்றி மனதார சந்திர பகவானை பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். தீபம் கிழக்கு பார்த்தவாறு எறிய வேண்டும்.

- Advertisement -

பூஜை அறையிலேயே அமர்ந்து கண்களை மூடி ‘ஓம் சந்திர பகவானே போற்றி’ என்று சந்திர பகவானின் நாமத்தை உங்களால் எத்தனை முறை உச்சரிக்க முடியுமோ அத்தனை முறை உச்சரியுங்கள். தொடர்ந்து இத்தனை வாரங்கள் தான் இந்த தீபமேற்ற வேண்டும் என்ற அவசியம் கிடையாது. உங்களால் எப்போதெல்லாம் இந்த தீபத்தை ஏற்ற முடியுமோ அப்போதெல்லாம் ஏற்றி சந்திர பகவானை வழிபாடு செய்யலாம். அப்படி இல்லை என்றால் முக்கியமான தருணங்களில், முக்கியமான முடிவுகளை எடுக்க வேண்டிய சூழ்நிலை வரும்போது பரிகாரம் போல கூட இந்த வழிபாட்டை வீட்டில் செய்யலாம்.

sad

இந்த பரிகாரத்தை செய்து முடித்தவுடன் அந்த பச்சரிசி மாவை கோலம் போடுவதற்கு பயன்படுத்திக் கொள்ளலாம். தவறு கிடையாது. இந்த பூஜையை செய்த சில நாட்களிலேயே உங்களை அறியாமலேயே உங்களுக்குள் ஒரு தெளிவு ஏற்படும். தெளிவாக சிந்திக்க தொடங்கிவிடுவார்கள். மனகுழப்பம் படிப்படியாக குறைய தொடங்கும். முயற்சி செய்து பாருங்கள்.

- Advertisement -