நாளை வரக்கூடிய அதி அற்புதம் வாய்ந்த பௌர்ணமி தினத்தில், பணப்பெட்டியில் மறக்காமல் இதை வைத்து விடுங்கள். வாழ்நாள் முழுவதும் உங்கள் வாழ்க்கையில் பண கஷ்டம் என்பதே வராது.

pournami

ஒரு நாள் செய்யக்கூடிய பரிகாரத்தின் மூலம் நம் வாழ்நாள் முழுவதும் பணக்கஷ்டம் வராமல் இருக்கும் என்று நினைத்தால், நம்முடைய மனது பூரிப்பு அடையத்தான் செய்யும். வழிபாட்டு முறைகளை செய்வதோடு சேர்த்து, விடா முயற்சியையும் உழைப்பையும் முதலீடாக போடும் பட்சத்தில் நமக்கு ஆயுசு முழுவதும் பண கஷ்டம் வராது. முயற்சியே செய்யாமல், பரிகாரத்தை மட்டும் செய்து, பண மழை பொழிய வேண்டும் என்று நினைப்பது மிகவும் தவறான ஒரு விஷயம். நாளை பங்குனி மாதத்தில் வரக்கூடிய பவுர்ணமி தினத்தில் என்ன செய்தால் நமக்கு இருக்கக்கூடிய பண கஷ்டம் தீரும் என்பதை பற்றிய ஆன்மீக ரீதியான தகவலை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

pournami-vilakku

பௌர்ணமி தினம் என்றாலே முழு சந்திர நிலவை நாம் தரிசனம் செய்ய வேண்டும் என்பது எல்லோரும் அறிந்த ஒரு விஷயம் தான். ஒருவருக்கு மன உளைச்சல், மனச்சோர்வு, மனக்குழப்பம் இருக்கும்பட்சத்தில் மாதம்தோறும் வரக்கூடிய பௌர்ணமி நாளில் முழு நிலவை கண் குளிர பார்த்து, தரிசனம் செய்தாலே மனக்குழப்பம் நீங்கி மனம் தெளிவு பெறும் என்பது குறிப்பிடத்தக்க ஒரு விஷயம். இதோடு சேர்த்து உங்களுக்கு இருக்கக்கூடிய பணக்கஷ்டம் தீர வேண்டும் என்றால் பவுர்ணமி தினத்தில் எப்படி வழிபாடு செய்வது?

நாளை மாலை 6 மணிக்கு மேல் எப்போது வேண்டுமென்றாலும் இந்த பரிகாரத்தை செய்து கொள்ளலாம். முதலில் பூஜை அறையில் சந்திர பகவானையும் குலதெய்வத்தையும் நினைத்து ஒரு விளக்கை ஏற்றி வைத்து விடுங்கள். சதுர வடிவில் ஒரு பச்சை நிற துணி, 3 ஒரு ரூபாய் நாணயங்கள், 3 கிராம்பு, 1 வசம்பு, 1 ஸ்பூன் அளவு பச்சரிசி, இந்த பொருட்களையும் தயாராக எடுத்து பூஜை அறையில், ஒரு தட்டில் வைத்து விடுங்கள்.

one rupee

அதன் பின்பு உங்களுடைய வீட்டில் நிலவின் ஒளி எந்த இடத்தில் நன்றாக விழுமோ அந்த இடத்திற்குச் செல்ல வேண்டும். மொட்டை மாடி, பால்கனி, வீட்டிற்கு முன் பக்கம், பின் பக்கம் இப்படி எந்த இடமாக வேண்டுமென்றாலும் இருக்கலாம். அந்த இடத்தில் இருந்து சந்திர பகவானை நீங்கள் பார்த்தால், சந்திர பகவானின் தரிசனம் உங்களுக்கு கிடைக்க வேண்டும். பூஜை அறையில் தயாராக வைத்திருக்கும் தட்டையும் எடுத்துச் செல்லுங்கள்.

- Advertisement -

இரண்டு உள்ளங்கைகளுக்கு நடுவே அந்த பச்சை துணியை வைத்துக் கொள்ளுங்கள். அந்தப் பச்சை துணிக்கு மேலே மூன்று 1 ரூபாய் நாணயம், கிராம்பு, வசம்பு, பச்சரிசி இந்த பொருட்களையும் வைத்து சந்திர பகவானை பார்த்து உங்களுக்கு இருக்கக்கூடிய பண கஷ்டம், கடன் கஷ்டம் எல்லாம் தீர வேண்டும் என்று மனதார வேண்டிக் கொள்ளுங்கள். சந்திர பகவானின் பிரகாசமான ஒளியானது உங்கள் உள்ளங்கையில், பச்சை துணிக்குள் இருக்கும் பொருட்களின் மீது கட்டாயம் விழ வேண்டும்.

ஐந்து நிமிடங்கள் உள்ளங்கைகளில் வைத்திருக்கும் பொருட்களை சந்திர பகவானின் தரிசனத்தில் காட்டிக் கொண்டு இருக்க வேண்டும். அதன் பின்பு, சந்திர பகவானின் தரிசனம் பெற்ற அதே இடத்தில் நின்று, ஒரு பச்சை நிற நூலை கொண்டு இந்த முடிச்சை கட்டிக்கொள்ளுங்கள். உடனடியாக இந்த முடிவினை கொண்டுவந்து உங்களுடைய பணப்பெட்டியில் வைத்து விடுங்கள்.

அடுத்த மாத பௌர்ணமி தினம் வரை இந்த முடிச்சு உங்களுடைய பணப் பெட்டியிலேயே இருக்கட்டும். பிறகு பாருங்கள் உங்களுக்கு வாழ்க்கையில் ஏற்படக்கூடிய மாற்றத்தை! அடுத்து வரக்கூடிய பவுர்ணமி தினத்தில் அந்த முடிச்சில் இருக்கக்கூடிய பச்சரிசியை மட்டும் எடுத்து காக்கை குருவிகளுக்கு போட்டுவிட்டு, பச்சை நிறத் துணியைத் துவைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். மற்றபடி அந்த முடிச்சுகள் இருக்கும் ஒரு ரூபாய் நாணயங்கள் வசம்பு கிராம்பு எல்லா பொருட்களையும் அடுத்து வரக்கூடிய பவுர்ணமிக்கு மீண்டும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

praying-god1

அடுத்த பௌர்ணமி தினத்தில் இதேபோல் சந்திர பகவானின் தரிசனத்தை பெற்று, அந்தப் பச்சை துணியில் உள்ள பொருட்களை, சந்திர பகவானின் பிரகாச ஒளியில் காட்டி முடிச்சுப் போட்டு மீண்டும் இந்த முடிச்னை உங்களுடைய பீரோவில் தொடர்ந்து வைத்து கொண்டு வர வேண்டும். அவ்வளவு தான். நிச்சயமாக உங்கள் வீட்டில் இருக்கும் பணம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு நிரந்தரமாக ஒரு தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.