அவசரத்திற்கு பணம் கிடைக்க சொல்ல வேண்டிய 1 வரி மந்திரம் என்ன தெரியுமா?

Kuberan valipadu

எல்லோருக்குமே பணத் தேவை என்பது இருக்கும் ஆனால் ஒரு சிலருக்கு மட்டுமே அது அவசரமாகத் தேவைப்படும். ஏதோ ஒரு காரியத்திற்காக உங்களுக்கு அவசரமாக பணம் தேவைப்படும் பொழுது இந்த மந்திரத்தை உச்சரித்து வேண்டி வணங்கினால் உங்களுக்குக் கிடைக்க வேண்டிய நியாயமான பணம் நியாயமான முறையில் உடனே கிடைக்கும். அப்படி என்ன மந்திரம் நாம் உச்சரிக்க வேண்டும்? எப்படி உச்சரிக்க வேண்டும்? என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை படியுங்கள்.

kuberan

செல்வத்திற்கும், பணத்திற்கும் அதிபதியாக விளங்கும் குபேரனை வழிபாடு செய்பவர்களுக்கு பணத்தேவை பூர்த்தி அடையும் என்பது நியதி. நாடு நகரம் எல்லாம் இழந்து, அனைத்து செல்வங்களையும் பறி கொடுத்து விட்டு நின்ற குபேரனுக்கு, மகாவிஷ்ணு ஆனவர் மகாலட்சுமியை வணங்கி வீட்டில் நெல்லி மரத்தை வளர்த்து வா என்று கூறினாராம். குபேர பகவான் மகாவிஷ்ணுவின் சொல்படியே நெல்லி மரத்தை வளர்த்து மீண்டும் இழந்த செல்வங்களை எல்லாம் மீட்டு எடுத்தார்.

இழந்த செல்வங்களை மீட்டு எடுக்கவும், இழந்த பணம் மற்றும் சொத்துக்களை திரும்பப் பெறவும், அவசர தேவைக்கு பணம் கிடைக்கவும் நாம் உச்சரிக்க வேண்டிய இந்த குபேர மந்திரத்தை அனைவரும் தெரிந்து வைத்திருப்பது மிகவும் நல்லது. இம்மந்திரத்தை முறையாக 108 முறை உச்சரித்து வருபவர்களுக்கு எத்தகைய சூழ்நிலையிலும் பணத்தேவை, பொருள் தேவை அனைத்தும் பூர்த்தி அடையும்.

kubera

திடீரென உங்களுக்கு பணத் தேவை ஏற்படும் பொழுது உங்களுடைய கைகளை தியான நிலையில் வைத்துக் கொண்டு அமைதியாக ஓரிடத்தில் அமர்ந்து அல்லது பூஜை அறையில் அமர்ந்து கொண்டு கீழ்வரும் என்ற மந்திரத்தை 108 முறை தொடர்ந்து உச்சரியுங்கள் நீங்கள் இந்த மந்திரத்தை உச்சரிக்கும் போது உங்கள் மனதில் இறைவனைத் தவிர வேறு ஒரு சிந்தனை இருக்கக் கூடாது.

- Advertisement -

குபேர மந்திரம்:
ஓம் குபேராய நமஹ!
ஓம் ஸ்வர்ண ரக்ஷகாய நமஹ!

kuberan

இந்த மந்திரத்தை தினமும் சுவாமி படத்தின் முன்பு நின்று வணங்கி இதே போல உச்சரித்து வருபவர்களுக்கு பணத் தேவைகள் பூர்த்தி அடைந்து கொண்டே இருக்கும். எந்த சூழ்நிலையிலும் அவர்களுக்குப் பண பிரச்சினை என்பது வரவே செய்யாது. குபேரனுக்கு உரிய இந்த மந்திரம் மிகவும் சக்தி வாய்ந்ததாக கருதப்படுகிறது. எளிமையாக இருக்கும் இந்த குபேர மந்திரத்தை அனுதினமும் வணங்குபவர்களுக்கு ஸ்வர்ண பிராப்தியும் உண்டாகும். அதாவது தங்கம் சேர்வதற்கும் இந்த மந்திரத்தை தினமும் உச்சரிக்கலாம். பெண் பிள்ளைகளைப் பெற்றவர்கள் அவர்களை திருமணம் பண்ணிக் கொடுக்கும் பொழுது எப்படி தங்கத்தை சேர்ப்பது? என்கிற மனக் கவலையில் இருப்பார்கள். தங்கத்தை சேர்க்கவும், வீட்டில் தங்கம் பெருகவும் சொல்ல வேண்டிய இந்த சக்தி வாய்ந்த மந்திரத்தை தினமும் குபேரன் படத்திற்கு முன்பு 108 முறை உச்சரித்து வந்தால் எண்ணிய எண்ணங்கள் ஈடேறும்.

nellikai1

குபேரனுக்குரிய திசை வடக்கு ஆகும். வடக்கு பார்த்த குபேரனுக்கு விசேஷ சக்திகள் உண்டு எனவே குபேரனுடைய படத்தை வடக்கு பக்கம் வைத்து, வியாழன் கிழமை தோறும் நாணயங்களால் அர்ச்சனை செய்வது இன்னும் கூடுதல் பலன்களை கொடுக்கும். ஒவ்வொரு முறை நீங்கள் இந்த மந்திரத்தை உச்சரிக்கும் பொழுதும், ஒவ்வொரு நாணயமாக குபேரன் மீது போட்டுக் கொண்டே வர வேண்டும். நெல்லிக்கனியை நிவேதனம் வைக்க வேண்டும். இப்படி குபேர மந்திரத்தை உச்சரித்து, நாணய அர்ச்சனை செய்யும் பொழுது வேண்டிய வேண்டுதல் நிறைவேறும். பணத் தேவைகள் யாவும் பூர்த்தியாகும்.