பாம்பு தோளோடு வாழும் விசித்திர மனிதர் – வீடியோ

Paambu thol

வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது
மனித உடலிலேயே ஒரு மிக பெரிய உறுப்பு என்றால் அது தோல் தான். ஒரு மனிதனுக்கு தோல் சம்மந்தமான நோய்கள் ஏதாவது இருந்தால் அவர்கள் படும் பாடு ஏறலாம். ஆனால் ஒரு மனிதன் பிறந்ததில் இருந்து 30 வருடங்களாக பாம்பு தோலோடு வாழ்கிறார். அவரின் உடல் முழுக்க பாம்பு போன்ற தோல் உள்ளது. இதோ அவர் குறித்து ஒரு சிறு வீடியோ பதிவு.

இவருடைய பெயர் குமார். மேல்மருவத்தூர் அருகில் உள்ள கவுண்டன் கருணை என்னும் ஊரில் இவர் வாழ்ந்து வருகிறார் உள்ளார். இவரின் உடல் முழுவதும் பாம்பு போல தோல் இருப்பதால் இவரால் சரியாக உறங்க கூட முடியவில்லை என்பது தான் உண்மை. இவருக்கு கிடைத்த ஒரே அதிஷ்டம் அந்த ஊர் மக்கள் தான். அந்த ஊரில் வசிக்கும் யாரும் இவரின் இந்த நிலையை பார்த்து கேலி கிண்டல் செய்வது கிடையாது. மாறாக அனைவரும் இவர் மேல் அன்பு செலுத்துகின்றனர்.

இவரின் உடல் அவ்வப்போது வறண்டுவிடுகிறது. அதனால் அரைமணி நேரத்திற்கு ஒருமுறை இவர் தன் உடலை தண்ணீர் ஊற்றில் நனைத்து விடுகிறார். பகலில் தான் இந்த நிலை என்றால் இரவிலும் இவர் சரியாக தூங்குவது கிடையாது. இரவிலும் இவர் தன் உடலை நனைத்த வண்ணமே உள்ளார். இல்லை என்றால் உடல் முழுவது எரிய ஆரமித்து விடுமாம். இவர் தன் தந்தையோடு சேர்ந்து விவசாயம் செய்து வருகிறார்.

மனிதர்களை நேசிக்கும் நல்லுள்ளம் கொண்டவர்கள், மருத்துவர்கள், தொண்டு நிறுவனங்கள் யாரேனும் குமாரின் நிலையை உணர்ந்து அவருக்கு உதவ நினைத்தால் நன்றாக இருக்கும். அவரின் இந்த நிலை மாறி சாதாரண மனிதரை போல அவரின் தோல் மாறுவதற்கு வாய்ப்பு இருந்தால் மருத்துவர்கள் அவரை அணுகி அதை பற்றி எடுத்துரைக்கலாம். 30 வருடங்களாக நரக வேதனையை அனுபவித்து வரும் அவருக்கு இனியாவது ஒரு சிறப்பான வாழ்க்கை அமைய அனைவரும் இறைவனை பிராத்திப்போம்.