பாகிஸ்தான் ஸ்டைலில் ரொம்ப ரொம்ப ஈஸியா மட்டன் வறுவல் எப்படி செய்வது தெரியுமா உங்களுக்கு. அசைவ பிரியர்கள் இதை மிஸ் பண்ணாதீங்க.

kida-varuval
- Advertisement -

அசைவ பிரியர்களுக்கு ஏற்ற ஒரு மட்டன் வருவல் இது. இதை செமி கிரேவியாகவும் செய்து இட்லி தோசைக்கு தொட்டுக் கொள்ளலாம். ட்ரையாக வறுத்து செய்து சாதத்திற்கு தொட்டும் சாப்பிடலாம். பாகிஸ்தான் ஸ்டைலில் ரொம்ப ரொம்ப ஈஸியா வித்தியாசமான கிடா வறுவல் எப்படி செய்வது என்பதை பற்றி தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகின்றோம். எப்போதும் போல மட்டன் குழம்பு வைத்து சாப்பிடாமல் கொஞ்சம் வித்தியாசமான சுவையில் இப்படியும் மட்டன் செய்யலாம். ட்ரை பண்ணி பாருங்க.

முதலில் ஒரு குக்கரை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் சுத்தம் செய்த மட்டன் 1/2 கிலோ போட்டுக் கொள்ள வேண்டும். மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்த பெரிய வெங்காயம் – 1, பச்சை மிளகாய் இடித்தது – 3, இஞ்சி பூண்டு பேஸ்ட் – 2 ஸ்பூன், மஞ்சள் தூள் – 1/2 ஸ்பூன்,  தேவையான அளவு – உப்பு, தயிர் – 2 டேபிள் ஸ்பூன், கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி குக்கரை மூடி 6 லிருந்து 7 விசில் விட்டு மட்டனை வேக வைத்து எடுத்துக் கொள்ளுங்கள். மட்டன் பஞ்சு போல வெந்திருக்க வேண்டும்.

- Advertisement -

அடுத்தபடியாக அடுப்பில், கடாய் வைத்து 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி அதில் பட்டை – 2, கிராம்பு – 2, பிரியாணி இலை – 1, மிளகு – 1 ஸ்பூன், இஞ்சி பூண்டு உரலில் இடித்தது – 1 ஸ்பூன், போட்டு எண்ணெயிலேயே இதை வதக்க வேண்டும். அடுத்து, நீளவாக்கில் நறுக்கிய பெரிய வெங்காயம் – 1 போட்டு நன்றாக வதக்க வேண்டும். வெங்காயம் வதங்கிய பின்பு மிளகாய் தூள் – 1 ஸ்பூன், மல்லித்தூள் – 1 ஸ்பூன், கரம் மசாலா – 1/2 ஸ்பூன், சோம்பு பொடி – 1/2 ஸ்பூன், மசாலாவுக்கு தேவையான அளவு உப்பு, போட்டு நன்றாக கலந்து விடவும்.

அதன் பின்பு குக்கரில் வேக வைத்திருக்கும் மட்டனை தண்ணீரோடு கடாயில் ஊற்றி, கூடவே மிகப் பொடியாக வெட்டிய  தக்காளி பழம் – 1, போட்டு பச்சை மிளகாய் இரண்டு போட்டு நன்றாக வதக்கி விடுங்கள். மசாலா மட்டன் அனைத்தும் ஒன்றாக சேர்ந்து கலந்து கொதித்து செமி கிரேவியாக வந்தவுடன், அடுப்பை அணைத்து விடுங்கள்.

- Advertisement -

இறுதியாக ஒரு ஸ்பூன் சர்க்கரை சேர்த்து நன்றாக கலந்து விட்டால் சூப்பரான பாகிஸ்தான் ஸ்டைல் மட்டன் வறுவல் தயார். உங்களுக்கு இந்த ரெசிபி ரொம்பவும் டிரை ஆக வேண்டும் என்றால் தண்ணீர் சுண்ட சுண்ட வறுத்து எடுத்துக் கொள்ளலாம்.

செமி கிரேவியாக தேவை என்றால் கொஞ்சம் தல தலவென இருக்கும்போது அடுப்பை அணைத்துவிட்டு, கொத்தமல்லி தலையை தூவி இட்லி தோசைக்கு வைத்து பரிமாறினால் அவ்வளவு அட்டகாசமாக இருக்கும். சப்பாத்தி ரொட்டிக்கும் வைத்துக் கொள்ளலாம். மிஸ் பண்ணாம அசைவ பிரியர்கள் இந்த டேஸ்ல ஒரு முறை மட்டன் சமைச்சு பாருங்க.

- Advertisement -