இன்று பகுதி நேர சூரிய கிரகணம் – எதை எல்லாம் செய்யலாம் தெரியுமா ?

surya-grahanam
- Advertisement -

சூரிய குடும்பத்தில் ஒன்பது கோள்கள் இருந்தாலும் சூரியன் மற்றும் சந்திரன் இந்த பூமியில் தினசரி வாழ்வில் பங்குகொள்வது போல் வேறெந்த கிரகங்களும் பங்கெடுப்பதில்லை. சூரியன் மற்றும் சந்திரன் ஆகிய இரண்டு கிரகங்களை மையமாக கொண்டு வானில் நிகழும் அதிசயங்கள் தான் சூரியன் மற்றும் சந்திர கிரகணங்கள். இதில் இன்று(11-08-2018) நிகழவிருக்கும் பகுதி நேர சூரிய கிரகணத்தை பற்றி அறிந்து கொள்வோம்.

Suriya puyal

அண்மையில் இந்த நூற்றாண்டின் மிக நீண்ட சந்திர கிரகணம் நடந்து முடிந்தது. அதற்கு சில நாட்களுக்கு பிறகு செவ்வாய் கிரகம் பூமிக்கு மிக அருகில் வந்திருக்கிறது. இன்று பகுதி நேர சூரிய கிரகணம் ஏற்படயிருக்கிறது. இப்படி சூரியன், சந்திரன், செவ்வாய் போன்ற கிரகங்கள் ஒரே நேர்கோட்டில் பூமிக்கு அருகில் இருப்பது ஒரு அதிசய நிகழ்வாகும். சூரிய கிரகணத்தின் போது சூரியனுக்கும் பூமிக்கும் இடையில் சந்திரன் வரும் போது சூரியனின் ஒளி பூமியில் விழாதவாறு மறைக்கப்படுகிறது. இதையே சூரிய கிரகண நிகழ்வு என்கிறோம்.

- Advertisement -

சூரியனுக்கு குறுக்காக சந்திரன் வரும் போது சூரியனின் ஒளி ஒரு வைரத்தை போல பிரகாசிக்கிறது. இதை “வைர மோதிர நிகழ்வு” என வானியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இன்று நிகழும் பகுதி நேர சூரிய கிரகணம் இந்திய நேரப்படி பகல் 1.32 மணிக்கு தொடங்கி மாலை 5.02 மணி வரை நீடிக்கிறது. ஆனால் இன்றைய சூரிய கிரகணத்தை இந்திய நாட்டில் இருப்பவர்களால் காண முடியாது. ரஷ்ய நாட்டின் ஆசிய கண்ட பகுதியில் இருக்கும் “சைபீரியா” பகுதியில் வசிப்பவர்களால் மட்டுமே இதை காண முடியும்.

Suryan God

நமது நாட்டில் இப்பகுதி நேர சூரிய கிரகணம் தெரியா விட்டாலும் கூட இன்றைய ஆடி அமாவாசை தினத்தன்று சூரிய கிரகணம் ஏற்படுவதால், அந்த சூரிய பகவான் மற்றும் ராகு கேது பகவான்களுக்குரிய மந்திரங்களை கூறி வழிபடுவது நன்மையை ஏற்படுத்தும்.

- Advertisement -

இதையும் படிக்கலாமே:
தோஷம் போக்கும் ஸ்ரீ கற்கடேஸ்வரர் கோவில் சிறப்புகள்

இது போன்ற மேலும் பல ஆன்மீக தகவல்கள் மற்றும் ஜோதிடம் சார்ந்த பல்வேறு பலன்களை அறிய எங்களோடு இணைந்திருங்கள்.

English overview:
Here we have details about Surya grahan that is going to happen in 2018. It Tamil we call it as Surya grahanam or Sooriya grahanam 2018.

- Advertisement -