- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalபண வரவை அதிகரிக்கும் வளர்பிறை அஷ்டமி

பண வரவை அதிகரிக்கும் வளர்பிறை அஷ்டமி

- Advertisement -

திதி அறிந்து செயல்படுபவர் வாழ்க்கையில் என்றுமே வெற்றிகள் தான் என்று கூறுவார்கள். இதற்கு முக்கிய காரணம் என்னவென்றால் ஒவ்வொரு திதிக்கும் ஒவ்வொரு விதமான சக்தி என்பது இருக்கும். அதுவும் வளர்பிறை, தேய்பிறை என்று இரண்டு விதமான திதிகள் மாதத்தில் வரும். வளர்பிறை திதியை பயன்படுத்தி நாம் செய்யக்கூடிய எந்த ஒரு காரியமாக இருந்தாலும் அது வளர்ந்து கொண்டே செல்லும் என்றும், தேய்பிறை திதியை தேர்ந்தெடுத்து நாம் செய்யக்கூடிய காரியங்கள் அனைத்தும் தேய்ந்து கொண்டே செல்லும் என்றும் கூறப்படுகிறது. அந்த வகையில் வளர்பிறை அஷ்டமி திதி அன்று நாம் செய்யக்கூடிய ஒரு பரிகாரம் நம்முடைய பணவரவை அதிகரிக்கும், அஷ்டலட்சுமிகளின் அருளை பெற்றுத் தரும். அந்த பரிகாரத்தை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

வளர்பிறை அஷ்டமி வழிபாடு

அஷ்டமி என்றதும் நம் நினைவிற்கு வரக்கூடிய முதல் தெய்வம் கால பைரவர் இரண்டாவது தெய்வம் வாராகி அம்மன். அஷ்டமி திதியில் கால பைரவர் இருக்கக்கூடிய கோவிலுக்கு சென்று காலபைரவருக்கு வெண்பூசணி தீபம், மிளகு தீபம், வெண்கடுகு தீபம், தேங்காய் தீபம் என்று பல விதங்களில் தீபமேற்றி வழிபாடு செய்யும் வழக்கம் என்பது இருக்கும். அதிலும் குறிப்பாக தேய்பிறை அஷ்டமியில் தான் பலரும் இந்த வழிபாட்டை மேற்கொள்வார்கள். அப்படி தேய்பிறை அஷ்டமியில் இந்த வழிபாட்டை செய்யும் பொழுது அவர்கள் வாழ்க்கையில் இருக்கக்கூடிய கஷ்டங்கள் விலகும் என்று கூறப்படுகிறது.

- Advertisement -

அதை தவிர்த்து வளர்பிறை அஷ்டமியில் நாம் காலபைரவரை வழிபாடு செய்யும் பொழுது நமக்கு அஷ்டலட்சுமிகளின் அருளும் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. ஏனென்றால் ஒவ்வொரு மாதமும் வரக்கூடிய வளர்பிறை அஷ்டமி திதி அன்று அஷ்டலட்சுமிகள் அனைவரும் காலபைரவரை வழிபாடு செய்வார்கள் என்றும், கால பைரவர் அவர்கள் அனைவருக்கும் அருளாசி புரிவார் என்றும் கூறப்படுகிறது. அதனால் அன்றைய தினத்தில் நாம் காலபைரவரை வழிபாடு செய்யும்பொழுது கால பைரவரின் அருளோடு அஷ்டலட்சுமிகளின் அருளும் நமக்கு கிடைக்கும் என்று கூறப்படுகிறது. நாம் செய்யக்கூடிய வழிப்பாடாக இருந்தாலும் பரிகாரமாக இருந்தாலும் அன்றைய தினத்தில் செய்யும் பொழுது நமக்கு செல்வ செழிப்பு என்பது அதிகரிக்கும்.

பொதுவாக மகாலட்சுமிக்குரிய பொருட்கள் என்று பல பொருட்கள் இருந்தாலும் வாசனை மிகுந்த பொருட்களில் மகாலட்சுமிக்கு அதிக அளவில் விருப்பம் இருக்கிறது என்று கூறப்படுகிறது. அதிலும் மிகவும் குறிப்பிடத்தக்க ஒரு பொருளாக திகழ்வதுதான் ஏலக்காய். ஏலக்காய் இல்லாத வீடு இருக்காது என்று கூறலாம். எந்த ஒரு இனிப்பு பொருளாக இருந்தாலும் அதில் நாம் ஏலக்காயை வாசனைக்காக சேர்ப்போம். பெருமாளின் ஆலயத்தில் கொடுக்கக்கூடிய தீர்த்தத்தில் கூட ஏலக்காயை சேர்த்திருப்பார்கள். அவ்வளவு சிறப்பு வாய்ந்த ஏலக்காய் வைத்து தான் இந்த பரிகாரத்தை நாம் செய்யப் போறோம்.

- Advertisement -

இந்த பரிகாரத்தை இன்று இரவு 12 மணிக்குள் தங்களுக்கு எப்பொழுது நேரம் கிடைக்கிறதோ அப்பொழுது செய்த வேண்டும். வீட்டு பூஜை அறையில் காலபைரவரை மனதார நினைத்துக் கொண்டு ஒரே ஒரு தீபத்தை ஏற்றி வைத்துக் கொள்ளுங்கள். பிறகு எச்சில் படாத சுத்தமான டம்ளராக ஒரு டம்ளரை எடுத்து அது நிறைய தண்ணீரை பிடித்துக் கொள்ளுங்கள். அதற்கு முன்பாக அமர்ந்து எட்டு ஏலக்காய்களை எடுத்து கையில் வைத்துக் கொள்ள வேண்டும். அஷ்ட லட்சுமிகளில் ஒவ்வொரு லட்சுமியின் பெயரை ஒவ்வொன்றாக கூறி ஒவ்வொரு ஏலக்காயும் அந்த தண்ணீரில் போட வேண்டும். அஷ்ட லட்சுமிகளின் பெயர் தெரியவில்லை என்று நினைப்பவர்கள் “ஓம் ஸ்ரீம்” என்னும் மந்திரத்தை ஒவ்வொரு முறை ஏலக்காயை போடும்போதும் சொல்லிக் கொண்டே போட வேண்டும்.

பிறகு செல்வ செழிப்பு அதிகரிக்க வேண்டும் என்று மனதார வேண்டிக்கொண்டு இந்த டம்ளரை வீட்டின் குபேர மூலையான தென்மேற்கு மூலையில் யார் கையும் படாத அளவிற்கு வைத்து விட வேண்டும். வீட்டின் தென்மேற்கு மூலையில் வைக்க இயலாத சூழ்நிலையில் இருப்பவர்கள் வீட்டு ஹாலின் தென்மேற்கு மூலையிலும் வைக்கலாம். மறுநாள் காலையில் எழுந்து இந்த ஏலக்காயை எடுத்து கால் படாத இடத்திலோ துளசி செடியிலோ போட்டுவிட்டு இந்த தண்ணீரை வீடு முழுவதும் தெளிக்க வேண்டும்.

- Advertisement -

இப்படி செய்வதன் மூலம் வீட்டில் அஷ்ட லட்சுமிகளும் குடியேறுவார்கள் என்றும் அவர்களின் பரிபூரணமான அருள் கிடைக்கும் என்றும், பணவரவிற்கு எந்தவித தடைகளும் இருக்காது என்றும் கூறப்படுகிறது.

இதையும் படிக்கலாமே: சொல்வாக்கு செல்வாக்கு உயர சுக்கிரன் திலகம்

பணவரவை அதிகரிப்பதற்குரிய முயற்சிகளை செய்வதோடு அஷ்டலஷ்மிகளை நினைத்து இந்த பரிகாரத்தை செய்பவர்களுக்கு அஷ்டலட்சுமிகளின் அருளால் அனைத்து விதமான செல்வங்களும் வந்து சேரும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்