உங்க வீட்டு படுக்கை அறையில் சுவாமி படம் இருக்குதா? அப்போ நீங்க தான் முதல்ல இதை கட்டாயம் தெரிஞ்சுக்கணும்.

sivan5
- Advertisement -

எல்லோரும் சொல்லி நாம் கேள்விப்பட்டு இருப்போம். சமையலறை என்பது பூஜை அறைக்கு நிகரான ஒரு இடம். அந்த சமையல் அறையிலும் விளக்கு ஏற்றலாம். அன்ன லட்சுமியை வைத்துக் கொள்ளலாம் என்று. ஆனால் நம்முடைய வீட்டில் படுக்கை அறையும் சுவாமி அறைக்கு நிகரான ஒரு இடம்தான். என்னடா இது படுக்கையறையை, சுவாமி அறைக்கு இணையாக சொல்லுகிறார்களே என்று தவறாக நினைத்துக் கொள்ள வேண்டாம். கோவில்களில் கூட சுவாமி இரவு தூங்குவதற்காக பள்ளியறை என்ற ஒரு இடம் இருக்கிறது.

நம்முடைய வீட்டில் இருக்கும் படுக்கையறை நம்முடைய வீட்டின் பள்ளியறை அவ்வளவுதானே. அந்த படுக்கை அறையில் சுவாமி படத்தை வைக்கலாமா வைக்க கூடாதா. அப்படியே சுவாமி படத்தை வைத்தாலும் எந்தெந்த சுவாமி படத்தை அந்த இடத்தில் வைக்க வேண்டும். எந்தெந்த சுவாமி படங்களை அந்த இடத்தில் வைக்க கூடாது இதற்கான ஆன்மீகம் சொல்லும் தெளிவான பதில் உங்களுக்காக இந்த பதிவில்.

- Advertisement -

படுக்கை அறையில் சுவாமி படம் வைக்கலாமா?
படுக்கை அறையில் சுவாமி படம் வைக்கலாம். தவறு கிடையாது. அதற்காக மெத்தைக்கு அடியில், பெட்டுக்கு மேல் சுவாமி படம் வச்சுக்காதீங்க. படுக்கையறையில் ஒரு ஓரமாக இருக்கும் அலமாரியிலோ பீரோ பக்கத்திலோ சுவாமி படங்களை வைப்பதன் மூலம் எந்த ஒரு தவறும் கிடையாது. சரி சுவாமி படங்களை வைக்கலாம். எந்த எந்த சுவாமி படங்களை வைக்கலாம். அழகாக தம்பதி சரீரமாக குடும்பத்தோடு இருக்கக்கூடிய சுவாமி படங்கள் ஏராளமாக நம்முடைய இந்து சமயத்தில் உள்ளது.

உதாரணத்திற்கு ராமர் சீதை, கிருஷ்ணர் ராதா, பரமசிவன் பார்வதி, மகாலட்சுமி பெருமாள் என்று தம்பதி சரீரமாக அன்பை வெளிப்படுத்தும் வகையில் நிறைய சுவாமியின் திருவுருவப்படங்கள் இருக்கிறது. அதையெல்லாம் படுக்கை அறையில் வைத்துக் கொண்டால் இல்லறம் இனிமையாக இருக்கும். இப்படிப்பட்ட சுவாமியின் திருவுருவ படங்களை எல்லாம் படுக்கையறையில் தாராளமாக வைத்துக் கொள்ளலாம்.

- Advertisement -

திருமணம் ஆகாத கடவுள்களின் படத்தை கூடுமானவரை படுக்கை அறையில் வைப்பதை தவிர்த்துக் கொள்ளலாம். உதாரணத்திற்கு ஐயப்பன் ஹனுமன் இப்படிப்பட்ட திரு உருவப்படங்களை படுக்கையறையில் வைக்க வேண்டாம். ஆனால் இந்த வரிசையில் பிள்ளையார் இருக்க மாட்டார். பிள்ளையார் படத்தை தேவை என்றால் நீங்கள் படுக்கையறையில் வைத்துக் கொள்ளலாம். காலை கண்விழிக்கும் போது இந்த பிள்ளையார் முகத்தில் விழித்தால் ரொம்ப ரொம்ப நல்லது.

பொம்மையில் இருக்கக்கூடிய அழகான தம்பதி சரீரமாக இருக்கும் சுவாமிகளை படுக்கையறையில் அழகுக்காக வைத்துக் கொள்ளலாம். ஆனால் விக்ரஹங்களை சுவாமி சிலைகளை படுக்கையறையில் வைக்கக்கூடாது என்பதும் குறிப்பிடத்தக்க ஒரு விஷயம். இந்த உலகம் இயங்கிக் கொண்டிருப்பதே உயிர்கள் உருவாவதன் மூலமாகத்தான். அதாவது கணவன் மனைவி சேர்ந்து இருப்பதால்தான். இதை அந்த காலத்தில் புனிதமாகத்தான் பார்த்து வந்தார்களே தவிர, அதை யாரும் கொச்சைப்படுத்தி சொல்லி வைக்கவில்லை.

- Advertisement -

கணவனும் மனைவியும் அன்னோனியமாக வாழ்ந்து பிள்ளை பேரு பெற்று தலைமுலைகளை தழைக்க வைக்க கூடிய அந்த படுக்கை அறை என்றுமே புனிதமான ஒரு இடம் தானே தவிர, அந்த இடத்தில் புனிதம் கெட்டு விட்டது என்று யாராலும் சொல்லிவிட முடியாது. அந்த புனிதமான இடத்தில் சுவாமி படங்களை வைத்துக் கொள்வதால் எந்த கெடுதலும் நடக்காது.

அந்தக் காலத்தில் கணவனும் மனைவியும் வாழ்க்கையை தொடங்கக்கூடிய அந்த முதல் நாளில் குத்துவிளக்கு ஏற்றி வைத்துவிட்டு தான் தொடங்க வேண்டும் என்று சொல்லுவார்கள். காரணம் வம்சம் தழைக்க வேண்டும் என்றால் குத்துவிளக்கு ஏற்றி வாழ்க்கையை ஆரம்பிக்க வேண்டும் என்ற சம்பிரதாயம் இருந்து வந்தது. இன்றும் ஒரு சில இடங்களில், இந்த சம்பிரதாயம் இன்றும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. சில பேர் இதை மறந்து விட்டார்கள்.

இதையும் படிக்கலாமே: அதி தீவிரமான பிரச்சனையில் சிக்கி தவிப்பவர்கள் இந்த 3 விளக்கை ஏற்றினால் போதும். முடிவில்லாமல் தொடரும் பிரச்சனைக்கு கூட, அந்த அம்பாள் முற்றுப்புள்ளி வைத்து விடுவாள்.

படுக்கையறை என்பதும் கடவுள் வாசம் செய்யக்கூடிய ஒரு இடம் தான்‌. ஆகவே அந்த இடத்தில் சுவாமி படங்களை வைத்திருப்பவர்கள் இனி சஞ்சலப்பட வேண்டாம். நம்பிக்கை உள்ளவர்கள் மேல் சொன்ன விஷயங்களை எல்லாம் பின்பற்றி பலன் பெறலாம் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -