பதவி உயர்வு, தொழில் விருத்தியடைய உதவும் மந்திரம்

amman-mantra-1

“உழைப்பினாலேயே இந்த உலகம் உயர்வு பெறுகிறது” என உழைப்பின் மகத்துவத்தை நமது நாட்டு வேதங்களும் போற்றுகின்றன. அந்த வகையில் இந்த உலகத்தில் ஒருவரை வாழ வைக்கும் எந்த ஒரு வேலையோ, தொழிலோ ஒன்று மற்றொன்றிற்கு குறைவானதல்ல. இன்றைய உலகத்தில் ஆண் பெண் என்ற பேதமில்லாமல் அனைவருமே தங்கள் தகுதிக்கேற்ற ஏதாவது ஒரு வேலையையோ, தொழிலையோ செய்கின்றனர். அப்படி வேலையில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வுகளும், தொழிலிருப்பவர்களுக்கு நல்ல பண வருமானம் கிடைப்பதற்கு இந்த மந்திரம் அதை துதிக்க வேண்டும்.

Amman

மந்திரம்:
“ஓம் ஐம் ஹ்ரீம் ஸ்ரீம்
சாமுண்டாயே விச்சே நமஹ”

தினமும் காலையில் எழுந்து, குளித்து முடித்து விட்டு, “சாமுண்டேஸ்வரி” தேவியின் படத்திற்கு முன்போ அல்லது அத்தேவியை மனத்தில் நினைத்தோ பழம் நிவேதனம் வைத்து, பத்திகள் கொளுத்தி வைக்க வேண்டும். பின்பு இம்மந்திரத்தை 108 எண்ணிக்கையில் மந்திர உரு ஜெபித்து, பின் நீங்கள் பார்க்கும் தொழிலுக்கோ அல்லது வேலைக்கோ செல்ல வேண்டும். இந்த மந்திர சக்தியின் மூலமாக பதவி உயர்வும், திருப்திகரமான லாபமும் ஈட்ட முடியும். அதோடு தொழில் விருத்தி அடைய இந்த மந்திரம் துணை நிற்கும்.

இதையும் படிக்கலாமே:
உடல் உபாதையை போக்கும் புதன் காயத்ரி மந்திரம்

English overview:
Here we have chamundeshwari mantra in Tamil. By chanting this mantra one can get promotion in job and if he is business man then there will be a huge improvement in business.