வீட்டில் பண புழக்கம் அதிகரிக்க குபேர பொம்மையை எந்த திசையில் வைக்க வேண்டும்? எந்த திசையில் வைக்க கூடாது? என்பதை அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும்

kuberan
- Advertisement -

சாதாரணமாக அனைத்து வீடுகளிலும் குபேரன் சிலையை நிச்சயமாக வைத்திருப்பார்கள். பணப்புழக்கத்தை அதிகரிக்க, செல்வ வளத்தை நம்மிடம் ஈர்க்க இந்த குபேர பொம்மையை பூஜை அறையிலோ அல்லது வீட்டின் பொதுவான இடங்களிலோ வைத்திருப்பதை நம்மால் பார்க்க முடியும். இப்படி குபேர பொம்மையை அனைவரும் வீட்டில் வைத்து இருப்பதற்கு முக்கிய காரணம் அனைத்து தெய்வங்களின் செல்வங்களுக்கெல்லாம் பாதுகாவலர் இந்த குபேரன் தான். இவரின் பாதுகாப்பில் இருக்கும் செல்வங்கள் பலமடங்கு பெருகி கொண்டே செல்லும். இவ்வாறு செல்வத்தின் அதிபதி குபேரர் ஆவார். எனவே இவரின் சிலையையோ அல்லது பொம்மையையும் வீட்டில் எந்த திசையில் வைத்தால் அதிர்ஷ்டம் உண்டாகும் என்றும், எந்த திசையில் வைக்க கூடாது என்பதை பற்றியும் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

kubera-hundi

ஒரு சிலர் குபேர பொம்மையை தங்கள் வீட்டில் வைக்கலாமா? கூடாதா? என்பது தெரியாமலேயே மற்றவர் வீட்டில் இருப்பதைப் பார்த்து தானும் வாங்கி வந்து தனது வீட்டில் வைத்துக் கொள்வார்கள். அவர்களுக்கு நமது வீட்டில் இதனை வைத்துக் கொள்வது சரியா? தவறா? என்ற சந்தேகமும் தோன்றிக் கொண்டிருக்கும். இவ்வாறு குபேர பொம்மையை எவர் வேண்டுமானாலும் வாங்கி வைத்துக் கொள்வது எந்த வித எதிர்வினையும் தந்துவிடாது. பணப்புழக்கம் அதிகரிக்க வேண்டும், தன யோகம் கிடைக்க வேண்டும் என்று நினைக்கும் அனைவரும் தங்கள் வீடு அல்லது தொழில் செய்யும் இடங்களில் குபேர பொம்மையை வாங்கி வைத்துக்கொள்ளலாம்.

- Advertisement -

ஆனால் இவ்வாறு குபேர பொம்மையை வாங்கும் பொழுது கவனமாக இருக்க வேண்டும். அதன் வடிவத்தை பார்த்து வாங்க வேண்டும். பலவித வடிவங்களில் இருக்கும் குபேர பொம்மையை அப்படியே அதன் பலன் தெரியாமல் வாங்கி வரக்கூடாது. அதுமட்டுமல்லாமல் குபேர பொம்மையை வைக்கும் திசையை சரியாக அறிந்து, தெரிந்து அதன் பிறகு வைக்க வேண்டும். எங்கு வேண்டுமானாலும் அதனை வைத்து விடக்கூடாது.

kuberan

குபேரர் சிலையை வாங்கும்பொழுது தோளில் பண மூட்டையுடன் அமர்ந்துகொண்டு, வாய் நிறைய சிரிப்புடன் இருக்கும் குபேரரை வாங்கி வந்து வீட்டின் வடகிழக்கு திசையில் வைத்து அது தென்மேற்கு திசையை பார்க்கமாறு இருக்க வேண்டும். இவ்வாறு சரியான திசையில் வைக்க முடியாதவர்கள் குபேரர் பொம்மை வீட்டின் வாசலை பார்த்து இருக்குமாறு வைத்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு வீட்டு வாசலை நோக்கி குபேரன் பொம்மையை வைப்பதால் மகாலட்சுமி தேவி வீட்டிற்குள் எளிதாக வந்து விடுவார்.

- Advertisement -

நின்று கொண்டிருக்கும் குபேரர் பொம்மையை பணம் பரிவர்த்தனை நடக்கும் இடங்கள், தொழில் செய்யும் இடங்கள் என பணப்புழக்கம் அதிகமாக இருக்கும் இடங்களில் வைத்துக் கொள்ளலாம். இதன் மூலம் நாம் பணத்தை மற்றவர்கள் கையில் கொடுக்கும் பொழுது அந்த பணம் மீண்டும் நமது கையிலே திரும்பி வருவதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கிறது.

kubera

அதுபோல கைகளை மேலே தூக்கி நின்று கொண்டிருக்கும் குபேர பொம்மையை சமயலறையில் வைத்துக்கொள்வது மிகவும் சிறப்பு வாய்ந்ததாக இருக்கும். நமது வீட்டில் எப்போதும் தானிய வகைகளுக்கு குறைவில்லாமல் இருக்கும். இவ்வாறு குபேர பொம்மைகளை வீட்டில் எந்த அறையில் வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம். ஆனால் அதனை வைக்கும் திசையை மட்டும் கவனமாக பார்த்து வைக்க வேண்டும். அவ்வாறு செய்தால் மட்டுமே அதற்கான சிறந்த பலனை பெற முடியும்.

- Advertisement -