- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalபண வரவை அதிகரிக்கும் லட்சுமி பஞ்சமி பரிகாரம்

பண வரவை அதிகரிக்கும் லட்சுமி பஞ்சமி பரிகாரம்

- Advertisement -

பங்குனி மாதம் என்பது மிகவும் சிறப்புக்குரிய மாதம் என்று நம் அனைவருக்கும் தெரியும். அந்த மாதத்தில் வரக்கூடிய ஒவ்வொரு திதிகளுக்கும் ஒவ்வொரு விதமான பலன்கள் இருக்கிறது. அதிலும் குறிப்பாக வாராகி அம்மனுக்கு உகந்த வளர்பிறை பஞ்சமியை நாம் லட்சுமி பஞ்சமி என்றே கூறினோம். பஞ்சமி திதி அன்று நாம் வாராஹி அம்மனை வழிபாடு செய்யும்பொழுது வாராகி அம்மன் மகாலட்சுமி ரூபத்தில் வந்து நம்முடைய பண பிரச்சினைகளை தீர்த்து வைப்பார் என்று பொருள் படும். அப்படிப்பட்ட லட்சுமி பஞ்சமி நாளன்று பண பிரச்சனை தீர்வதற்கு பண தேவைகள் பூர்த்தி அடைவதற்கும் செய்ய வேண்டிய பரிகாரத்தை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

லட்சுமி பஞ்சமி பரிகாரம்

பெருமாளின் அவதாரங்களில் ஒன்றாக திகழக்கூடிய வராக மூர்த்தியின் பெண் வடிவமே வாராகி அம்மன் என்று புராணங்கள் கூறுகின்றன. அப்படி இருக்கும் பொழுது வாராகி அம்மனுக்கும் மகாலட்சுமி தாயாருக்கும் அதிக அளவில் தொடர்பு இருக்க தானே செய்யும். பொதுவாகவே வாராகி அம்மனை வழிபாடு செய்பவர்களுக்கு அவர்களுடைய பிரச்சினைகளும் கஷ்டங்களும் தீரும் என்று கூறி கேள்விப்பட்டிருக்கிறோம். அதுவும் பங்குனி மாதத்தில் வரக்கூடிய வளர்பிறை பஞ்சமி அன்று நாம் வாராஹி அம்மனை வழிபாடு செய்தோம் என்றால் வாராகி அம்மன் லக்ஷ்மி அம்சத்தோடு நமக்கு இருக்கக்கூடிய அனைத்து விதமான பிரச்சினையும் தீர்த்து அருள்வார் என்று கூறப்படுகிறது.

- Advertisement -

பொதுவாக வாராஹி அம்மனை வழிபாடு செய்வதற்கு இரவு நேரமே சிறந்த நேரமாக திகழ்கிறது. அந்த வகையில் இன்று மாலை 6 மணியிலிருந்து பஞ்சமி திதி நிறைவடைய கூடிய நாளை அதிகாலை 4 மணிக்குள் இந்த ஒரு பரிகாரத்தை நாம் செய்வதன் மூலம் நம்முடைய வாழ்க்கையில் இதுவரை இருந்து வந்த பண பிரச்சனைகள் அனைத்தும் நீங்கிவிடும். இந்த பரிகாரத்திற்கு நமக்கு ஒரு வெள்ளை நிற பேப்பர் வேண்டும். அதில் சிவப்பு நிற மைக்கொண்டு வாராகி அம்மனின் ஒரு மந்திரத்தை எழுத வேண்டும். அடுத்ததாக இதற்கு நமக்கு புதிதாக இருக்கக்கூடிய ஏதாவது ஒரு ரூபாய் நோட்டு ஒன்று வேண்டும்.

அந்த வெள்ளை நிற பேப்பரில் வாராகி அம்மனின் இந்த ஒரு மந்திரத்தை எழுதி அந்த பேப்பரை புதிதாக இருக்கக்கூடிய ரூபாய் நோட்டிற்குள் வைத்து நன்றாக சுருட்டி பணம் இருக்கும் இடத்தில் வைத்து விட வேண்டும். இந்த ரூபாய் நோட்டை எக்காரணத்தைக் கொண்டும் செலவு செய்யக்கூடாது. இந்த ரூபாய் நோட்டு இருக்கும் இடத்தில் வாராஹி அம்மனின் அருளும் மகாலட்சுமி தாயாரின் அருளும் பரிபூரணமாக கிடைக்கப்பெற்று பணத்திற்கு எந்தவித குறையும் இருக்காது என்று கூறப்படுகிறது.

- Advertisement -

மந்திரம்

“ஓம் ஸ்ரீம் க்லீம் தனவசங்கரி தனம் வர்ஷய வர்ஷய ஸ்வாஹா”

இதையும் படிக்கலாமே:கடன் தீர்க்கும் கொள்ளு

எவ்வளவு பெரிய பணப் பிரச்சினையாக இருந்தாலும் அந்த பண பிரச்சினை தீர்வதற்கும் தாராளமாக பணவரவு ஏற்படவும் இன்று இரவுக்குள் வாராகி அம்மனை நினைத்து இந்த ஒரு மந்திரத்தை மட்டும் எழுதி வைத்துப் பாருங்கள். உங்கள் கையில் பணம் தாராளமாக வந்து சேரும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்