பண கஷ்டம் வராமல் இருக்க பரிகாரம்

cash
- Advertisement -

பணக்கஷ்டம் வருவதும் போவதும் ஒரு மனிதனுக்கு இயல்பாக நடக்கக்கூடிய விஷயம் தான். பணம் வரும்போது அதை சேமித்து வைத்துக்கொள்ள பாருங்கள். அப்போதுதான் வருமானம் இல்லாத போது நம்மால் வாழ்க்கையை நடத்திச் செல்ல முடியும். எவ்வளவு பணம் வந்தாலும், அதை அந்த நேரத்திலேயே செலவு செய்யக் கூடிய பழக்கத்தை கொண்டவர்கள், நிச்சயம் வாழ்க்கையில் கஷ்டப்படக்கூடிய சூழ்நிலைக்கு தள்ளப்படுவார்கள்.

பணத்தை எடுத்து வைக்கவே முடியாத சூழ்நிலை இருந்தாலும், கஷ்டப்பட்டு நூறு ரூபாயை உண்டியலில் போட்டு சேர்க்கும் குடும்பத்தில் நிச்சயம் செல்வ செழிப்பு படிப்படியாக உயரத் தொடங்கும். பணக்கஷ்டம் வராது. எந்த காரணத்தைக் கொண்டும் கையில் ஒரு ரூபாய் கூட வைத்துக் கொள்ளாமல் செலவு செய்யாதீங்க. பிறகு கையில் பணம் இல்லாத போது யாரை திட்டியும், யாரை குறை சொல்லியும், யாரிடம் சண்டை போட்டும் ஒரு பிரயோஜனமும் இல்லை.

- Advertisement -

சரி இந்த பணத்தட்டுப்பாடு வராமல் இருக்க வேண்டும் என்றால் ஆன்மீக ரீதியாக என்ன பரிகாரம் செய்யலாம். அதே சமயம் பண வரவை அதிகப்படுத்தும் பரிகாரத்தையும் இந்த ஆன்மீகம் சார்ந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகின்றோம். தினமும் காலையில் எழுந்து சுத்த பத்தமாக முதலில் குளித்து விடுங்கள்.

பண கஷ்டம் தீர செல்வம் பெருக பரிகாரம்

சுத்த பத்தமாக குளித்து முடித்த பிறகு உங்களுடைய இடது கையின் நிரம்ப கல் உப்பை எடுத்துக் கொள்ளுங்கள். உங்களுடைய தலையை 27 முறை சுற்றி இந்த கல் உப்பை தண்ணீரில் கரைத்து சிங்கில் கொட்டி விடுங்கள். உங்களை பிடித்த நெகட்டிவ் எனர்ஜி விலகும். தினம் தினம் இந்த வேலையை தொடர்ந்து செய்ய வேண்டும்.

- Advertisement -

உங்களுக்கு எதிர்மறை ஆற்றலாலோ கண் திருஷ்டியாலோ எந்த பாதிப்பும் வராது. நம்முடைய உடம்பை நெகட்டிவ் எனர்ஜியிலிருந்து காப்பாற்ற காப்பாற்ற தான் பணத்தட்டுப்பாடு வராமல் இருக்கும். ஆகவே இதை சின்ன விஷயமாக நினைக்காதீங்க. அலட்சியமாகவும் நினைக்காதீங்க. இந்த பரிகாரத்தை தொடர்ந்து 48 நாள் செய்து பாருங்கள். வாழ்க்கையில் பெரிய அளவில் நல்ல மாற்றம் தெரியும்.

சரி காலையில் எழுந்து குளித்து முடித்துவிட்டு கல்லுப்பை சுற்றி தண்ணீரில் போட்டு விட்டோம். உடம்பை பிடித்த நெகட்டிவ் எனர்ஜியை விலக்கி விட்டோம். அடுத்தபடியாக என்ன செய்வது. மூன்று கிராம்பு எடுத்து, உள்ளங்கைகளில் வைத்துக் கொள்ளுங்கள். அந்த உள்ளங்கைகளை மூடிக்கொண்டு உங்களுடைய நெஞ்சுக்குழிக்கு நேராக எடுத்துச் செல்லுங்கள்.

- Advertisement -

அப்படியே நெஞ்சுக்குழிக்கு பக்கத்தில் கையை வைத்துக்கொண்டு வருமானம் பெருக வேண்டும், செல்வ செழிப்பு உயர வேண்டும். மஹாலக்ஷ்மியின் அருளாசி கிடைக்க வேண்டும் என்ற பிரார்த்தனை செய்து இதை ஒரு பேப்பரில் வைத்து மடித்து பர்ஸில் வைத்துக் கொள்ளவும். தினமும் இந்த கிராம்பு பரிகாரத்தை செய்ய வேண்டாம்.

வாரத்தில் ஒரு நாள் இப்படி வேண்டி கிராம்பை பர்ஸில் வைத்தால் உங்களுக்கு பணத்தடை இருக்காது. வருமானம் வருவதும் போவதுமாக இருக்கும். வரக்கூடிய வருமானத்தை சேமித்து வைத்துக் கொள்வது உங்கள் திறமை. ஒரு வாரம் கழித்து பழைய கிராம்பை கால் படாத இடத்தில் போட்டுவிட்டு, மீண்டும் புது கிராம்பை எடுத்து வேண்டி மடித்து பரிசில் வைத்துக் கொள்ளுங்கள்.

இதையும் படிக்கலாமே: ஐஸ்வர்யம் தரும் கால பைரவர் வழிபாடு

வீட்டில் இருக்கும் பெண்களும் இந்த வழிபாட்டை மேற்கொள்ளலாம். வேலைக்கு செல்லும் பெண்கள் ஆண்களும் இந்த பரிகாரத்தை செய்யலாம். தினமும் கல்லுப்பை தலையை சுற்றி போட மறக்காதீங்க. அந்த நெகட்டிவ் எனர்ஜியை உங்களிடம் இருந்து தூர தூக்கிப்போட்டு விட்டாலே போதும். உங்கள் வாழ்க்கையில் வரும் பெரும் அளவு கஷ்டத்தில் இருந்து தப்பித்து விடுவீர்கள். எளிமையான ஆன்மீகம் சொல்லும் இந்த பரிகாரங்கள் உங்களுக்கு பயனுள்ளபடி அமையும் என்ற நம்பிக்கையில் இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -