பலாப்பழம் வாங்குன கொட்டை தூர போடாம ஒரு முறை இப்படி பலாக்கொட்டை சுக்கா செஞ்சு பாருங்க. மட்டன் சுக்காவை தோற்றுப் போயிடும். சைவ பிரியர்களுக்கு இந்த சுக்கா ஒரு வரப்பிரசாதம் மிஸ் பண்ணாம ட்ரை பண்ணுங்க.

palapazha kottai sukka
- Advertisement -

சுக்கா என்று சொன்னாலே முதலில் நமக்கு ஞாபகம் வருவது மட்டன் சுக்கா தான். இது நல்ல காரசாரமாக சாப்பிட ரொம்பவே அருமையான டேஸ்டில் இருக்கும். அசைவ பிரியர் களுக்கு மட்டன் சுக்கா என்றாலே அலாதி பிரியம் தான். அந்த வகையில் இப்பொழுது பலாக் கொட்டையை வைத்து செய்யப்படும் இந்த சுக்கா அசைவம் சாப்பிடாதவர்களுக்கு ஒரு வரப்பிரசாதம் என்றே சொல்லலாம் . வாங்க அதை எப்படி செய்வது என்று இந்த சமையல் குறிப்பு பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

செய்முறை

இதை செய்வதற்கு முன் ஒரு கப் பலாக்கொட்டையை சுத்தம் செய்த பிறகு குக்கரில் போட்டு இந்த பலாக்கொட்டை மூழ்கும் வரை தண்ணீர் ஊற்றி கொஞ்சமாக உப்பையும் சேர்த்து பிறகு மூன்று விசில் வரும் வரை விட்டு அடுப்பை அணைத்து விடுங்கள்.

- Advertisement -

விசில் முழுவதுமாக இறங்கிய பிறகு குக்கரில் இருந்து பலாக்கொட்டை எடுத்து அதன் மேல் தோல்களை நீக்கி இரண்டு துண்டுகளாக அதை நறுக்கி எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். அதே போல் இரண்டு வெங்காயத்தை நல்ல பொடியாக நறுக்கிக் கொள்ளுங்கள். ஒரு பெரிய பழுத்த தக்காளி நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள் இப்பொழுது சுக்காவை தயார் செய்ய ஆரம்பித்து விடலாம்.

அடுப்பில் கடாய் வைத்து சூடான பிறகு மூன்று டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் இரண்டு கிராம்பு, ஒரு லவங்கம், ஒரு துண்டு பட்டை, பிரியாணி இலை சேர்த்து பொறிந்த பிறகு ஒரு ஸ்பூன் சோம்பு சேர்த்து பொரிய விடுங்கள். அதன் பிறகு வெங்காயத்தையும், ஒரு கொத்து கறிவேப்பிலையும் சேர்த்து வெங்காயம் நன்றாக சிவந்து பொன்னிறமாகும் வரை வதக்கிக் கொள்ளுங்கள்.

- Advertisement -

வெங்காயம் நன்றாக வதங்கிய பிறகு ஒரு டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுதை சேர்த்துக் கொள்ளுங்கள். இத்துடன் பச்சை மிளகாய் மட்டும் கீறி சேர்த்துக் பச்சை வாடை போகும் வரை வதக்கிய பிறகு, தக்காளியை சேர்த்து நன்றாக குழைந்து வரும் வரை வதக்கிக் கொள்ளுங்கள். அதன் பிறகு அடுப்பை சிம்மில் வைத்து விட்டு ஒரு டீஸ்பூன் மிளகாய்த்தூள், ஒன்றரை டீஸ்பூன் தனியாத்தூள், கால் டீஸ்பூன் மஞ்சள் தூள் அரை டீஸ்பூன் உப்பு, கால் டீஸ்பூன் கரம் மசாலா இவையெல்லாம் சேர்த்து வெங்காயம் தக்காளியுடனே பச்சை வாடை போகும் வரை வதக்கி கொள்ளுங்கள்.

இந்த மசாலாக்கள் அனைத்தும் நன்றாக வதங்கி சுருண்டு வரும் பொழுது பலா கொட்டையை சேர்த்து மீண்டும் ஒரு முறை நன்றாக கலந்து விட்ட பிறகு கால் கப் தண்ணீர் மட்டும் ஊற்றி மூடி போட்டு நன்றாக கொதிக்க விடுங்கள். பலா கொட்டையில் இந்த மசாலாக்கள் எல்லாம் இறங்கி நன்றாக சுண்டி வர வேண்டும்.

- Advertisement -

அதன் பிறகு கால் டீஸ்பூன் சோம்புத்தூள், அரை டீஸ்பூன் மிளகுத்தூள், கால் டீஸ்பூன் சீரகம் தூள், இவை சேர்த்து மீண்டும் ஒரு முறை நன்றாக கலந்து சிறிது நேரம் கை விடாமல் கலந்து கொண்டே இருந்தால் சுவையான பலாக்கொட்டை சுக்கா தயார். கடைசியாக இருக்கும் போது ஒரு கைப்பிடி கொத்தமல்லி கொஞ்சம் கருவேப்பிலை இரண்டையும் பொடியாக நறுக்கி மேலே தூவி கலந்து இறக்கி விடுங்கள்.

இதையும் படிக்கலாமே: ஒரு கப் ரவை இருந்தா ஸ்கூல் விட்டு வர குழந்தைகளுக்கு டக்குனு மொறுமொறுன்னு இந்த ஸ்நாக்ஸ் செஞ்சு கொடுத்திடுங்க. நீங்க டீ போடுற டைமுக்குள்ள இந்த ஸ்நாக்ஸ் ரெடியாகிடும்.

இந்த பலாக்கொட்டை சுக்காவிற்கு வெறும் ரசம் சாதம் இருந்தால் கூட போதும் சலிக்காமல் உள்ளே போகும். அந்த அளவிற்கு சுவையாக இருக்கும் இந்த பலாக்கொட்டை ரெசிபி உங்களுக்கு பிடித்திருந்தால் நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -