- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalபண வரவை அதிகரிக்கும் வெற்றிலை பரிகாரம்

பண வரவை அதிகரிக்கும் வெற்றிலை பரிகாரம்

- Advertisement -

நம்முடைய வாழ்க்கையில் நமக்கு ஏற்படக்கூடிய பலவிதமான நன்மைகளுக்கு தெய்வங்களின் அருள் என்பது கண்டிப்பான முறையில் வேண்டும். என்னதான் நவகிரகங்களின் ஆதிக்கத்தால் தான் நம்முடைய வாழ்க்கையில் அனைத்து விதமான நிகழ்வுகளும் நடைபெறுகிறது என்றாலும் தெய்வத்தின் அருள் இருந்தால் மோசமான கிரகங்கள் கூட நல்ல நிலைக்கு மாறி நமக்கு நன்மைகளை தந்து விடுவார்கள். அந்த வகையில் மக்களை பெரிதும் வாட்டி வதைக்கக்கூடிய பணம் தொடர்பான பிரச்சனைகள் தீர்வதற்கு தெய்வத்தின் அருளால் செய்யக்கூடிய ஒரு தாந்திரீக பரிகாரத்தை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்கப் போகிறோம்.

பண வரவை அதிகரிக்க பரிகாரம்

ஒருவருடைய வாழ்க்கையில் பணம் என்பது மிகவும் முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது. பணம் இல்லாமல் நம்மால் நம்முடைய வாழ்க்கையை வாழவே முடியாது என்று கூட கூறலாம். அப்படிப்பட்ட பணத்தை சம்பாதிப்பதற்குரிய போதுமான வாய்ப்பையும் அந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி அதிக அளவில் பணத்தை சம்பாதிப்பதற்குரிய யோகத்தையும் அருளக்கூடிய தெய்வமாக மகாலட்சுமி திகழ்கிறார். அப்படிப்பட்ட மகாலட்சுமிக்குரிய வெள்ளிக்கிழமை அன்று மகாலட்சுமியின் அம்சம் பொருந்திய பொருட்களை வைத்து செய்யக்கூடிய பரிகாரத்தை பற்றி நான் இப்பொழுது பார்க்கப் போகிறோம்.

- Advertisement -

இந்த பரிகாரத்தை ஒவ்வொரு வாரம் வரக்கூடிய வெள்ளிக்கிழமை அன்று தான் செய்ய வேண்டும். இந்த பரிகாரத்திற்கு ஒரே ஒரு வெற்றிலை மற்றும் ஒரு ஐந்து ரூபாய் நாணயம் இருந்தால் போதும். பச்சை கற்பூரம் இருப்பின் அதையும் பயன்படுத்திக் கொள்ளலாம். பொதுவாக ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் நாம் தெய்வ வழிபாட்டில் ஈடுபடுவோம். காலையிலோ மாலையிலோ அல்லது இரண்டு நேரங்களிலோ தீபம் ஏற்றி வைத்து வழிபாடு செய்யும் வழக்கத்தை வைத்திருப்போம். அவ்வாறு தீபமேற்றி வழிபாடு செய்யும்பொழுது மகாலட்சுமி தாயாரின் படத்திற்கு முன்பாக ஒரு வெற்றிலையை வைத்து அதன் மேல் ஐந்து ரூபாய் நாணயம் ஒன்றை வைக்க வேண்டும். அதற்கு மேல் ஒரு துண்டு பச்சை கற்பூரத்தை வைக்க வேண்டும். பிறகு மகாலட்சுமியின் அஷ்டகம், அஷ்டோத்திரம், கனகதாரா ஸ்தோத்திரம் போன்றவற்றில் எது தெரிகிறதோ அதை படிக்க வேண்டும் அல்லது ஒலிக்கச் செய்ய வேண்டும்.

இவ்வாறு செய்து முடித்த பிறகு ஒரு மணி நேரம் அதாவது தீபம் எரியும் நேரம் வரை அது அப்படியே மகாலட்சுமியின் பாதத்தில் இருக்கட்டும். தீபத்தை குளிர வைத்த பிறகு இந்த வெற்றிலையை வைத்து ஐந்து ரூபாய் நாணயம் மற்றும் பச்சை கற்பூரத்தை வைத்து மடித்து நாம் பணம் வைக்கக்கூடிய இடத்தில் வைத்து விட வேண்டும். அடுத்த வாரம் வெள்ளிக்கிழமை வரும் பொழுது இதை எடுத்து புதிதாக ஒரு வெற்றிலையை மகாலட்சுமிக்கு முன்பாக வைத்து பழைய ஐந்து ரூபாய் நாணயத்தை அதன் மேல் வைத்து இதே போல் வழிபாட்டை செய்து வழிபாட்டை செய்து பணம் வைக்கும் இடத்தில் வைக்க வேண்டும். பழைய வெற்றிலையை கால்படாத இடத்தில் போட்டு விட வேண்டும்.

- Advertisement -

இதையும் படிக்கலாமே: சகல செல்வங்களையும் பெற கந்த சஷ்டி மூன்றாம் நாள் பரிகாரம்

மிகவும் எளிமையான இந்த தாந்திரீக பரிகாரத்தை மகாலட்சுமி தாயாரை நினைத்து வெள்ளிக்கிழமையில் செய்பவர்களுக்கு பணவரவு அதிகரிப்பதற்குரிய வாய்ப்புகள் உண்டாகும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்