India Pakistan : ஆட்டத்தை ஆரம்பித்த பாகிஸ்தான். ஜம்முவின் ரஜோரி பகுதியில் முதல் வெடிகுண்டை வீசிய பாகிஸ்தான்.

Border
- Advertisement -

இந்தியா நேற்று அதிகாலை பாகிஸ்தான் எல்லைக்குள் ஊடுருவி அவர்களை தாக்கியது. இந்த தாக்குதலில் பால்கோட் பகுதி முழுவதும் உள்ள தீவிரவாதிகளின் முகாம்கள் அழிக்கப்பட்டது. மேலும், இந்த தாக்குதலில் 300க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். இதனை அடுத்து பாகிஸ்தான் எந்த நேரத்திலும் இந்தியாவை தாக்கும் என்று செய்திகள் வெளியாகியன.

Pulwama

தற்போது சில மணிநேரங்களுக்கு முன்பாக முதன் முதலாக பாகிஸ்தான் ராணுவத்தை சேர்ந்த F-16 ரக விமானத்தில் வந்து ஜம்மு காஷ்மீர் பகுதியில் உள்ள ” ரஜோரி “எனும் இடத்தில் இந்திய ராணுவத்தினரின் முகாமின் அருகில் வெடிகுண்டுகளை வீசியதாக அதிகாரபூர்வ தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும், அந்த விமானத்தை இந்திய ராணுவத்தினர் சுட்டு வீழ்த்தி உள்ளனர். அந்த போர் விமானத்தில் பயணித்த 2 பேர் பலியாகி உள்ளனர் என்ற தகவலும் தற்போது கிடைத்துள்ளது.

- Advertisement -

மேலும், ரஜோரி பகுதியில் இந்திய ராணுவத்தினரின் முகாமின் அருகில் வெடிகுண்டுகளை வீசியதால் இந்திய ராணுவ வீரர்கள் யாருக்கும் இதில் காயமோ, உயிர்சேதமோ ஏற்படவில்லை என்று இந்திய ராணுவம் அதிகாரபூர்வ தகவலை வெளியிட்டுள்ளது. மேலும், பாகிஸ்தான் விமானம் இந்தியாவிற்குள் ஊடுருவி தாக்குதல் நடத்தப்போவதை பாகிஸ்தான் உறுதி செய்துள்ளது.

Pakistan

இதன்காரணமாக ஜம்மு, காஷ்மீர் மற்றும் எல்லை பகுதிகளான லே, லடாக் மற்றும் பஞ்சாப் ஆகிய பல மாநிலங்களில் இன்று பயணிகள் விமானம் கூட பறக்கக்கூடாது என்று இந்திய அரசாங்கம் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதன் காரணமாக இந்திய எல்லையில் பதற்றம் காணப்படுகிறது. மேலும், அதிக அளவிலான பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு வருகிறது. ராணுவ வீரர்கள் சண்டைக்கு தயாராக அதிக எண்ணிக்கையில் குவிக்கப்பட்டு வருகின்றனர்.

- Advertisement -

இதையும் படிக்கலாமே :

Surgical Strike : சர்ப்ரைஸ் தாகுத்துதலுக்கு தயாராக இருங்கள். இந்தியாவை மிரட்டிய பாக் ராணுவ மேஜர் ஆசிப் காபர் – வீடியோ

- Advertisement -