நம்மில் பலருக்கும் இருக்கக்கூடிய மிகவும் முக்கியமான பிரச்சனைகளில் ஒன்றாக திகழ்வதுதான் கடன் பிரச்சனை. பிறரிடம் இருந்து வட்டிக்காக பணத்தை வாங்கி இருந்தாலும், நகையை அடமானம் வைத்து பணத்தை வாங்கி இருந்தாலும், வீட்டை அடமானம் வைத்து பணத்தை வாங்கி இருந்தாலும் அந்த பணத்தை திரும்ப செலுத்துவதற்குள் போதும் போதும் என்று ஆகிவிடும். பலருக்கும் வாங்கிய பணத்திற்குரிய வட்டியை கட்டுவதற்கே போதுமான அளவு பணவரவு இல்லாமல் கஷ்டப்பட்டு கொண்டு இருப்பார்கள். அப்படிப்பட்டவர்கள் வளர்பிறை பஞ்சமி திதி அன்று வராகி அம்மனை நினைத்து செய்ய வேண்டிய ஒரு தாந்திரீக பரிகாரத்தை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
வராகி அம்மனை யாரொருவர் வழிபாடு செய்கிறார்களோ அவர்களுக்கு ஏற்படக்கூடிய கஷ்டங்கள் அனைத்தையும் வராகி அம்மன் நீக்குவார் என்று கூறப்படுகிறது. மேலும் யாரால் அவர்களுக்கு கஷ்டம் ஏற்படுகிறதோ அவர்களையும் விலகி ஓட செய்துவிடுவார் என்றும் கூறப்படுகிறது. அந்த வகையில் கடன் பிரச்சினையால் பாதிக்கப்பட்டு கஷ்டப்பட்டு கொண்டு இருப்பவர்களுக்கு அந்த கடன் பிரச்சினையை நீக்கி பணவரவை அதிகரிப்பதற்கு வளர்பிறை பஞ்சமி திதி அன்று செய்ய வேண்டிய ஒரு தாந்திரீக பரிகாரத்தை பற்றி தெரிந்து கொள்வோம்.
இந்த பரிகாரத்தை இன்று அதாவது ஜனவரி மாதம் நான்காம் தேதி சனிக்கிழமை அன்று இரவு 7 மணியில் இருந்து 12 மணிக்குள் செய்ய வேண்டும். இதற்கு நமக்கு ஒரே ஒரு ஐந்து ரூபாய் நாணயம் இருந்தால் போதும். எந்த இடத்தில் இருந்து கொண்டு வேண்டுமானாலும் இந்த பரிகாரத்தை நாம் செய்யலாம். இந்த தாந்திரீக பரிகாரத்தை செய்வதற்கு முன்பாக குளித்துவிட்டு வந்து செய்து விடுங்கள். அசைவம் சாப்பிட்டு இருந்தாலும் பரவாயில்லை. வேறு ஏதாவது தீட்டு காரியத்திற்காக சென்றிருந்தாலும் பரவாயில்லை.
ஒரு அமைதியான இடமாக பார்த்து ஒரு இடத்தில் அமைந்து கொள்ளுங்கள். கீழே அமர்வதாக இருக்கும் பட்சத்தில் ஒரு விரிப்பை விரித்து அதற்கு மேல் அமர்ந்து கொள்ள வேண்டும். ஒரே ஒரு ஐந்து ரூபாய் நாணயத்தை எடுத்து நம்முடைய வலது உள்ளங்கையில் வைத்துக்கொள்ள வேண்டும். பிறகு வராகி அம்மனின் பின்வரும் இந்த மந்திரத்தை முழு மனதோடு நிறுத்தி நிதானமாக குறைந்தது 15 நிமிடமாவது கூற வேண்டும். தங்களுக்கு நேரம் இருக்கும் பட்சத்தில் இந்த மந்திரத்தை அரை மணி நேரம் கூட கூறலாம். இப்படி கூறுவதன் மூலம் வராஹி அம்மனின் அருளால் நமக்கு பணவசியம் என்பது ஏற்படும்.
இந்த மந்திரத்தை கூறி முடித்த பிறகு அந்த ஐந்து ரூபாய் நாணயத்தை எடுத்து பத்திரமாக உங்களுடைய கல்லாப்பெட்டியிலோ அல்லது பர்ஸிலோ அல்லது பணம் வைக்கும் இடத்திலோ அல்லது நகை வைக்கும் இடத்திலோ வைத்து விட வேண்டும். அதை செலவு செய்யக்கூடாது. இந்த தாந்த்ரீக பரிகாரத்தை வீட்டில் தான் செய்ய வேண்டும் என்று இல்லை. ஆலயத்திலும் செய்யலாம், நாம் வேலை செய்யும் இடத்திலிருந்து கொண்டும் செய்யலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
மந்திரம்
“ஓம் க்லீம் வராக முகி ஹ்ரீம் சித்தி ஸ்வரூபினி ஸ்ரீம் தனவசங்கரி தனம் வர்ஷய ஸ்வாகா”
இதையும் படிக்கலாமே:மார்கழி வளர்பிறை சஷ்டியில் முருகன் வழிபாடு
கையில் ஐந்து ரூபாயை வைத்துக் கொண்டு முழு மனதுடன் இந்த மந்திரத்தை இன்று இரவு 12 மணிக்குள் கூறுபவர்களுக்கு எப்பேர்ப்பட்ட கடன் பிரச்சினை இருந்தாலும் அந்தப் பிரச்சினை தீர்வதற்குரிய பணவரவு உண்டாகும் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.