நீங்க சம்பாதிச்ச சொத்த நீங்க உயிரோட இருக்குற வரைக்கும் பிரிக்க கூடாதுன்னு நினைக்கிறீங்களா? அப்போ உங்களுக்கு தான் இந்த பதிவு!

court-home
- Advertisement -

வாழ்க்கையில் கஷ்டப்பட்டு சம்பாதித்து சொத்து சேர்த்து வைத்திருப்பவர்கள் எல்லோரும் தான் உயிரோடு இருக்கும் வரை அந்த சொத்தை பிரிக்க கூடாது என்கிற மனப்பான்மைக்கு வந்து விட்டனர். சொத்து பிரித்தல் என்பது எவ்வளவு முக்கியமான ஒரு காலகட்டம் என்பது அனைவருக்கும் தெரியும். இதனால் பல வழக்குகள் இன்று நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வருகிறது. எதற்காக நீங்கள் சொத்து சேர்க்க வைத்தீர்கள்? நீங்கள் பட்ட கஷ்டத்தை உங்கள் பிள்ளைகளும் படக்கூடாது என்பதற்காக தான் சிறுக சிறுக அரும்பாடுபட்டு நீங்கள் அந்த சொத்தை சேர்த்து வைத்திருப்பீர்கள்!

court

ஆனால் எங்கே இறுதிக் காலத்தில் நம்மை கைவிட்டு விடுவார்களோ என்கிற அச்சத்தில் கடைசியில் சொத்தை பிரிக்காமல் இறந்தும் போய் விடுகிறார்கள். அதற்குப் பிறகு நடப்பது என்ன? எத்தனை பேரது குடும்பங்களில் சரியாகப் பாகம் பிரித்து அதை திருப்தியாக அனுபவிக்கின்றனர் என்று நினைக்கிறீர்கள்? 90% பேர் பெற்றோர்களின் மறைவுக்குப் பின் சரியாக பாகம் பிரிக்காமல் இது எனக்கு! அது உனக்கு! என்று அடித்துக் கொண்டு நீதிமன்ற வழக்கிற்கு போய் நிற்கின்றனர். அந்த சொத்து கடைசியில் வீணாக போவதை இன்றும் நாம் பார்க்கிறோம்.

- Advertisement -

சிறு வயது முதல் மனிதன் முதல் கொண்டு விலங்குகள், பறவைகள் வரை உணவில் தொடங்கி அனைத்திற்கும் பாகத்தை பிரித்து பெற்றுக் கொண்டு பழகிவிட்டன. உணவிற்காக சிறுவயதில் பிள்ளைகள் சண்டையிடுவதை நாம் பார்த்திருப்போம், நானும் அனுபவித்திருப்போம்.

crow

அம்மா ஏதாவது ஒரு உணவைப் பிரித்து பகிர்ந்து கொடுக்கும் பொழுது அதில் ஒரு பங்கு பெரியதாக போய்விட்டாலும் சண்டை வந்துவிடும். எனக்கு மட்டும் சின்னதா இருக்கு! அவனுக்கு மட்டும் பெரியதாக இருக்கிறது! என்று அடம்பிடிக்க தொடங்கி விடுவார்கள். அவர்களை சமாதானப்படுத்த அம்மா நன்றாகவே அறிந்து வைத்திருப்பாள். இதனால் அங்கு பிரச்சனையும் ஏற்படுவதில்லை. வழக்கும் நடப்பதில்லை. பிள்ளைகள் கைவிட்டு விடுவார்கள் என்று சொத்தை பிரிக்காமல் தான் வாழும் காலம் வரை அனுபவித்து விட்டு மறைவது சரியா? தவறா? என்பதற்காகத் தான் இந்த பதிவு.

- Advertisement -

நீங்கள் சம்பாதித்தது முதலில் யாருக்காக? அடுத்த நிமிடம் நிரந்தரம் இல்லாத இந்த உலகில் எதற்காக ஓடி ஓடி உழைத்து சொத்து சம்பாதித்து வைத்தீர்கள்? இறுதி காலத்தில் ஆற அமர்ந்து அனுபவிக்க என்று சிலர் கூறலாம். ஆனால் பலரும் தான் பட்ட கஷ்டத்தை தன் பிள்ளைகள் படக்கூடாது என்பதற்காக தான் தன்னுடைய வாழ் நாட்களை இனிமையாக கழிக்காமல் பணம் ஈட்டுவதில் குறியாக இருந்திருப்பார்கள்.

old-age-people

எந்த ஒரு விஷயத்திலும் பங்கு பிரிப்பது என்கிற பொழுது அதற்கு தலைமை நிச்சயம் இருக்க வேண்டும். சாதாரணமாக நம் சிறுபிள்ளைகளுக்கு எதையாவது வாங்கிக் கொடுக்க வேண்டுமென்றால் கூட நாம் முன் நின்று அவர்களுக்கு பிரித்துக் கொடுத்தால் தான் அதில் சண்டை இல்லாமல் திருப்தி இருக்கும். சரி இதெல்லாம் கூட விடுங்க. கோவில்களில் அன்னதானம் வழங்கும் பொழுது அங்கு தலைமை ஏற்க ஒருவர் இல்லை என்றால் என்ன நடக்கும் என்று சிந்தித்துப் பாருங்கள்?

- Advertisement -

annadhanam 1

பெறுவது தானமாக இருந்தாலும் அதில் அவர்கள் திருப்தி கொள்வார்களா? எனக்கு உனக்கு என்று போட்டி தான் அங்கு வரும். அதற்கு தான் தலைமை ஏற்க ஒருவர் முன் நின்று வரிசையில் நிற்க வைத்து சரியாக பாகம் பிரித்து கொடுத்தால் தான் சுமுகமான சூழ்நிலை அங்கு காண முடியும். அது போல தான் இந்த சொத்து பிரிப்பது என்பது கூட.

sothu-pirithal

நீங்கள் வாழும் காலத்திலேயே பாகுபாடு இல்லாமல் தலைமை ஏற்று உங்களுடைய பிள்ளைகளுக்கு சரிபாதியாக நீங்கள் ஈட்டிய செல்வத்தை, சொத்துகளை பங்கு பிரித்துக் கொடுத்து விட்டால் அதை மேன்மேலும் பெருக்கி உயர் நிலை அடைவது அவர்களுடைய பொறுப்பு என்றாகிவிடும். சொத்தை வாங்கிக் கொண்டு பிள்ளைகள் கைவிட்டால் என்ன செய்வது? என்று யோசிக்க தேவையில்லை. உங்களுடைய வளர்ப்பு சரியாக இருந்தால் நீங்கள் சொத்தை பிரித்து கொடுத்த பின் அவர்கள் உங்களை கைவிட மாட்டார்கள். அப்படி செய்தால் உங்களுடைய வளர்ப்பு சரியாக இல்லை என்பதைத் தான் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று கூறி இந்த பதிவை முடித்துக் கொள்வோம்.

இதையும் படிக்கலாமே
உப்பு தண்ணீரால் படிந்த கறையை நீக்குவதற்கு இதை விட சுலபமான டிப்ஸ் இருக்கவே முடியாது. ஒருவாட்டி உங்க வீட்டில ட்ரை பண்ணி பாருங்க! குறிப்பா சமையலறை சிங்குக்கு பக்கத்துல.

இது போன்று மேலும் தேவையான தகவல்கள் பலவற்றை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

- Advertisement -