பத்து ரூபாய் செலவில் பட்டுப்போல் பாத அழகை பெற வேண்டுமா? அதற்கான எளிய முறை இதோ.

leg
- Advertisement -

நம் முக அழகிற்கு காட்டும் அக்கறையில் பாதையளவு கூட நம் பாதங்களில் காட்டுவதில்லை. பாதங்களில் வெடிப்பு வந்து பின் புண்ணாகி அது வலி எடுத்த பிறகுதான் பாத வெடிப்புக்கான தீர்வை நோக்கி ஓடுகிறோம். நாம் தினந்தோறும் முகம் கை கால் போன்றவற்றிக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறோமோ, அதே அளவு முக்கியத்துவத்தை பாதத்திற்கும் கொடுக்க வேண்டும். பாத வெடிப்பிற்கு முக்கிய காரணம் உடல் வறட்சித் தன்மை தான். சிலருக்கு உப்பு தண்ணீர் பாதங்களில் பட்டாலும்,உடல் எடை கூடினாலும் பாத வெடிப்பு வருவதற்கான வாய்ப்பு உண்டு.

இதையெல்லாம் சரியான முறையில் நாம் கவனித்து பாதங்களை எப்போதும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். இதற்கு சாதாரணமாக வீட்டில் வெதுவெதுப்பான நீரில் உப்பு, கல்லை போட்டு பாதத்தை ஐந்து நிமிடமாவது ஊற வைத்து கழுவுவது, இதில் பேக்கிங் சோடா சேர்த்தும் பாதங்களை கழுவலாம். இரவில் படுக்கும் போது தேங்காய் எண்ணெய், அல்லது வேறு ஏதாவது ஒரு எண்ணெயை காலில் தேய்த்து கொண்டு படுப்பது போன்ற சில வழிமுறைகளை நாம் அன்றாடம் செய்து வந்தால் இது போன்ற பாத வெடிப்புகளை வராமலே தடுக்கலாம்.

- Advertisement -

பாத வெடிப்பு வராமல் பதுகாப்பது முக்கியம் தான். ஆனால் அப்படி வந்து விட்டால் என்ன செய்வது. அதற்க்கு தான் இந்த எளிய வழிமுறை. இதற்காக அதிக செலவும் செய்ய தேவை இல்லை, அது என்னவென்று பார்க்கலாம்.

முதலில் ஒரு உருளைக்கிழங்கில் பாதியளவு எடுத்து தோல் நீக்கி அதை காய் சீவும் சீவலில் நன்றாக சீவி சாறு பிழிந்து எடுத்துக் கொள்ளுங்கள். அதன் பிறகு ஒரு முட்டையின் மஞ்சள் கருவை இதில் சேர்த்து விடுங்கள். (வெள்ளை கரு வேண்டாம் எடுத்து வைத்த வெள்ளை கருவை வீணாக்க வேண்டாம். அதை உங்கள் தலை முடியில் தேய்த்து குளிக்கலாம் தலை முடி மிருதுவாக இருக்கும்) அதன் பின் சுத்தமான ஆலுவேரா ஜெல் 1 டீஸ்பூன் அளவு இதில் சேர்த்துக் கொள்ளுங்கள். (முடிந்த அளவு வீட்டில் இருக்கும் இயற்கையான ஜெல் இருந்தால் நல்லது) அதன் பிறகு பாதாம் எண்ணெய் 1 ஸ்பூன் இவை மூன்றையும் இரண்டு ஸ்பூன் ரோஸ் வாட்டர்யில் கலந்து கொள்ளுங்கள்.

- Advertisement -

இவைகளை நன்றாக கலந்து பாதங்களில் தேய்த்து 10 முதல் 15 நிமிடம் வரை தினமும் மசாஜ் செய்ய வேண்டும். இதைத் தொடர்ந்து செய்து வந்தால் பாதங்களில் உள்ள வெடிப்பு மறைந்து பட்டுப்போல் மாறி விடும். வெடிப்பு வந்து புண்ணாகி போன இடங்களை கூட இந்த பொருட்களைக் கொண்டு குணப்படுத்தி விடலாம்.

இதை தயார் செய்ய அதிக செலவும் கூட ஆகாது. இதில் பாதாம் எண்ணெய், மட்டும் தான் கடையில் வாங்க வேண்டி இருக்கும். மற்ற பொருட்கள் எல்லாம் நம் வீட்டிலே கிடைக்க கூடியவை தான். இப்படி எளிமையான இந்த முறையை பயன்படுத்தி வெடிப்பை போக்கி மிருதுவான பாத அழகை பெறுங்கள்.

- Advertisement -