- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalநோய் தீர்க்கும் சண்முக கவசம்

நோய் தீர்க்கும் சண்முக கவசம்

- Advertisement -

ஒருவர் ஆரோக்கியமாக இருந்தால் தான் எத்தனை செல்வங்கள் இருந்தாலும் அதை அனுபவிக்க முடியும். ஆரோக்கியமற்ற வாழ்வு அனாமத்தானது. இந்த ஆரோக்கியத்தை அள்ளிக் கொடுக்கக் கூடிய கவசம் சண்முக கவசம். சண்முக கவசம் அருளிய பாம்பன் சுவாமிகள் பற்றிய அறியாத தகவல்களையும், சண்முக கவசம் படிப்பதால் ஏற்படக் கூடிய நன்மைகளையும் பற்றி தான் இந்த ஆன்மீகம் சார்ந்த பதிவில் தொடர்ந்து காண இருக்கிறோம்.

கலியுக கண்கண்ட கடவுளாக இருக்கக் கூடிய முருகப் பெருமான் பக்தர்களிடையே எதை எதிர்பார்க்கிறார் தெரியுமா?

தன் பக்தர்கள் உள்ளம் உருகி உணர்வுபூர்வமாக அவரை பற்றி பாடும் பொழுதே அதைக் கேட்டு முருகன் மயங்கி விடுகிறார். பக்தர்கள் பாட்டை கேட்டாலே போதும், முருகன் ஓடி வந்து நம் வேண்டுதல்களை நிறைவேற்றுகிறார்.

- Advertisement -

முருகனுக்கு ரொம்பவும் பிடித்தது எது தெரியுமா?

நாம் இஷ்டப்பட்டு சொந்தமாக கொடுக்கும் எந்த ஒரு பொருளையும் அவர் மிகவும் விரும்புகிறார். கூடை கூடையாக மாலைகளை காசு கொடுத்து நீங்கள் வாங்கி கொடுத்தாலும், அவருக்கு அது திருப்தியை கொடுப்பதில்லையாம். ஒரே ஒரு மலரை நீங்களே செடியில் இருந்து முருகனை மனதில் நினைத்து பறித்து வந்து சமர்ப்பித்தால் போதும், அதை இஷ்டப்பட்டு ஏற்றுக் கொள்கிறார்.

இதனை நன்றாக அறிந்து கொண்டிருந்த பாம்பன் சுவாமிகள் முருகன் மீது பேரன்பு கொண்டு அவரை நேரில் கண்டதாகவும் கூறியுள்ளார். கடந்த நூற்றாண்டில் பாம்பன் சுவாமிகள் சென்னையில் விஜயம் செய்த போது, எதிர்பாராத விதமாக அவருடைய கால்களில் குதிரை வண்டியின் சக்கரம் ஏறி எலும்பு முறிவு ஏற்பட்டது. உடனே சீடர்கள் அங்குள்ள ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அனுமதித்தார்கள். அவரை பரிசோதித்துப் பார்த்த பெரிய பெரிய டாக்டர்கள் அவரின் வயது காரணமாக அவ்வளவு சீக்கிரம் குணமாகாது என்றார்கள்.

- Advertisement -

ஆரோக்கியத்தை கொடுத்து, தீராப்பிணிகளை தீர்க்கக் கூடிய அவர் எழுதிய சண்முக கவசத்தை விடாமல் தொடர்ந்து பாராயணம் செய்து வந்தார். அவர் சீக்கிரம் குணமாக வேண்டி அவருடைய சீடர்களும் சண்முக கவசத்தை அவருக்காக பாராயணம் செய்து வந்தனர். பாம்பன் சுவாமிகள் கனவில் முருகன் வந்து அருள் கொடுத்ததாகவும், அவருடைய வேல்களால் எலும்பு முறிவை குணம் செய்ததாகவும் தோன்றியது. இரண்டு மயில்கள் மருத்துவமனைக்கு வந்து ஆடியதாகவும் அவருக்கு தோன்றுகிறது. அதன் பிறகு ஓரிரு நாட்களில் மீண்டும் அவரை பரிசோதித்து பார்த்த டாக்டர்களுக்கு பேரதிர்ச்சியாக இருந்தது.

இதையும் படிக்கலாமே:
விற்காத பொருட்களை விற்று தரும் பரிகாரம்

எலும்பு முறிவு ஏற்பட்ட இடத்தில் எலும்புகள் சீக்கிரமே குணமாகி இருந்தது. மனம் உருகி முருகனை நினைத்து சண்முக கவசம் பாடுபவர்களுக்கு எப்பேர்பட்ட நோய்களும், பிணிகளும், வியாதிகளும் தீர்ந்து போவதாக பக்தர்களிடையே நம்பப்பட்டு வருகிறது. இன்றளவிலும் அதற்கு சாட்சியாக, ராஜீவ் காந்தி மருத்துவமனையில் ஒரு வார்டில் பாம்பன் சுவாமிகள் படம் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. உயிர் காக்கும் மருத்துவமனையில் ஆன்மீகவாதியின் படத்தை எதற்காக வைக்க வேண்டும்? சண்முக கவசத்தின் மகிமை உணர்ந்தவர்கள், அதைத் தொடர்ந்து பாராயணம் செய்து வந்தால், நிச்சயம் அனைத்து நோய்களும் குணமாகி ஆரோக்கியமான வாழ்வு கிட்டும். ஆரோக்கியம் மட்டுமல்லாது சண்முக கவசம் மன அமைதியையும், மன உளைச்சலில் இருந்து நிவாரணத்தை கொடுக்கும் அருமருந்தாகவும் செயல்படுகிறது.

சற்று முன்