அறிவை தந்து உடல் உபாதையை போக்கும் புதன் காயத்ரி மந்திரம்

Budhan-Manthiram

மனிதனுக்கு கல்வியும் அறிவும் எவ்வளவு முக்கியமோ அதே போல உடல்நலமும் மிகவும் முக்கியம். இன்றைய காலகட்டத்தில் மனிதர்கள் பலருக்கும் சிறு வயதிலேயே நரம்பு தளர்ச்சி போன்ற நரம்பு சம்பந்தமான பல கோளாறுகள் வருகின்றன. நவகிரகங்களில் நரம்புகளில் ஆதிக்கம் செலுத்தும் புத பகவானை வழிபடுவதன் மூலம் நரம்பு சம்மந்தமான கோளாறுகள் நீங்கும். அதோடு கல்வியிலும் அறிவிலும் சிறந்து விளங்கும் ஆற்றலும் கிடைக்கும். இதோ அவருரிய காயத்ரி மந்திரம்.

Navagragham

புதன் காயத்ரி மந்திரம்:
“ஓம் கஜத்வஜாய வித்மஹே
சுக ஹஸ்தாய தீமஹி
தந்நோ புத ப்ரசோதயாத்”

இம்மந்திரத்தை புதன் கிழமைகளில் கோவில்களிலுள்ள புதன் பகவான் சந்நிதியிலோ அல்லது நம் வீட்டிலோ நல்லெண்ணெய் தீபம், ஏற்றி சிறிது பச்சைப்பயிர்களை நிவேதனம் வைத்து இம்மந்திரத்தை 108 முறை மந்திர உரு ஜெபிக்க வேண்டும். இதைத் தொடர்ந்து ஒவ்வொரு புதன் கிழமைகளிலும் செய்து வர நரம்பு கோளாறுகள் நீங்கும். அதோடு கல்வியும் அறிவும் மேம்படும்.

இதையும் படிக்கலாமே:
எத்தகைய நோயையும் போக்கும் தன்வந்திரி மந்திரம்

English Overview:
Here we have Budhan Gayatri mantra in Tamil. If one chant this mantra then he will get good education and he will be brainy.
.