- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalஅவசர பண தேவையை பூர்த்தி செய்யும் மந்திரம்.

அவசர பண தேவையை பூர்த்தி செய்யும் மந்திரம்.

- Advertisement -

எவ்வளவு பெரிய பணக்காரனாக இருந்தாலும் ஏதோ ஒரு சமயத்தில் அவசர தேவைக்கு பணத்தை புரட்ட முடியாமல் கஷ்டப்படும் சூழ்நிலை வரும். ஏழ்மை நிலையில் நடுத்தர வர்க்கத்தில் இருப்பவர்களுக்கும் அவசர தேவைக்கு பணத்தை புரட்ட முடியாத சூழ்நிலை வரும். எது எப்படியாக இருந்தாலும் சரி உங்களுடைய தேவைக்கு பணம் வேண்டும்.

அதுவும் சில இக்கட்டான சூழ்நிலையில் சிக்கும்போது பணத்தை எப்படி புரட்டுவது என்று தெரியாமல் திக்கு முக்காடுவோம். பல முயற்சிகளை மேற்கொள்வோம். முயற்சிகள் செய்வதில் எந்த தாமதமும் இருக்கக் கூடாது. தேவைக்கேற்ப பணத்தை சம்பாதிக்கவும் பணத்தை தேடி ஓடுவோம். முயற்சிகளை செய்து கொண்டே இருங்கள்.

- Advertisement -

முயற்சிகளோடு சேர்த்து இந்த பரிகாரத்தை செய்யும் போது தேவையான பணம் உங்கள் கையை வந்து சேரும். ஆன்மீகம் சார்ந்த பரிகாரங்களை நம்பிக்கையோடு செய்யும் போது பலன் அபரிவிதமாக கிடைக்கும். நம்பிக்கையாக பரிகாரம் செய்தவர்களுக்கு இது நன்றாகவே தெரியும். நம்பிக்கை உள்ளவர்கள் இந்த பதிவை படித்து பாருங்கள். உங்களுடைய நம்பிக்கை என்றுமே வீண் போகாது. அவசரப் பணத் தேவையை பூர்த்தி செய்யும் மந்திரம் இதோ.

அவசர பண தேவை பூர்த்தியாக மந்திரம்

அவசர பண தேவையை பூர்த்தி செய்யக்கூடிய இரண்டெழுத்து மந்திர வார்த்தை “ஸ்ரீம்”. இது மகாலட்சுமிக்கு உரிய பீஜ மந்திரம். நாம் பிறந்த தேதிக்கும், நாம் வாழக்கூடிய வாழ்க்கைக்கும் தொடர்பு உண்டு. பிறந்தநாள் வைத்து ஜாதகம் கணிக்கப்படுகிறது. பிறந்த நாளை வைத்து தானே நம்முடைய தலையெழுத்தை நிர்ணயிக்கிறார்கள். நீங்கள் பிறந்த தேதி எது. ஆங்கில தேதியோ தமிழ் தேதியோ, உங்களுக்கு எது தெரியுமோ அதை எடுத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

ஒரு வெள்ளை காகிதத்தில் “ஸ்ரீம்” என்ற வார்த்தையை எழுத வேண்டும். நீங்கள் எந்த தேதியில் பிறந்தீர்களோ, அத்தனை முறை அந்த காகிதத்தில் “ஸ்ரீம்” என்ற மந்திரத்தை எழுதி அந்த பேப்பரை மடித்து கையில் வைத்துக்கொண்டு பிரபஞ்சத்திடம் வேண்டிய பணத்தை கேளுங்கள். நிச்சயமாக அவசர தேவைக்கு பணம் கிடைக்கும்.

எழுதிய இந்த பேப்பரை நான்காக மடித்து வீட்டில் இருக்கும் பூஜை அறையில் மகாலட்சுமியின் திருவருவப்படத்தில் பாதத்தில் வைத்து விட வேண்டும். அவ்வளவுதான். பணம் உங்கள் கைக்கு வந்தவுடன் மந்திரம் எழுதி வைத்திருக்கும் பேப்பர் கொஞ்சம் பழையதான பிறகு பூஜை அறை, குப்பைகளுடன் சேர்த்து விடலாம். தவறு ஒன்றும் கிடையாது. இவ்வளவுதான் பரிகாரம். இந்த பரிகாரத்தை இந்த நேரத்தில் இப்போதுதான் செய்ய வேண்டும் என்ற எந்த கட்டாயமும் இருக்காது.

- Advertisement -

இன்னும் மூன்று மாதத்தில் பள்ளிக்கூடத்தில் படிக்கும் உங்களுடைய பிள்ளைக்கு ஃபீஸ் கட்ட வேண்டும். அந்த பணத்தை இன்றிலிருந்து சேர்க்க தொடங்குகிறீர்கள். பணம் சீக்கிரம் சேர வேண்டும், பணம் சீக்கிரம் கிடைக்க வேண்டும் என்றும் இந்த பரிகாரத்தை செய்யலாம். ஒரு வீடு கட்டுறீங்க அல்லது வீடு வாங்க, நிலம் வாங்க பணம் சேர்ந்து கொண்டே இருக்கிறது.

இதையும் படிக்கலாமே: 16-02-2025 சங்கடஹர சதுர்த்தி வழிபாடு

இந்த தேதியில் ரிஜிஸ்ட்ரேஷன், இந்த தேதிக்குள் இவ்வளவு பணம் தேவை என்றாலும் இந்த பரிகாரத்தை செய்யலாம். நாளைக்கு சாப்பாட்டுக்கு செலவுக்கு பணம் இல்லை என்று நினைத்து இன்று இந்த மந்திரத்தை எழுதி உங்களுடைய முயற்சிகளை மேற்கொண்டாலும், நிச்சயம் தேவைக்கு ஏற்ப பணம் கிடைக்கும் என்ற தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

சற்று முன்