எல்லோருக்குமே, செய்யக்கூடிய வேலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட வேண்டும் நிறைய பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கத்தான் செய்கிறது. ஆனால் எவ்வளவுதான் உழைத்தாலும், சில பேர் தங்களுடைய வேலையில், வியாபாரத்தில் சிறப்பான முன்னேற்றத்தை அடைய முடியாது.
இப்படிப்பட்டவர்களுக்கு கடின உழைப்பு இருக்குமே தவிர, அதிர்ஷ்டம் சுத்தமாக இருக்காது. வெறும் கடின உழைப்பு இருந்து. அதிர்ஷ்டம் இல்லையென்றால் ஒரு மனிதனுக்கு முன்னேற்றம் எளிதில் கிடைக்காது. உங்கள் உழைப்போடு சேர்த்து, அதிர்ஷ்டத்தை கொண்டு வந்து சேர்க்க போகும் இந்த ஆன்மீகம் சார்ந்த பரிகாரத்தை முயற்சி செய்து பாருங்கள். எவ்வளவு உழைத்தும் பணம் சம்பாதிக்க முடியாத நீங்கள், மிக சுலபமாக அந்த பணத்தை சம்பாதித்து விட்டு நிம்மதியாக வாழலாம்.
பணக்கஷ்டம் தீர பெருமாள் பரிகாரம்
சுலபமாக பணம் சம்பாதிப்பது என்றால் குறுக்கு வழியில் அல்ல. நேர் வழியில் தான். உங்களுடைய முயற்சிகளுக்கு சீக்கிரம் வெற்றி கிடைக்கும் அதற்கு உண்டான ஆன்மீகம் சொல்லும் தாந்திரீக பரிகாரம் தான் இது. இந்த பரிகாரத்திற்கு நமக்கு தேவை ஒரு ஜாதிக்காய். ஜாதிக்காய்க்கு அபரிவிதமான மருத்துவ பலன்கள் இருக்கிறது. அதைவிட அதிகமாகவே மகத்துவமும் இருக்கிறது.
இந்த ஜாதிக்காய் பணத்தை வசியம் செய்யக்கூடிய பொருள்களின் பட்டியல் முதலிடம் வகிக்கிறது என்று சொன்னால் அது மிகையாகாது. இன்று சனிக்கிழமை பெருமாளுக்கு உரிய தினம். இன்று மாலை 6:00 மணியிலிருந்து 7:00 மணிக்கு இந்த பரிகாரத்தை நீங்கள் செய்ய தொடங்கலாம்.
பூஜை அறையில் விளக்கு ஏற்றி வைத்துவிட்டு குலதெய்வத்தையும் மகாலட்சுமியையும் வேண்டி பெருமாளை வணங்கி விடுங்கள். மகாலட்சுமியை கும்பிட்டால் பெருமாள் தானாக உங்களைத் தேடி வந்து விடுவார். காரணம் பெருமாளின் மார்பகத்தில் தான் மகாலட்சுமி தாயார் வாசம் செய்கிறார்கள். சரி இப்போது உங்களுடைய வலது கையில் ஜாதிக்காயை வைத்துக் கொள்ளுங்கள்.
அந்த விஷ்ணு பகவானின் ஒரு நாமாவளியான இந்த நாமத்தை 108 முறை சொல்லி உரு ஏற்றிக் கொள்ளுங்கள். நீங்கள் கையில் ஜாதிக்காயை வைத்துக்கொண்டு இந்த மந்திரத்தை சொல்லும் போது, மந்திரத்தின் சக்தி ஜாதிக்காய்க்குள் இறங்கிவிடும். நீங்கள் உச்சரிக்க வேண்டிய மந்திரம் இதுதான். ‘ஓம் புரந்தராய நம’. இந்த மந்திரம் விஷ்ணு அஷ்டோத்திர நாமாவளியில் சொல்லப்பட்டுள்ளது.108 பெருமாளின் நாமங்கள் கொடுக்கப்பட்டிருக்கும்.
அதில் ஒரு பெயர்தான் இந்த மந்திரம். இந்த மந்திரத்தை சொல்லும் போது உங்களிடம் இருக்கக்கூடிய பணத்தடை விலகும் என்று சொல்லப்பட்டுள்ளது. மந்திரத்தை உச்சரித்துவிட்டு கையில் இருக்கும் ஜாதிக்காயை ஒரு சின்ன கிண்ணத்தில் போட்டு அப்படியே பணம் வைக்கும் பெட்டியில் வைக்கலாம். நகை வைக்கும் இடத்திலும் வைக்கலாம்.
ஒவ்வொரு சனிக்கிழமையும், இதே ஜாதிக்காயை எடுத்து இந்த நாமத்தைச் சொல்லி உரு ஏற்றி பீரோவில் வையுங்கள். எத்தனை நாள் இந்த ஜாதிக்காய்க்கு, இந்த மந்திரத்தை சொல்லி உருவேற்றிக் கொள்கிறீர்களோ, அவ்வளவு தூரம் உங்களுக்கு அதிர்ஷ்டம் அதிகரிக்கும். பண வரவு அதிகரிக்கும். ஒரு வருடமானாலும் ஜாதிக்காய்க்கு எந்த பிரச்சனையும் இல்லை. அதை மாற்ற வேண்டாம்.
இதையும் படிக்கலாமே: கோடீஸ்வர யோகம் தரும் வளர்பிறை அஷ்டமி வழிபாடு
நீங்கள் அப்படியே பீரோவில் வையுங்கள். ஜாதிக்காய் ஓட்டை விட்டு விட்டது. பூச்சி அரித்து விட்டது எனும் போது மட்டும் பழைய ஜாதிக்காயை செடி கொடிகளுக்கு கீழே போட்டுவிட்டு, மீண்டும் புது ஜாதிக்காயை எடுத்து உரு ஏற்ற தொடங்கி விடலாம். ஆன்மீகம் சொல்லும் இந்த பரிகாரத்தில் நம்பிக்கை உள்ளவர்கள் மட்டும் பின்பற்றி பலன் பெறவும்.