நீங்கள் வைக்கும் செடியின் மண் வளம் நன்றாக இருக்க இந்த 1 பொருள் இப்படி போட்டால் போதுமே!

padikaram-lemon

பொதுவாக மண்ணின் வளம் குறைவாக இருந்தால் செடிகள் செழிப்பாக வளர்வதில்லை. பூச்செடிகள் முதல் காய்கறி செடிகள் வரை நாம் வளர்க்கும் ஒவ்வொரு செடிக்கும் அதனுடைய மண்வளம் சிறந்ததாக அமைவது மிகவும் முக்கியம். மண் வளத்தில் மிக முக்கிய பங்காற்றுவது அமிலம். அமிலத்தன்மை இருந்தால் தான் அந்த மண் வளம் சிறப்பானதாக இருக்கும். மழைக்காலங்களில் இயற்கையாகவே இந்த அமிலம் மழை நீரின் மூலம் செடிகளுக்கு கிடைத்து விடும். ஆனால் அதையும் தாண்டி நாம் கொடுக்கும் இந்த அமிலத்தன்மை இன்னும் மண்வளத்தை சிறப்பானதாக மாற்றும். அப்படியான ஒரு பொருள் என்ன? என்பதை தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

flower-garden

மண் வளத்தை அதிகரிக்க செய்யக்கூடிய இந்த ஒரு பொருள் சுலபமாக அனைவருக்கும் கிடைக்கக் கூடிய ஒன்று தான். ஆன்மீகம், ஆரோக்கியம், அழகியல் என்று அனைத்திலும் பெயர் போன இந்த ஒரு பொருள் மிகவும் சுவாரஸ்யமானது. பாறைகளில் இருந்து நேரடியாக வெட்டி எடுக்கும் இந்த பொருள் இயற்கையான அமிலமாக நமக்கு கிடைக்கிறது. தண்ணீரில் இருக்கும் கிருமிகளை அழிக்க இதை பயன்படுத்துவார்கள்.

அந்த பொருளை செடிகளுக்கு போடும் பொழுது செடியின் மண்வளம் சிறப்பானதாக மாறும். இதனால் செடிகள் நிறைய பூக்களையும், காய்கறிகளையும் நமக்கு கொடுக்கும். அதிலும் குறிப்பாக சிட்ரஸ் என்கிற அமிலம் நிறைந்துள்ள எலுமிச்சை, ஆரஞ்சு, திராட்சை, ஸ்ட்ராபெர்ரி போன்ற செடி வகைகளுக்கு அதிகமாக தேவைப்படுகின்றன.

gardening1

மழை நீரில் இருக்கும் அமிலம் இந்த ஒரு பொருளிலும் இருக்கிறது. மிகவும் இயற்கையான ஒரு பொருளைக் கொண்டு செடிகளின் வளர்ச்சியை நாம் சுலபமாக கையாள முடியும். சரி அது அப்படி என்ன பொருள் என்று பார்ப்போமா? அது வேறு ஒன்றுமே இல்லைங்க. தண்ணீர் சுத்திகரிப்பிற்கு பயன்படும் படிகாரம் தான். படிகாரத்தில் இருக்கும் சிட்ரஸ், சிட்ரஸ் வகை செடிகளுக்கு சிறப்பான வளர்ச்சியை கொடுக்கும்.

- Advertisement -

சிறிதளவு படிகாரத்தை எடுத்து அதனை நைசாக தூளாக்கிக் கொள்ளுங்கள். இதனை உங்களுடைய சிட்ரஸ் வகை செடிகளுக்கும் மற்ற வகை பூக்களைத் தரும் செடிகளுக்கும் வேர் பகுதியை ஒட்டி இல்லாமல் சற்றே தள்ளி ஒரு ஸ்பூன் அளவிற்கு தூவி கொள்ளுங்கள். அதன் மீது லேசாக மண்ணைப் போட்டு மூடி விடுங்கள். ரொம்ப ரொம்ப சுலபமான ஒரு அற்புதமான மண் வளத்தை அதிகரிக்கக் கூடிய டிப்ஸ் தான் இது.

padikaram

நீங்கள் கொடுக்கும் உரங்கள் சீராக மண் முழுவதும் பரவுவதற்கு இந்த சிட்ரஸ் அமிலம் பெருமளவு துணை புரிகின்றது. அதனால் படிகாரத்தை சேர்க்கும் பொழுது மொத்த மண் கலவையும் ஒரே சீராக உங்களுடைய உரத்தில் இருக்கும் சத்துக்களை உறிஞ்சிக் கொள்ளும். மிகவும் அற்புதமான இந்த விஷயத்தை நீங்கள் பயன்படுத்தினால் உங்களுடைய எல்லா வகையான செடிகளும் செழிப்பாக வளரும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

padikaram1

வீட்டிலேயே நாம் வளர்க்கும் குட்டி குட்டி செடி வகைகளுக்கு மண் கலவை என்பது மிகவும் முக்கியம். மண் கலவை சரியான வளம் இல்லாததாக இருந்தால் செடிகளும் அதிக பூக்களையோ அல்லது காய்கறிகளையோ நமக்குக் கொடுக்காது. நீங்கள் மழைக்காலங்களில் இதனை பவுடராகவும், மற்ற நேரங்களில் ஊற வைத்து நீர் தன்மையாகவும் உங்களுடைய செடிகளுக்கு பயன்படுத்தலாம். மழைக்காலங்களில் நீர்த்தன்மை அதிகமாக இருந்தால் செடிகளுக்கு ஆபத்து. எனவே அப்பொழுது பவுடராக மட்டும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே
சீப்பு கிளீன் பண்ண சோம்பேரித்தனமா இருக்கா? கையே வைக்காம ஈஸியா எப்படி கிளீன் பண்ணலாம்?

இது போன்று மேலும் தேவையான தகவல்கள் பலவற்றை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.