ஒருவருக்கு வரவேண்டிய பணம் வராமல் தள்ளிப் போய்க் கொண்டே இருக்கிறது அல்லது தடைகள் ஏற்பட்டு கொண்டே இருக்கிறது, அந்த பணம் வந்தால் அவர்களுக்கு மிகவும் பெரிய அளவில் உதவிகரமாக இருக்கும் என்ற சூழ்நிலையும் இருக்கிறது. அந்த சூழ்நிலையை சரி பண்ணவும் வரவேண்டிய பணம் விரைவில் வந்து சேரவும் மகாலட்சுமி தாயாரை நாம் வழிபாடு செய்யும்பொழுது வைக்க வேண்டிய நெய்வேத்தியத்தை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
பண வரவை அதிகரிக்க உதவும் நெய்வேத்தியம்
பணவரவு என்றதும் நம் நினைவிற்கு வரக்கூடிய தெய்வம் மகாலட்சுமி தாயார் தான். மகாலட்சுமி தாயாரை வழிபடுபவர்களுக்கு பணவரவில் இருக்கக்கூடிய தடைகள் நீங்கும் என்று கூறப்படுகிறது. மகாலட்சுமி தாயாரை பல வழிகளில் நாம் வழிபடலாம். பல விதங்களில் மகாலட்சுமி தாயாருக்குரிய பூஜைகளையும் நாம் மேற்கொள்வோம். எப்படி நாம் வழிபட்டாலும் எந்த பூஜையை நாம் செய்தாலும் மகாலட்சுமி தாயாருக்கு என்று ஏதாவது ஒரு பொருளை நெய்வேத்தியமாக வைத்து செய்வோம். அப்படி வைக்கக்கூடிய நெய்வேத்தியத்தினாலும் நமக்கு பணவரவு அதிகரிக்க வேண்டும். அப்படி பணவரவை அதிகரிக்க கூடிய நெய்வேத்தியத்தை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் பார்க்கப் போகிறோம்.
பொதுவாக மகாலட்சுமி தாயாரை வழிபாடு செய்ய வேண்டும் என்று நினைத்தவுடன் வெள்ளிக்கிழமை செய்ய வேண்டும் என்றுதான் பலரும் நினைப்பார்கள். அப்பொழுது வெள்ளிக்கிழமை மட்டும் பணம் வந்தால் போதுமா? மற்ற நாட்களில் பணம் வர வேண்டாமா? எல்லா நாட்களிலும் பணவரவு என்பது இருக்க வேண்டும். அதனால் எல்லா நாட்களிலும் மஹாலஷ்மி தாயாரை நாம் வழிபாடு செய்ய வேண்டும்.
பெரிதாக ஒன்றுமே செய்ய வேண்டியது இல்லை. மகாலட்சுமி தாயாருக்கு என்று ஒரு நெய் தீபத்தை தனியாக மகாலட்சுமியின் பெயரைச் சொல்லி ஏற்றுக் கொள்ளுங்கள். மகாலட்சுமி தாயாருக்கு வாசனை மிகுந்த மலர்களை வைத்துக் கொள்ளுங்கள். மலர்கள் வைக்க இயலவில்லை என்றாலும் பரவாயில்லை மகாலட்சுமி தாயார் உடைய மந்திரங்களையோ, பாடல்களையோ பாடி இன்றைய பொழுது எனக்கு வர வேண்டிய பண வரவு நல்லபடியாக வந்து சேர வேண்டும் என்று மனதார வேண்டிக் கொள்ளுங்கள்.
இப்படி வேண்டும்பொழுது மகாலட்சுமி தாயாருக்கு என்று நெய்வேத்தியம் வைக்க வேண்டும். அப்படி வைக்கக்கூடிய நெய்வேத்தியம் வாழைப்பழமும் வெள்ளமும் தான். ஒரு வாழைப்பழத்தை எடுத்து கிண்ணத்தில் போட்டு அதனுடன் வெள்ளத்தை நன்றாக இடித்து சேர்த்து நம்முடைய கைகளால் அதை பிணைந்து மகாலட்சுமி தாயாருக்கு நெய்வேத்தியம் வைக்க வேண்டும்.
இப்படி நாம் நெய்வேத்தியம் வைத்து மகாலட்சுமி தாயாரை வழிபாடு செய்யும்பொழுது வரவேண்டிய பணம் விரைவிலேயே வந்து சேரும். பணவரவில் இருக்கக்கூடிய தடைகள் நீங்கும். இந்த வழிபாட்டை செய்யும் பொழுது கனகதாரா ஸ்தோத்திரத்தை படிப்பது என்பது மிகவும் சிறப்புக்குரியதாகவே திகழ்கிறது. தொடர்ந்து 48 நாட்கள் காலையிலே, மாலையிலோ அல்லது இரண்டு வேளையும் மகாலட்சுமி தாயாருக்கு தீபம் ஏற்றி வைத்து நெய்வேத்தியத்தையும் வைத்து கனகதாரா ஸ்தோத்திரத்தை மனதார கூறவே படிக்க வேண்டும். இப்படி படித்து முடித்த பிறகு கற்பூர தீப தூப ஆராதனை காட்டி வழிபாட்டை நிறைவு செய்து விட வேண்டும்.
இந்த முறையில் தொடர்ந்து 48 நாட்கள் மனதார செய்பவர்களுக்கு அவர்களுடைய வாழ்க்கையில் இருக்கக் கூடிய பணக்கஷ்டம் அனைத்தும் நீங்கும். எதிர்பார்த்த பணவரவு ஏற்படும். பணவரவிற்கு உரிய வாய்ப்புகள் அவர்களை தேடி வரும்.
இதையும் படிக்கலாமே:குரு பகவானை வசியம் செய்யும் திலகம்
மிகவும் எளிமையான இந்த மகாலட்சுமி தாயாரின் வழிபாட்டையும் நெய்வேத்தியத்தையும் தினமும் செய்பவர்களுக்கு பண வரவு ஏற்பட்டு அனைத்து விதமான நன்மைகளும் உண்டாகும் என்று கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.