- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalபண வரவை அதிகரிக்கும் சிவ மந்திரம்

பண வரவை அதிகரிக்கும் சிவ மந்திரம்

- Advertisement -

இந்த உலகத்தை படைத்து, காத்து, அழிக்கக்கூடிய தெய்வமாக திகழ்பவர்கள் தான் மும்மூர்த்திகள். அதில் மிகவும் உக்கிரமான தெய்வமாக திகழக்கூடியவர்தான் சிவபெருமான். அவர் உக்கிரமான தெய்வம் என்பதால் அவரை வணங்குவதால் நமக்கு எந்த நன்மைகளும் ஏற்படாது என்று நினைக்கக் கூடாது. அதிலும் குறிப்பாக பணரீதியான வேண்டுதல்களை சிவபெருமானிடம் வைக்கக் கூடாது என்று நினைக்க வேண்டாம். மகாலட்சுமி தாயாருக்கும், குபேர பகவானுக்கும் பணத்தை வாரி வழங்கியவர் அவர்தான். அப்படிப்பட்ட சிவபெருமானின் எந்த மந்திரத்தை கூறினால் நமக்கு பணவரவு அதிகரிக்கும் என்றுதான் இந்த மந்திரம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

அஷ்ட ஐஸ்வர்யங்களையும் வாரி வழங்கக்கூடிய தெய்வமாக திகழக்கூடியவர்தான் மகாலட்சுமி தாயார். அப்படிப்பட்ட மகாலட்சுமி தாயாருக்கு ஐஸ்வர்யத்தை வாரி வழங்கி ஐஸ்வர்ய லட்சுமி ஆக மாற்றியவர் ஐஸ்வரேஸ்வரர் என்னும் சிவபெருமான்தான். அதேபோல் அனைத்து விதமான சொத்துக்களையும் இழந்து நின்ற குபேர பகவானுக்கு செல்வ செழிப்பை வாரி வழங்கியதும் சிவபெருமான்தான்.

- Advertisement -

செல்வத்திற்கு அதிபதியாக திகழக்கூடிய இந்த இரண்டு தெய்வத்திற்கும் செல்வத்தை வழங்கியவர் சிவபெருமான் என்றால் நமக்கு வழங்காமல் இருப்பாரா? அவரிடம் உண்மையான மன நிறைவுடன், மன சுத்தத்துடன், மன ஒருமைப்பாட்டுடன் வழிபடும் பொழுது கண்டிப்பான முறையில் நமக்கும் அவர் செல்வ செழிப்பை வாரி வழங்குவார். அப்படி அவர் செல்வ செழிப்பை வாரி வழங்க வேண்டும் என்றால் அவருக்குரிய மந்திரத்தை நாம் முழுமனதோடு உச்சரிக்க வேண்டும்.

இந்த மந்திரத்தை அமாவாசை, பௌர்ணமி, சந்திர கிரகணம், சூரிய கிரகணம், வெள்ளிக்கிழமை போன்ற விசேஷகரமான நாட்களில் உச்சரிப்பது என்பது மிகவும் சிறப்பு. இந்த மந்திரத்தை நாம் உச்சரிப்பதன் மூலம் சிவபெருமானின் அருளை பரிபூரணமாக பெறுவதோடு மட்டுமல்லாமல் கோடீஸ்வர யோகம் கிடைப்பதற்குரிய வாய்ப்புகளும் அதிகரிக்கும்.

- Advertisement -

கிடைக்குமா? கிடைக்காதா? செய்யலாமா? செய்ய வேண்டாமா? செய்தால் நடக்குமா? செய்துதான் பார்ப்போமே? என்றெல்லாம் நினைக்காமல் நான் சிவபெருமானை முழுமனதுடன் நம்புகிறேன். அவருடைய மந்திரத்தை கூறுவேன். அவர் எனக்கு அருள் புரிவார் என்ற முழு நம்பிக்கையுடன் இந்த மந்திரத்தை கூற வேண்டும்.

இந்த மந்திரத்தை எப்பொழுது கூறுகிறோமோ அப்பொழுது வீட்டு பூஜை அறையில் விளக்கேற்றி வைத்துவிட்டு இந்த மந்திரத்தை கூறுவது என்பது சிறப்பு. வடக்கு அல்லது கிழக்கு பார்த்தவாறு அமர்ந்து கொண்டு இந்த மந்திரத்தை கூற வேண்டும். இயன்றவர்கள் கையில் ருத்ராட்சம், வில்வ இலை, விபூதி போன்ற சிவபெருமானுக்குரிய பொருட்களை கையில் வைத்துக்கொண்டு கூறுவது என்பது மிகவும் சிறப்பு.

- Advertisement -

இந்த மந்திரத்தை நாம் ஆலயத்திலும் சென்று கூறலாம். அதிலும் குறிப்பாக ஆலயத்தில் இருக்கக்கூடிய பசு தொழுவத்தில் அமர்ந்து கூறுவது என்பது மிகவும் சிறப்பு.

மந்திரம்

சிவ சிவ வசி வசி கோடீஸ்வர யோகம் வரவர ஸ்வாஹா

இந்த மந்திரத்தை படிக்கும் பொழுதே நமக்கு அதனுடைய அர்த்தம் புரிந்திருக்கும். சிவபெருமானே கோடீஸ்வர வசியம் தருவதற்கு வரவேண்டும் என்று கூறுவதாகவே இந்த மந்திரம் அமைந்திருக்கிறது.

இதையும் படிக்கலாமே வறுமை நிலை நீங்கி செல்வம் உயர கூற வேண்டிய மந்திரம்
மிகவும் எளிமையான இந்த ஒரு வரி மந்திரத்தை முழு மனதுடன் சிவபெருமானை நினைத்து தொடர்ச்சியாக கூறி வருபவர்களுக்கு அவர்களுடைய பண பிரச்சினைகள் அனைத்தும் நீங்கி கோடீஸ்வரர் யோகம் உண்டாக்கும்.

சற்று முன்