- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalஇந்த ஒரு பூ நம்மிடம் இருந்தால் பண பிரச்சனைகள் அனைத்தும் தீர்ந்துவிடும்.

இந்த ஒரு பூ நம்மிடம் இருந்தால் பண பிரச்சனைகள் அனைத்தும் தீர்ந்துவிடும்.

- Advertisement -

அதிகமாக பணம் சம்பாதிக்க வேண்டும் என்பதுதான் பலரின் இலட்சியமாக இருக்கிறது. அதற்காக பல வழிகளை அவர்கள் பின்பற்றி வருகிறார்கள். அந்த வழிகளில் வெற்றி அடைகிறார்களா என்று கேட்டால் அது ஒரு சிலருக்கு மட்டுமே சாத்தியமாகிறது. அப்படிப்பட்ட சூழ்நிலையில் பணத்தை அதிகமாக சம்பாதிப்பதற்கும், அதேசமயம் அந்தப் பணம் வீண் விரையம் ஆகாமல் சேமிப்பாக தங்கள் கையிலே இருப்பதற்கும் ஒரு பூ இருந்தால் போதும். இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் எந்த பூவை பயன்படுத்தி பணத்தை ஈர்த்து உடன் வைத்துக் கொள்ளலாம் என்று தான் பார்க்கப் போகிறோம்.

நேர்மறை சக்திகள், எதிர்மறை சக்திகள் என்று இரண்டு சக்திகள் இருக்கின்றன. இந்த சக்திகள் தான் ஒவ்வொரு பொருளிலும் நிறைந்து இருக்கிறது. எந்த பொருளில் நேர்மறை சக்திகள் அதிகமாக இருக்கிறதோ அந்த பொருளால் நன்மைகள் அதிகமாக ஏற்படும். அதே போல் எதிர்மறை சக்திகள் எந்த பொருளில் அதிகமாக இருக்கிறதோ, அந்த பொருளால் தீமைகள் ஏற்படும் என்று கூறப்படுகிறது. இதே போல்தான் பணத்தை ஈர்ப்பதற்கு என்று பல பொருட்கள் இருக்கின்றன. அந்த பொருட்களை நாம் முறையாக பயன்படுத்தும் பொழுது பணம் நம்மால் ஈர்க்கப்பட்டு நம்முடனே நிலையாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

- Advertisement -

அந்த வகையில் இன்று நாம் பார்க்கப் போவது தான் குங்குமப்பூ. பொதுவாக குங்குமப்பூவை கர்ப்பிணி பெண்கள் சாப்பிட வேண்டும் என்று கூறும் வழக்கம் உண்டு. குங்குமப்பூவை கர்ப்பிணி பெண்கள் சாப்பிடும் பொழுது ஆரோக்கியமான குழந்தை பிறக்கும் என்பது அறிவியல் ரீதியான உண்மையாக இருக்கிறது. அப்படி ஆரோக்கியமான ஒரு பூவை நாம் எப்படி பயன்படுத்தினால் பணத்தை நம்மிடம் தக்க வைத்துக் கொள்ள முடியும் என்று பார்ப்போம்.

இதற்கு இரண்டு வழிகள் இருக்கின்றன. மகாலட்சுமியின் அம்சம் பொருந்திய ஒரு வெற்றிலையை எடுத்துக் கொள்ள வேண்டும். அந்த வெற்றிலையில் சிறிது குங்குமப்பூவை வைத்து அந்த குங்கும பூவின் சக்தியை அதிகரிப்பதற்காக சிறிது பச்சைக் கற்பூரத்தையும் சேர்த்து வைத்து நன்றாக மடித்து சுக்கிர ஹோரையில் பணம் இருக்கும் பெட்டியில் வைக்க வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் அங்கு ஒரு ஆகர்சன சக்தி உருவாக்கி பணத்தை ஈர்த்து சேமித்து வைக்க உதவும். 10 நாட்களுக்கு ஒரு முறை வெற்றியை மற்றும் மாற்றிக் கொண்டால் போதும்.

- Advertisement -

இரண்டாவது முறை குங்குமப்பூ தீபம். இந்த தீபத்தை நாம் தினமும் ஏற்றலாம். எந்த விளக்கில் வேண்டுமானாலும் ஏற்றலாம். ஒரு விளக்கில் நல்லெண்ணெய் ஊற்றி திரி போட்டு, அதில் ஐந்து குங்குமப்பூவையும் போட்டு தீபம் ஏற்ற வேண்டும். இதை மூன்று நாட்களுக்கு ஒரு முறையோ அல்லது நான்கு நாட்களுக்கு ஒரு முறையோ விளக்கை சுத்தம் செய்து புதிதாக மாற்றிக் கொள்ளலாம்.

தினமும் இவ்வாறு விளக்கேற்றுவதன் மூலம் குங்குமப்பூவில் இருக்கக்கூடிய நேர்மறை சக்தியானது வீட்டில் நிறைந்து பண பிரச்சனை என்பது முற்றிலும் தீர்ந்துவிடும். அதே சமயம் குடும்பத்தில் இருக்கக்கூடிய சண்டை சச்சரவுகள் நீங்கி குடும்பம் ஒற்றுமையுடன் மகிழ்ச்சியாக இருக்கும்.

இதையும் படிக்கலாமே: அரச வாழ்வை தரும் அரச மரத்தை இப்படி வழிபட்டால் ராஜ யோகம் தேடி வரும்.

இந்த ஒரு பூவை வைத்து நம் பண பிரச்சனையையும், குடும்பப் பிரச்சினையையும் நாம் எளிமையான முறையில் தீர்த்துக் கொள்ள முடியும்.

சற்று முன்