ஒரே 1 கிராம்பு இருந்தால் போதும்! உங்கள் பகைவர்களால் உங்கள் பக்கம் வரவே முடியாது.

temple-kirambu

நம்முடைய வாழ்க்கையில் பகைவர்கள் தொல்லை என்பது ஏதாவது ஒரு காலகட்டத்தில் நிச்சயம் இருக்கும். நம் முன்னேற்றத்தை தடுக்கும் எதிரிகள் நம்மை சுற்றி கண்ணுக்கு தெரிந்தும், தெரியாமலும் இருந்து கொண்டே இருப்பார்கள். கண்ணுக்கு தெரிந்த எதிரிகளை சமாளிக்க நம்மிடம் இருக்கும் மனோ தைரியம் போதும்! ஆனால் இந்த கண்ணுக்கு தெரியாத எதிரிகள் உடைய சூழ்ச்சியை முறியடிக்க இந்த எளிய பரிகாரத்தை செய்து பார்க்கலாம். அது என்ன? என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை படியுங்கள்.

enemy1

தெரிந்தோ தெரியாமலோ நம்மை சுற்றியிருக்கும் பகைவர்கள் மூலமாக நமக்கு ஏதாவது ஒரு துன்பங்கள் வந்து கொண்டே இருக்கும். ஒரு தொழில் செய்ய நினைக்கும் பொழுது அதை செய்ய முடியாமல் ஏதாவது ஒரு தடங்கல் வரும். சரி என்று உத்தியோகத்திற்கு சென்றால் அங்கும் ஏதாவது ஒரு பிரச்சனைகளை இழுத்துக் கொண்டு வருவோம். இப்படி தொடர்ந்து உங்களுக்கு இருக்கும் பிரச்சனைகளை சமாளிக்க உங்கள் வீட்டில் சமையல் அறையில் இருக்கும் கிராம்பு போதும்.

சமையலில் வாசனைக்காக பயன்படுத்தும் இந்த கிராம்பு ஆன்மீக ரீதியாக பல்வேறு பரிகாரங்களுக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. கிராம்பு பணத்தை ஈர்க்கும் வசிய சக்தி வாய்ந்த ஒரு பொருளாகவும் கருதப்படுகிறது. கிராம்பிற்கு இருக்கும் மகத்துவங்கள் மிகவும் விசேஷமானதாகும். கண் திருஷ்டி கோளாறுகள், பகைவர்கள் தொல்லை ஒழிய இந்த கிராம்பு எப்படி பயன்படுத்த முடியும்? என்பதை தான் இனி பார்க்க இருக்கிறோம்.

வசிய சக்தி மிகுந்த இந்த கிராம்பு தாந்திரீக பரிகாரங்களுக்கு பயன்படுத்தப்படுகிறது. கிராம்பு வைத்து வழிபடும் பொழுது நினைத்தவை அப்படியே நடக்கும் என்பது நம்பிக்கை. உங்களுடைய தொழில் முறை பகைவர்கள், வியாபார வகையிலான எதிரிகள் உங்கள் வீட்டை சுற்றி இருக்கும் கெட்ட எண்ணம் கொண்டவர்கள் யாராக இருந்தாலும் உங்களை நெருங்க கூட முடியாத அளவிற்கு செய்துவிடக் கூடிய ஆற்றல் இந்த கிராம்பு ஒன்றிற்கு உண்டு.

- Advertisement -

உங்களுடனேயே இருந்து கொண்டு உங்களைப் பற்றிய தவறான வதந்திகளை பரப்புபவர்கள், ஏதோ ஒரு சூழ்நிலையில் நீங்கள் தெரியாமல் செய்த தவறுக்காக தொடர்ந்து உங்களை அவமரியாதை செய்பவர்கள், நீங்கள் விலகி விலகி சென்றாலும் உங்களை முன்னேற விடாமல் தடுப்பவர்கள் என்று உங்களை சுற்றி பகைவர் கூட்டம் ஏதாவது ஒரு வகையில் எல்லோருக்குமே இருப்பார்கள்.

ஞாயிற்றுக் கிழமைகளில் இந்த பரிகாரத்தை செய்து பாருங்கள். பொதுவாக ஞாயிற்றுக் கிழமைகளில் வீட்டில் சாம்பிராணி போடுவது மிகவும் நல்லது என்பார்கள். உங்களுடைய வீட்டின் கிழக்கு திசையில் நின்று கொண்டு கையில் ஒரே ஒரு கிராம்பை வைத்துக் கொள்ளுங்கள். உள்ளங்கையில் வைத்து மூடிக் கொண்டு உங்கள் பகைவர்கள் அல்லது எதிரிகளின் பெயரை சொல்லி விட்டு, எனக்கு தெரிந்தும், தெரியாமலும் இருக்கும் எதிரிகள் தொல்லைகளில் இருந்து விடுபட வேண்டும் என்று மனதார வேண்டிக் கொள்ளுங்கள்.

enemy

இது போல் ஏழு வார ஞாயிற்றுக் கிழமைகளில் தொடர்ந்து செய்து வர வேண்டும். இப்படி செய்யும் பொழுது உங்களை சுற்றி இருக்கும் எதிரிகள் பகைவர்கள் தீய எண்ணம் கொண்டவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு உங்களைப் பற்றிய சிந்தனையே இல்லாமல் செய்து விடும். மீண்டும் உங்களைப் பற்றிய தவறான வதந்திகளைப் பரப்புவதும் அல்லது உங்களின் முன்னேற்றத்திற்கு தடையாக இருப்பதையும் அவர்களால் செய்ய முடியாது. கையில் வைத்திருக்கும் கிராம்பை நீங்கள் சாம்பிராணி புகை போடும் பொழுது அதில் போட்டு எரித்து விடுங்கள். கிராம்பு எரிய எரிய உங்களுடைய பகைவர்களின் தீய எண்ணங்களும் எரிந்து சாம்பலாகி விடும்.